தேசிய இனப்பிரச்சனைகளுக்கு தீர்வுகாணாமல் தேசிய பேரவையில் இணையப்போவதில்லை - தமிழ் தேசிய கூட்டமைப்பு

Published By: Digital Desk 5

25 Sep, 2022 | 09:50 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

தமிழ் தேசிய இனப் பிரச்சினைகளுக்கான தீர்வினை அரசாங்கம் உடன் முன்வைக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் தேசிய இனப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் தேசிய பேரவையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணையப் போவதில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ,தேசிய பேரவையில்  அங்கம் வகிப்பது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

அரசாங்கத்தின் தேசியபேரவையில் பேரவையில் நாங்கள் இணைந்து கொள்ள போவதில்லை. மேலும் தேசிய சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணையாதுஎன்பதனை பாராளுமன்றம், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறோம். 

தமிழ் தேசிய இனப் பிரச்சினைகளுக்கு தீர்வு என்னவென்று முன்வைக்காமல் அரசாங்கம் இந்த தேசிய பேரவை எனும் போர்வையில் அமைக்கப்படும் சபையில் நாம் இணைந்து கொள்ளமாட்டோம். அதில் எமக்கு எந்தவித உடன்பாடும்  இல்லை.

முதலில் அரசாங்கம் தமிழ் தேசிய பிரச்சினைகளுக்கு  தீர்வு என்னவென்று உடன் வெளிப்படுத்த வேண்டும்.  அதன் பின்னர் நாங்கள் தேசிய பேரவையில் இணைவதா?   இல்லையா என்பது தொடர்பில் கலந்தாலோசிப்போம்.

அத்துடன் இன்றைக்கு இந்த அரசாங்கத்தை நடத்துவது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனை யாகும். அவர்களுடைய அமைச்சரவை தான் தற்போது ஆட்சியில் இருக்கிறது.

எதிர்காலத்தில் நாட்டின் தீர்மானங்களை பெரமுன கட்சியே மேற்கொள்ளும். ஆகவே தேசிய பேரவை என்று கூறிக் கொண்டு உருவாக்கப்படும் சபையில் அங்கம் வகிப்பது எதுவித பயனும் கிடையாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44