அதி உயர் பாதுகாப்பு வலயங்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கத் தயாராகும் தரப்புகள்

Published By: Digital Desk 4

25 Sep, 2022 | 10:06 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

ஜனாதிபதியின் கையொப்பத்துடன் பல இடங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானிக்கு எதிராக வழக்கு தொடுக்க பல தரப்பினரும் தயாராகி வருகின்றனர்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பலர், உயர் நீதிமன்றில் வழக்கு தொடுக்க இவ்வாறு தயாராகி வருகின்றனர்.

பெரும்பாலான இடங்களை அதி உயர் பாதுாப்பு வலயங்களாக அறிவிப்பதற்கு அரச இரகசியங்கள் சட்டத்தில் அமைச்சருக்கு அதிகாரங்கள் இல்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

1955 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க அரச இரகசியங்கள் சட்டத்தின் 2 ஆம் அத்தியாயத்தின்  கீழ் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சரான ரணில் விக்ரமசிங்கவினால் கொழும்பின் பல பகுதிகள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமன்திரனும் உடர் நீதிமன்றை நாடப் போவதாக எச்சரித்துள்ளார். ஜனாதிபதியின் வர்த்தமானி சட்டத்துக்கு முரண் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 இதனைவிட, பல சமூகப்செயற்பாட்டாளர்களும் வழக்கு தொடுக்க தயாராகி வருகின்றனர்.

ஜனாதிபதியின் இந்த உத்தரவின் மூலம் பொலிஸ் மா அதிபர் மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபரின் அனுமதியின்றி அவ்வாறான இடங்களில் கூட்டங்களை நடத்துவதற்கு மற்றும் பேரணிகளை முன்னெடுப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

அரச இரகசியங்கள் சட்டத்தின் இரண்டாம் சரத்தின் பிரகாரம், ஏதேனும் ஒரு இடத்தை, கட்டடத்தை, கப்பலை அல்லது விமானத்தை தடை செய்யப்பட்ட இடமாக அறிவிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சருக்கு அதிகாரமுள்ளது எனக் கூறும் சட்டத்தரணிகள் சங்கம் விசாலமான ஒரு பிரதேசத்தை அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்த அமைச்சருக்கு அதிகாரம் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளது. வேறு நோக்கங்களுக்காக இரண்டாம் சரத்தின் கீழ் உத்தரவிட முடியாது எனவும் சங்கம் கூறுகின்றது.

அந்த உத்தரவை மீறும் நபர்களை தடுத்து வைக்க முடியும் என்பதனால், மக்களின் கருத்து தெரிவிக்கும் சுதந்திரம், அமைதியாக ஒன்றுகூடல் என்பவற்றை மீறும் செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் இது குறித்து இலங்கை மக்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்குள்ள உரிமை முக்கியமானது எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரச இரகசியங்கள் சட்டத்தின் கீழ், அதி உயர் பாதுகாப்பு வலயங்களை அறிவிக்கும் ஒழுங்குமுறை தொடர்பில் உன்னிப்பாக சிந்தித்து, மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கான சட்ட நடவடிக்கை எடுப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20