உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து புலமைப்பரிசில்

Published By: Vishnu

25 Sep, 2022 | 04:44 PM
image

கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் முதற் தடவையிலேயே சித்தியடைந்து க.பொ.த உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்ற  மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து புலமைப்பரிசில் பெற்றுக் கொடுக்கும் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கமைய புலமைப்பரிசில் பெறுவதற்காக ஒரு கல்வி வலயத்திலிருந்து தகுதியுடைய 30 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அதன்படி நாடு முழுவதுமுள்ள 99 கல்வி வலயங்களின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் 2970 மாணவர்களுக்கு இப்புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது.

புலமைப்பரிசில் வழங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு, அவர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் வரை மாதாந்தம் 5,000 ரூபா வீதம் ஆகக்கூடியது 24 மாதங்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வருட க.பொ.த சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி க.பொ.த உயர்தர கல்வியாண்டு ஆரம்பிக்கப்பட்டதும் இந்த புலமைப்பரிசில் வழங்குவதற்கான விண்ணப்பங்களை கோரும் வகையில் பத்திரிகைகளில்  விளம்பரங்கள் வெளியிடப்படும்.

 இது தொடர்பாக மாகாண பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள்   மற்றும் அதிபர்களுக்கு துரிதமாக   அறிவிக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதியின் செயலாளர் சமன்  ஏக்கநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45