பைஸ்

நாட்டில் கடந்த பல மாதங்­க­ளாக பிர­ப­லங்கள் கைது செய்­யப்­படுவதும் விவக்­க­ம­றி­யலில் வைக்­கப்­ப­டு­வதும் வழக்­க­மா­கி­விட்­டன. எப்.சி.ஐ.டி. யிடம் வாக்­கு­மூ­­ல­ம­ளிக்­கிறார் என்று ஒரு தக­வல் வரும். சில மணி நேரங்­களில் அவர் கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் மேலும் சில மணி நேரங்­களில் அவர் விள­க்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­ட­தா­கவும் செய்­திகள் வெளியாகும். ஆரம்­பத்­தில் இந்தக் கைதுகள் பரப்­பாகப் பேசப்­பட்­டாலும் பின்னர் வழக்­க­மா­கி­விட்­டன. இன்றைய நிலை­யில் இது பற்றி மக்கள் அவ்­வ­ள­வாக அலட்டிக் கொள்­வதும் இல்லை. 

ஆனால் இந்த வாரம் இடம்­பெற்ற இரு கைதுகள் சற்று வித்­தி­யா­ச­மா­னவை. வழக்­கத்­துக்கு மாறாக மக்கள் மத்­தியில் அதிகம் பேசப்­பட்ட, கவ­னக்­கு­வி­ப்பைப் பெற்­ற­வை­யாக இந்தக் கைதுகள் அமைந்­து­விட்­டன. அதற்குக் காரணம் இவர்கள் இரு­வரும் வெறுப்புப் பேச்சு அல்­லது நாட்டின் நல்­லி­ணக்­கத்­து­க்கு குந்­தகம் விளை­வித்­தார்கள் என்ற குற்­றச்­சா­ட்டின் கீழ் கைதா­ன­மை­யே ஆகும்.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பகி­ரங்­க­மாக , மோச­மா­ன கருத்துக்க­ளை வெளியிட்டு அச்­சு­றுத்­திய டான் பிரி­யசாத் என்­பவர் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை கைது செய்­யப்­பட்டார். அதே­போன்று ஞான­சார தேர­ரை விமர்­சித்து கருத்து வெளியிட்ட ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமா­அத்தின் பொதுச் செய­லாளர் அப்துர் ராஸிக் கடந்­த வியா­ழக்­கி­ழமை கைதா­னார்.

டான் பிரி­யசாத்  கைது

டான் பிரி­யசாத் என்­பவர் இலங்­கையின் இன­வாதக் களத்தில் புதி­­தாக பிர­வே­சித்­த­வர்தான். கடந்த காலங்­களில் பல்­வேறு குற்­றச் செயல்­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வ­ராகக் கரு­தப்­பட்ட இவர் இரு வாரங்­க­ளுக்கு முன்னர் தௌஹீத் ஜமாஅத் அமைப்பு கொழும்பில் ஆர்ப்­பாட்டம் ஒன்றை நடாத்­திய சமயம் அதற்கு எதி­ராக தன்­னுடன் சில பௌத்த இளை­ஞர்­களை அழைத்துக் கொண்டு வந்து கோட்டே ரயில் நிலையம் முன்­பாக ஆர்ப்­பாட்டம் ஒன்றை நடத்­தி­யி­ருந்தார். இதன் போது அவர் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக மிக மோச­மான கருத்­துக்­களை வெளியிட்­ட­துடன் ''முஸ்­லிம்­களை கொல்­வோம். நாட்டை விட்டே விரட்­டி­ய­டிப்­போம்'' என்­றெல்லாம் குறிப்­பிட்­டி­ருந்­­தார்.

இந் நிலை­யில்தான் இவரைக் கைது செய்ய வேண்டும் என பல­மாக கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்­டன. இந்த விடயம் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் மூலமாக பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவின் கவ­னத்­திற்குக் கொண்டு செல்­லப்­பட்­டது. குறித்த டான் பிரி­யசாத் என்ற நபரை கைது செய்­வ­தற்­காக நட­வ­டிக்­கை­­களை எடுக்­கு­மாறு பிர­தமர் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­னா­யக்­க­வுக்கு ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்தார். பிர­தமர் இவ்­வாறு அறி­வு­றுத்­தி­ய முதல் மூன்று நாட்­க­ளுக்குள் குறித்த நபர் கைதா­க­வில்­லை.

இந் நிலை­யி­ல்தான் முஸ்லிம் அமைச்­சர்­களும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் தொடர்ந்தும் தமது அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­தி வந்த நிலையில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் முஸ்லிம் எம்.பி.க்கள் சிலர் அமை­ச்சர் சாகல ரத்­னாயக்க மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­தர ஆகி­யோரைச் சந்­தித்து டான் பிரி­யசாத் கைது செய்­யப்பட வேண்­டி­யதன் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­தினர். 

அத்­துடன் குறித்த நபரின் கடந்த கால குற்றச் செயல்கள் தொடர்­பான ஆதா­ரங்­க­ளையும் சமர்ப்­பித்­த­­னர். இதே­ சந்­தர்ப்­பத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­­ரி­பால சிறி­சே­னவும் பொலிஸ் மா அதி­பரைத் தொடர்பு கொண்டு சம்­பந்­தப்­பட்ட நபரை கைது செய்­யு­மாறு உத்த­ரவு பிறப்­பித்­தி­­ருந்­தார். இத­னை­ய­­டுத்தே அவர் அன்று பிற்­பகல் கைது செய்­ய­ப்­பட்டார்.

வெல்­லம்­பிட்­டிய பகு­தியைச் சேர்ந்த தெமட்­ட­கொட சுதேஷ் பிரி­யசாத் அல்­லது டான் பிரி­யசாத் என்ற இந்த நபர் வெறுப்­பூட்டும் பேச்­சுக்கள் மற்றும் இன­வாத நட­வ­டிக்­கையில் ஈடு­பட்டார் எனும் குற்றச்சாட்டின் கீழ்  வெல்­லம்­பிட்டி பொலிசார் மூல­மாக கோட்டை பொலிஸ் நிலை­யத்­துக்கு வர­வ­ழைக்­கப்­பட்டு, கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதி­கா­ரி­களின் வழி நடத்­தலில் முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களின் பின்னர்  கைது செய்­ய­ப்­பட்டு கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன முன்­னி­லையில் அன்று மாலை ஆஜர் செய்­யப்­பட்டார். அவரை  எதிர்­வரும் 25 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­தரவு பிறப்­பித்தார்.

அத்­துடன்  '' பெளத்த மதத்­துக்கு அவ­மானம் ஏற்­படும் வண்ணமும் மனித குலத்­துக்கே ஆபத்தை ஏற்­ப­டுத்தும் வண்ணம் செயற்­பட்­டுள்­ளீர்'' என இதன்­போது நீதவான் டான் பிரி­ய­சாத்தை கடு­மை­யாக எச்­ச­ரித்தார். 

ஞான­சார தேரர்

டான் பிரி­யசாத் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாதக் கருத்­துக்­களை வெளியிட்­டதைத் தொடர்ந்து சமூக வலைத்­த­ளங்களில் பிர­ப­ல­மாகப் பேசப்­பட்டார். பெரும்­பான்மை இன­வா­திகள் மத்­தியில் அவர் ஒரு ஹீரோ­வாக பார்க்­க­ப்­பட்­டார். 'சிங்­கள மக்­களை மீட்க வந்த மீட்­பர்' என்று பலர் இவருக்­கு புக­ழா­ரம் சூட்­டினர். 

இவ்­வா­றான ஒரு நபர் கைது செய்­யப்­பட்­டமை இன­வாத சக்­தி­களை ஆத்­தி­ர­மூட்­டி­யதில் ஆச்­ச­ரி­ய­மில்­லைத்தான்.  இதன் வெளிப்­பா­டாகத்தான் பொது பல சேனா அமைப்பின் செய­லா­ளர் ஞான­சார தேரர் தனது வழக்­க­மான பாணியில் மீண்டும் வெறுப்­பு­ணர்வைக் கக்­கி­னார்.

டான் பிரி­யசாத் கைது செய்ய­ப்­பட்ட அதே தினம் இரவு வேளை ஞான­சார தேரர் இந்­தி­யா­வி­லி­ருந்து நாடு திரும்­பினார். விமான நிலை­­யத்தில் வைத்து ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளியிட்ட அவர்  டான் பிரி­ய­சாத்தின் கைதை கண்­டித்­த­துடன் '' என்னை விமர்­சித்த தௌஹீத் ஜமா­அத்தின் செய­லாளர் அப்துர் ரா­ஸிக்­கையும் கைது செய்ய வேண்டும். இன்றேல் படை­யணி ஒன்றைத் திரட்டி வந்து தாக்­குதல் நடாத்­து­வோம். 100 முதல் 200 இளை­ஞர்­க­ள் தமது உயிர்­களை மாய்த்துக் கொள்­ளவும் தயா­ராக இருக்­கி­றார்கள்'' எனக் குறிப்­பிட்டார். இதே கருத்­தையே டான் பிரி­ய­சசாத்தின் வசிப்­பி­டத்­திற்குச் சென்றும் ஞாச­னார தேரர் கூறி­யி­ருந்­தார்.

இதே தினம் பொது­ப­ல­சேனா அமைப்பின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் டிலந்த விதா­னகேயும்  அப்துர் ராஸிக்கை கைது செய்யக் கோரி மாளி­கா­வத்தை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பா­டொன்றைச் செய்­தி­ருந்தார். 

இதற்­கி­டையில் முன்னாள் மத்­திய மாகாண சபை உறுப்­பினர் அசாத் சாலி பொலிஸ் மா அதி­ப­ருக்கு முறைப்­பாடு ஒன்றைக் கைய­ளி­த்தார். அதில் வெறுப்­பு­ணர்­­வுப் பேச்சில் ஈடு­பட்ட டான் பிரி­யசாத் , மட்­டக்­க­ளப்பு மங்­க­ளா­ரா­மய விகா­ராதி­பதி அம்­பிட்­டியே சுமண தேரர்  மற்றும் தௌஹீத் ஜமாஅத் செய­லாளர் அப்துர் ராஸிக் ஆகியோர் கைது செய்­யப்­பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்­தி­ருந்­தார்.

அப்துர் ராஸிக் கைது

இவ்­வா­றா­ன நிகழ்­வு­களின் பின்­ன­ணி­யில்தான் டான் பிரி­யசாத் கைது செய்­யப்­பட்ட மறுநாள் அப்­ததுர் ராஸிக் மாளி­கா­வத்தை பொலி­சாரால் கைது செய்­யப்­பட்­டார்.

பெளத்த மக்­களை கோபப்­ப­டுத்தும் வித­மாக கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்தி சிங்­கள –- முஸ்லிம் சமூ­கங்­க­ளி­டையே  மோதலை ஏற்­ப­டுத்த முயன்றார் எனும் குற்­றச்­சாட்டின் கீழேயே ஸ்ரீலங்கா தெளஹீத் ஜமா­அத்தின் செய­லாளர் அப்துர் ராஸிக் மாளி­கா­வத்தை பொலி­ஸா­ரினால்   கைது செய்­யப்­பட்டார்.

மாளி­கா­வத்தை பொலிஸ் நிலை­யத்­திற்கு அழைக்­கப்­பட்ட அப்துர் ராஸிக்­கிடம் அங்கு நீண்ட விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. இத­னை­ய­டுத்து சிங்­கள –- முஸ்லிம் சமூ­கங்­க­ளி­டையே மோதலைத் தூண்டும் வண்­ணமும் பெளத்த பக்­தர்கள் ஒரு தொகு­தி­யி­னரின்  மதிப்­புக்­கு­ரிய மத­கு­ரு­மார்­களை இழி­வாகப் பேசி  கருத்­துக்­களை வெளி­யிட்டார் எனும் குற்­றச்­சாட்டின் கீழ் அவர் கைது செய்­யப்­பட்டார். 

கைது செய்­யப்­பட்ட அப்துர் ராஸிக் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் ஊடாக கொழும்பு மேல­திக நீதிவான் சந்­தன கலங்­சூ­ரிய முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்டார்.  

ஏற்­க­னவே சில மாதங்­க­ளுக்கு முன்னர் மத நிந்­தனை குற்­றச்­சாட்டின் கீழ் கைது செய்­யப்­பட்­­டி­ருந்த அப்துர் ராஸிக் கடும் நிபந்­த­னை­க­ளுடன் பிணையில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்தார். மேற்­படி பிணை நிபந்­த­னை­களை அவர் மீறி­ய­தா­கவும் மன்றில் சட்­டத்­த­ர­ணி­களால் சுட்­டிக்­காட்­டப்­பட்­ட­து. இத­னை­யடுத்து சந்­தேக நபரை எதிர்­வரும் 29 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்டார்.

அப்துர் ராஸிக்கை கைது செய்­யா­விட்­டால் கல­வரம் வெடிக்கும் என ஞானா­சர தேரர் எச்­ச­ரிக்கை விடுத்த 24 மணி நேரத்­தினுள் இந்தக் கைது இடம்­பெற்­ற­மையும் இங்கு கவ­­னிக்கத்­தக்­க­தா­கும்.

மட்­டக்­க­ளப்பு தேரர்

கொழும்பில் இவ்­வா­றா­ன கருத்து மோதல்கள் மற்றும் கைதுகள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கி­ன்ற நிலையில் மட்டக்­க­ளப்பு மங்­க­ளா­ரா­மய விகா­ரா­தி­பதி அம்பிட்­டியே சுமண தேரரின் நட­வ­டிக்­கைகள் கட்­டுக்­க­டங்­­காமல் செல்­வது குறித்தும் பலரும் தமது அதி­ருப்­தியை வெளியிட்டு வரு­கின்­ற­னர்.

குறிப்­பா­க அமைச்சர் மனோ கணே­சன், கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் நஸீர் அக­மட், தமிசூ் தேசியக் கூட்­ட­மைப்பின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற மற்றும் மாகாண சபை உறுப்­பி­னர்கள் என பலரும் தமது கண்­ட­னத்தை வெ ளியிட்­ட­துடன் அவரை கைது செய்ய வேண்டும் எனவும் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். எனினும் இப் பத்தி எழு­தப்­படும் வரை அவ­ருக்கு எதி­ராக எந்­த­வித சட்ட நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை என்­பது கவ­லைக்­கு­ரி­ய­­தா­கும்.

குறித்த தேரரால் அச்­சு­றுத்­தப்­பட்ட மட்­டக்­க­ளப்பு மாவட்ட கிராம சேவை­யாளர் நேற்று முன்­தினம் கொழும்பில் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவில் முறைப்­பாடு ஒன்றைச் செய்­துள்­ள­­மையும் இங்கு குறிப்­பி­டத்­தக்­க­­தா­கும்.

சிவில் சமூ­கத்தின் கவ­லை

மேற்­படி சம்­ப­வங்கள் தொடர்பில் நாட்­டி­லுள்ள சிவில் சமூக அமைப்­பு­களும் சிவில் சமூக பிர­தி­நி­திகள் பலரும் இணைந்து தம­து கடு­மை­யான கண்­ட­னத்தை வெளியிட்­டுள்­ள­துடன் ஞான­சார தேர­ரையும் அம்­பிட்­டியே சுமண தேர­ரையும் கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

நேற்று முன்­தினம் திக­தி­யி­ட்டு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ர­வுக்கு 367 சிவில் சமூக பிர­தி­நி­திகள் கையொப்­ப­மிட்­டு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் பல்­வேறு முக்­கிய விட­யங்கள் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ள­ன.

'' எண்ணிக்கையிலே சிறுபான்மையினரான இன மற்றும் மொழியினர் மீது பௌத்த பிக்குவின் தலைமையிலே மேற்கொள்ளப்படும் வன்முறைத் தாக்குதல்களையிட்­டும் அரசின் தண்டிக்காத மெத்தனப்போக்கையிட்டும், பொலிஸார் அப்பட்டமாகவே செயற்படாதிருந்தமையையும் பற்றி நாம் சீற்றமடைந்திருக்கிறோம்.

 ஒருசில அல்லது பல பௌத்த பிக்குகளின் தலைமையின்கீழ் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் கவனத்திற் கொள்ளப்படாமல் விடப்படுகின்றமை கண்கூடு.  இருந்தும், இந்தப் பிக்குகளின் வெறுப்பான பேச்சுக்கள், இனத்துவேஷம் போன்றவை இலங்கைச் சட்டத்தைத் தெளிவாக மீறுவதாக இருந்துங்கூட, குற்றம் இழைத்த இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை எப்போதுமே தாக்கல் செயயப்படுவது கிடையாது.

ஞானசார தேரர்,  டான் பிரியசாத் என்பவரின் கைதுக்கு பதிலடியாக ஸ்ரீ லங்­­கா தௌஹீத் ஜமாஅத் செயலாளரான அப்துல் ராஸிக் என்பவரை '24 மணித்தியாலங்களுக்குள்' கைது செய்யும்படி அறைகூவல் விடுத்திருக்கிறார். அதைத் தொடர்ந்தே அப்துர் ராஸிக் மாளிகாவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமை  இந்தக் கைதும், அது இடம்பெற்ற துரித கதியும் 'சுயாதீன' நிறுவனமாகத் திகழவேண்டிய பொலிஸார் மீதும் கூட ஞானசார தேரரின் வார்த்தைகள் மகத்தான செல்வாக்குச் செலுத்துவதைப் புலப்படுத்துவதாக உள்­ள­து.

அந்த தேரர் மோசமன இனத்துவேஷ வார்த்தைகளையும் கீழ்த்தரமான மொழிநடையையும் பயன்படுத்தி, சீருடை தரித்த பொலிஸாரின் முன்னிலையிலே ஒரு தமிழ் அரச உத்தியோகத்தர் மீது வார்த்தைத் தாக்குதலை மேற்கொண்டார். அந்த அரச உத்தியோகத்தரைப் பாதுகாக்கவோ அல்லது அந்தப் பௌத்த பிக்குவைத் தடுக்கவோ அவசியமான எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்காமல் அந்தப் பொலீஸர் அங்கே நின்று அவதானித்துக்கொண்டு நின்றிருந்திருக்கிறார். 

அம்பிட்டிய சுமங்கல தேரர் தொடர்பான இந்த அண்மைய சம்பவமும் இதுமட்டுமல்ல.

 இதே பிக்கு பல்வேறு சம்பவங்களிலே ஈடுபட்டு இதேபோலவே கீழ்த்தரமான பேச்சிலும் வன்முறைத் தாக்கங்களிலும் ஈடுபட்டிருக்கிறார்.

இப்படியான இனத்துவேஷ காழ்ப்புணர்வுப் பேச்சுக்களை பகிரங்கமாகவும் வினைத்திறனுடனும் கண்டிக்கவோ அல்லது அப்படியான குற்றம் இழைத்தவர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கவோ விரும்பாமல் இருக்கும் அரசாங்கத்தின் அசமந்தப்போக்கினால் நாம் ஆழ்ந்த விரக்தியும் கோபமும் கொண்டுள்ளோம். பாரபட்சம் மற்றும் வெறுப்புப் பேச்சு ஆகியவை தொடர்பான சட்டங்களை மீறிய பௌத்த பிக்குகள் அடங்கலாக அனைவரையும் உடனடியாக நீதிமன்றத்திலே முன்னிலைப் படுத்துவதற்கு பொலிஸார் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் '' என அதில் ஆதா­ர­பூர்­வ­மாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ள­து. 

இக் கடி­தத்தில் இறு­தியில் மேற்­படி சிவில் சமூ­கத்­தி­னரால் பொலிஸ் மா அதி­ப­ரிடம் 5 முக்­கிய வேண்­டு­கோள்­­க­ளும் விடுக்­கப்­பட்­டுள்­ள­ன.

1) நவம்பர் 15, 2016 அன்று ஞானசார தேரர் விடுத்த கூற்றுகளுக்காக அவரை உடனடியாக கைது செய்க. 

2) மட்டக்களப்பு மங்களராமயவில் உள்ள அம்பிட்டிய சுமங்கல தேரரை உடனடியாகக் கைது செய்க.

3) இதர அனைத்து தீவிரக் குழுக்களையும் நபர்களையும் அவர்களது நடவடிக்கைகளையும் விசாரணை செய்து சட்டத்தின்கீழ் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

4) அளுத்கம சம்பவத்தை மீளச் செயற்படுத்துவது தொடர்பிலே ஞானசார தேரர் விடுத்த அச்சுறுத்தல் பற்றி ஸ்ரீ லங்­கா முஸ்லீம் கவுன்சில் செய்த புகாரின் பேரில் மேற்கொண்ட நடவடிக்கையின் நிலைமை தொடர்பிலே பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

5) எண்ணிக்கையளவிலே சிறுபான்மையினரான மொழியின மற்றும் சமயத்தவர்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சு மற்றும் வன்முறை அச்சுறுத்தல்களை மேற்கொண்டுவரும் குழுக்கள், குறிப்பாக  பௌத்த பிக்குகள் தொடர்பில் நட­வ­­டிக்கை எடுக்க  வேண்­டு­ம் ஆகி­ய விட­யங்கள் அதில் முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­ளன.

அர­சாங்கம் உஷார்

மேற்­படி சம்­ப­வங்கள் மற்றும் அதி­ருப்­திகளைய­டுத்து அர­சாங்­கத்தின் உயர் மட்டம் இப்­போ­தா­வது உஷா­ர­டைந்­தி­ருப்­பதை உணர முடி­கி­றது.  நேற்று முன்­தினம் நடை­பெற்ற பாது­காப்புச் சபைக் கூட்­டத்தின் பின்­ன­ரான விசேட கூட்­டத்தில் இந்த விட­யங்கள் விரி­வாக ஆரா­யப்­பட்­டுள்­ள­ன.

இதன்­போது இன­வா­தத்தை தூண்டும் செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­வோரை பார­பட்­ச­மின்றி கைது செய்து நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பொலிஸ் மா அதி­ப­­ருக்கு உத்­த­ர­விட்­டி­ருக்­கி­றார்.

நாட்டில் இன­வா­தத்தை விதைத்து அர­சாங்­கத்தை அசெ­ள­க­ரி­யத்­துக்கு உட்­ப­டுத்தும் மறை­முக நிகழ்ச்சி நிரல் ஒன்று  அமுல்படுத்­தப்­பட்டு வரு­வ­தாக புல­னாய்வுப் பிரி­வுக்கு தகவல் கிடைத்­துள்ளதாக­வும் இதன்­போது சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ள­து. 

குறித்த கூட்­டத்தில் அமைச்சர்களா­ன மனோ கணேசன், டி.எம்.சுவாமி நாதன், சாகல ரத்­நா­யக்க,  ரவூப் ஹகீம், ரிஷாட் பதி­யுதீன், சம்­பிக்க ரண­வக்க விஜே­தாச ராஜ­பக்ஷ பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவன் விஜே­வர்­தன மற்றும் முப்­ப­டைத் தள­ப­தி­களும் பங்­கேற்­றுள்­ளனர். 

தேவை உடனடி நட­வ­டிக்கை

அர­சாங்­கத்­தின் உயர்­மட்­டத்­தி­ன­ருக்­கு நாட்டில் நடை­பெ­று­­கின்ற விட­யங்கள் பற்றித் தெரி­யா­ம­லில்லை. அவ்­வா­றி­ருந்தும் இது­போன்ற இனவாத செயற்­பா­டு­களை வளர விட்­டு­விட்டு பின்னர் நட­வ­டிக்கை எடுப்­ப­தாக ஏன் பாசாங்கு செய்­கி­றார்கள் என்­ப­துதான் இங்கு எழுகின்ற கேள்­வி­யா­­கும்.

மக்கள் இந்த அர­சாங்­கத்தின் மீது நம்­பிக்கை இழப்­ப­தற்கு பல கார­ண­ங்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில் அதில் இன­வா­தமே பிர­தான அச்­சு­றுத்­த­லாக சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­ற­து. என­வேதான் அர­சாங்கம் பார­பட்­ச­மின்றி சட்­டத்தை நிலை நாட்ட வேண்டும். டான் பிரி­ய­சாத், அப்துர் ராஸிக் போன்று ஞான­சார தேர­ரையும் சுமண தேர­ரையும் கைது செய்ய வேண்டும். 

அத்­துடன் நிற்­காது இந்த சக்­தி­களின் பின்னால் இருப்­ப­வர்கள் யார்? அவர்­க­ளது நோக்கம் என்ன? என்­பது பற்­றி­யும் ஆராய்­ந்­த­றிய வேண்­டும்.  இந்த இன­வாதக் களத்தில் நமது கண்­க­ளுக்குத் தெரி­வ­தெல்லாம் வெறும் அம்­புகள்தான். அவற்றை எய்­த­வர்கள் யார் என்­பதைக் கண்­ட­றி­­வதே இன­வாதம் எனும் புற்று நோய்க்கு மருந்து செய்­­வ­தற்கு பேரு­­த­வி­யாக இருக்­கும்.