தன்னை விட தனது மனைவி மைத்திரி விக்ரமசிங்கவின் மாதாந்த சம்பளப்பணம் அதிகம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்த சம்பள உயர்வு முன்மொழிவு தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட வாகனங்களை தங்களது தொகுதி வேலைகளுக்கு பயன்படுத்துவதற்கு எந்தவித ஆட்சேபனைகள் இல்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.