மோட்டார் சைக்கிள் ஒன்றை பதிவுசெய்து தருவதாக கூறி 15 ஆயிரம் ரூபா லஞ்சமாக பெற்ற தரகர்  ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் போக்குவரத்து ஆணையர் அலுவலகத்துக்கு முன்பாக கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர் ஹொரண, வேகட பிரதேசத்தினைச் சேர்ந்தவரென தெரிவிக்கப்படுகின்றது.