அரசாங்கத்தில் இணைந்த சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்க அவதானம் - ரோஹண லக்ஷ்மன் பியதாச

Published By: Digital Desk 5

24 Sep, 2022 | 02:01 PM
image

(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு தீர்மானத்தை மீறி அரசாங்கத்தில் இணைந்த உறுப்பினர்கள் அனைவரும் அவர்கள் வகித்த சகல பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.

கட்சி தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இவர்களை கட்சியிலிருந்து நீக்குவது தொடர்பில் மத்திய குழு தீர்மானிக்கும் என்று பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.

அதற்கமைய நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, லசந்த அழகியவண்ண, ரஞ்சித் சியம்பலாப்பிட்டி, ஜகத் புஷ்பகுமார, சாமர சம்பத் தசநாயக்க ஆகியோர் அவர்கள் வகித்த அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு இவர்கள் கட்சியின் மத்திய குழு அங்கத்துவத்திலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.

பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ள குறித்த உறுப்பினர்கள் கட்சியிலிருந்தும் நீக்கப்படுவார்களா என்று வினவியதற்கு பதிலளித்த பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச ,

மத்திய குழு தீர்மானத்தை மீறி செயற்பட்டமைக்காக ஒழுக்காற்று குழுவினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு இவர்கள் இவ்வாறு செயற்பட்டமை தொடர்பில் ஒழுக்காற்று குழுவில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான கால அவகாசமும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்திற்குள் அவர்கள் ஒழுக்காற்று குழுவில் முன்னிலையாகி உரிய காரணங்களை தெரிவிக்க வேண்டும்.

இவர்களால் தெரிவிக்கப்படும் காரணிகள் மத்திய குழுவில் மீளாய்வு செய்யப்படும். அதன் பின்னரே இவர்களை கட்சியிலிருந்து நீக்குவதா இல்லையா என்ற தீர்மானம் எடுக்கப்படும்.

விரைவில் சகல தொகுதி அமைப்பாளர்களையும் கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன சந்திக்கவுள்ளார். வெற்றிடம் ஏற்பட்டுள்ள தொகுதிகளுக்கு புதிய அமைப்பாளர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

உள்ளுராட்சி தேர்தலுக்காக இவர்களை தயார்படுத்துவதற்காகவே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் பெரும்பான்மை வெற்றியைப் பெற்றுக் கொள்வதே சுதந்திர கட்சியின் இலக்காகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21