முஸ்லிம் ,சிங்­கள பௌத்த அடிப்­ப­டை­வா­தங்­க­ளையோ அல்­லது வேறு எந்த அடிப்­ப­டை­வா­தங்­க­ளையோ நாட்டில் செயற்­ப­டுத்த எவ­ரா­வது முயற்­சிப்­பா­ராயின் அதற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது. 

மீண்­டு­மொரு இரத்­தக்­க­ளரி நிலைமையை உரு­வாக்க மேற்­கொள்ளும் முயற்­சி­களை முறி­ய­டிக்க பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தையும் நடை­  மு­றைப்­ப­டுத்த தயா­ரா­க­வி­ருக்கின் றோம் என்று புத்­த­சா­சன மற்றும் நீதி அமைச்சர் விஜேய­தாஸ ராஜ­பக் ஷ தெரி வித்தார். 

தற்­போது யாழ்ப்­பா­ணத்தில் ஆவா குழு இருக்­கி­றது. ஆவா குழு­வி­ன­ருக்கு விடு­தலைப் புலிகள் முத்­தி­ ரையை குத்த பார்க்­கின்­றனர். இவ்­வாறு புலி முத்­தி­ரையை குத்தி வடக்­  கி­லுள்ள அப்­பாவி தமிழ் மக்­களை புலி­க­ளாக காட்டி நாட்­டுக்கும் உல­குக்  கும் வேறு­பட்ட தோற்­றப்­பாட்டை ஏற்ப­டுத்தி நாட்டை சீர­ழி­வுக்­குள்­ளாக்க முயற்­சிக்­கப்­ப­டு­கி­றது எனவும் அவர் குறிப்பிட்டார். 

பாரா­ளு­மன்­றத்தில்  நேற்று வெள்ளிக்­கி­ழமை 2017ஆம் ஆண்­டுக்­கான வர­வு-­செ­ல­வுத்­திட்­டத்தின் இரண்­டா­வது வாசிப்பு மீதான ஆறா­வாது நாள் விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றுகையிலேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.  

அவர் மேலும் உரை­யாற்­று­கையில், இந்த நாட்டில் பிர­தான கட்­சிகள் இரண்டும் இணைந்து தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பை இயற்றும் நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்­துள்ளோம். இந்த நட­வ­டிக்­கைகள் தொடர்பில் குறிப்­பாக ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யினர் மக்­களை தவ­றாக வழி­ந­டத்தும் நிமித்தம் பாரிய பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.  

மகா­நா­யக்­கர்­களை சந்­திக்கச் சென்று திரும்பும் போது புதிய அர­சி­ய­ல­மைப்பின் மூலம் நாட்டின் ஒரு­மைப்­பாடு இல்­லாமல் போகும் பௌத்த மதத்­திற்கு முன்­னு­ரிமை கிடைப்­பது இல்­லாமல் போகும் என்று ஊட­கங்­க­ளுக்கு கருத்து கூறி நாட்டில் மக்கள் மத்­தியில் பெரும் குழப்ப நிலை­மையை ஏற்­ப­டுத்தும் திட்­ட­மிட்ட முன்­னெ­டுப்­புகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

ஒன்­று­பட்ட நாட்டில் அதி­கா­ரத்தை பகிர்ந்து கொண்டு நிர்­வாகம் செய்ய வேண்டும் என்று எதிர்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் மக்கள் மத்­தியில் தெரிவித்­தி­ருக்­கிறார். இந்த நாட்டில் பொறுப்­பு­மிக்க அர­சியல் கட்­சி­களும் அவ்வாறு தெரிவித்­தி­ருக்­கின்­றன. ஆகையால், இந்த நாட்டில் அவ்­வா­ற­ன­தொரு பிரச்­சினை ஏற்­ப­டு­வ­தற்­கான எந்த கார­ணமும் கிடை­யாது.

பௌத்­தத்­திற்கு முன்­னு­ரிமை

பௌத்த மதத்­திற்கு முன்­னு­ரி­மை­ய­ளிக்­கப்­பட வேண்டும் என்­பது 1978 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பில் போன்றே 1972 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்­பிலும் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளது. திடீ­ரென வந்த தொன்­றல்ல. 1815 ஆம் ஆண்டு மலை­நாட்டு ஒப்­பந்தம் ஏற்­ப­டுத்திக் கொள்­ளப்­பட்ட போது பித்­தா­னிய கால­னித்­துவ ஆட்­சி­யா­ளர்­க­ளுடன் ஏற்­ப­டுத்திக் கொள்­ளப்­பட்ட உடன்­ப­டிக்­கையின் அடிப்­படை சரத்­தொன்­றாகும்.  

இந்த நாட்டில் சிங்­கள, பௌத்த மக்­களே வாழ்­கின்­றனர் என்ற வகையில் அந்த சரத்து தொடர்பில் அச்சம், சந்­தே­க­மொன்றை ஏற்­ப­டுத்தி நாட்டில் ஸ்திர­மற்ற நிலை­யொன்றை ஏற்­ப­டுத்தும் முன்­னெ­டுப்­பொன்று காணப்­ப­டு­கி­றது. பௌத்­தர்­க­ளுக்கு இருக்கும் முன்­னு­ரி­மையை குறைத்து மதிப்­பிட முடி­யாது. அந்த உரி­மைகள் பாது­காக்­கப்­பட வேண்டும் என்று எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் தெரிவித்­தி­ருக்­கிறார்.

கிறிஸ்­தவ திருச்­ச­பையைச் சேர்ந்த கர்­தி­னாலும் பௌத்­தர்­களின் உரிமை பாது­காக்­கப்­பட வேண்டும் என்று தெரிவித்­துள்ளார். மற்­றைய தரப்பில் இருந்து இவ்­வா­றான கருத்­துக்கள் வெளியி­டப்­படும் போது அர­சாங்கம் என்ற வகையில் சிங்­கள பௌத்­தர்கள் மற்றும் ஏனைய மதத்­த­வர்­களின் உரி­மை­களை பாது­காக்கும் பொறுப்பும் கட­மைப்­பாடும் எமக்கும் இருக்க வேண்டும்.

முர­ணான கருத்­துக்கள்

அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபையின் வழிப்­ப­டுத்தும் குழு கூட்­டங்­க­ளுக்கு வரும் எதி­ரணி உறுப்­பி­னர்கள் அங்கு இந்த விட­யங்­க­ளுக்கு இணக்கம் தெரிவித்து சென்­று­விட்டு வெளியில் சென்று பீடா­தி­ப­தி­களை சந்­தித்து பௌத்த மதத்­துக்கு ஆபத்து இருக்­கின்­றது என்­கி­றார்கள். பௌத்­தத்தை பாது­காக்க வேண்டும் என்­கின்­றார்கள். இவ்­வாறு அவர்கள் முர­ணான கருத்­துக்­களை வெளியிடும் நிலை­மையே காணப்­ப­டு­கி­றது.

யுத்­தத்தை வெற்றி கொண்ட இரா­ணு­வத்­தி­னரை தேசிய அர­சாங்கம் வேட்­டை­யா­டு­வ­தாக எம்­மீது குற்­றச்­சாட்­டொன்­றுள்­ளது. நாட்டில் சட்­ட­மொன்று இருக்­கி­றது. இரா­ணு­வத்­தி­னரை நாம் மதிக்கும் அதே­நேரம், விடு­தலைப் புலிகள் அமைப்­பி­ன­ருக்கு உதவி புரிந்­த­மைக்­காக மற்றும் உளவு பார்த்­த­மைக்­கா­கவே சட்ட நட­வ­டிக்­கை­களின் பிர­காரம் சில இரா­ணு­வத்­தினர் தண்­டனை பெற்­றுள்­ளார்கள். தவ­றி­ழைத்தால் அவர்­களும் சட்ட நட­வ­டிக்­கைக்கு உட்­பட்டே ஆக வேண்டும்.

ஆவா குழு

தற்­போது யாழ்ப்­பா­ணத்தில் ஆவா குழு இருக்­கி­றது. ஆவா குழு­வி­ன­ருக்கு விடு­தலைப் புலிகள் முத்­தி­ரையை குத்த பார்க்­கின்­றனர். இவ்­வாறு புலி முத்­தி­ரையை குத்தி வடக்­கி­லுள்ள அப்­பாவி தமிழ் மக்­களை புலி­க­ளாக காட்டி நாட்­டுக்கும் உலக்­குக்கும் வேறு­பட்ட தோற்­றப்­பாட்டை ஏற்­ப­டுத்தி நாட்டை சீர­ழி­வுக்­குள்­ளாக்க முயற்­சிக்­கப்­ப­டு­கி­றது.

ஆவா குழு பற்றி எமக்கு தெரியும். அது பற்­றிய தக­வல்கள் எம்­மிடம் இருக்­கின்­றன. கொள்ளை மற்றும் திருட்டில் ஈடு­ப­டு­ப­வர்­களே ஆவா குழுவில் இருக்­கின்­றனர். அவ்­வா­றான பாதாள குழுக்கள் இலங்­கையின் சகல பகு­தி­க­ளிலும் காணப்­ப­டு­கின்­றன. சிங்­கள, தமிழ் மற்றும் முஸ்லிம் என் அனைத்து மக்கள் மத்­தி­யிலும் அவ்­வா­றான பாதாள குழுக்கள் இருக்­கின்­றன.

ஆவா என்­பது குற்­றச்­செ­யல்­களில் ஈடு­படும் குழு­வொன்று பற்­றிய பிரச்­சி­னையே தவிர தேசிய பிரச்­சி­னை­யொன்று அல்ல. அது தொடர்பில் நாம் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­துவோம். யாரேனும் வீதியில் இறங்கி ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டார்கள், கோஷமிட்­டார்கள் என்­ப­தற்­காக நாம் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த போவ­தில்லை. ஏதேனும் தவறு இழைக்­கப்­பட்டால் நாட்­டி­லுள்ள சட்­டத்தின் பிர­கா­ரமே நாம் செயற்­ப­டுவோம்.

முன் உதா­ர­ண­மாகும்  தமி­ழி­னியின் நூல் 

விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பின் பெண்கள் பிரிவு அர­சி­யல்­துறை பொறுப்­பா­ள­ராக இருந்த தமி­ழினி வெளியிட்­டுள்ள சுயா­ச­ரி­தையை படிக்கும் போது யுத்­தத்தின் கசப்­பு­ணர்வை எடுத்­துக்­காட்­டு­வ­தாக அது அமைந்­துள்­ளது. அவர் தமது சொந்த அனு­ப­வங்­களை அதில் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

உலகில் யாரும் யுத்­தத்தில் வெற்­றி­பெ­றவோ அல்­லது திருப்தி காணவோ இல்லை. இந்த உலகில் நல்ல யுத்தம், கெட்ட யுத்தம் என்று இரண்டு வகை இருந்­தி­ருக்­க­வில்லை. இந்த உலகில் நடந்த யுத்­தங்கள் அனைத்­துமே கெடு­தி­யா­ன­வையேயாகும். அதேபோல் தான் சமா­தா­னமும். நல்ல சமா­தானம் கெடு­தி­யான சமா­தானம் என்று இரண்டு கிடை­யாது.

சமா­தானம் என்ற அனைத்­துமே நல்­லதே. விடு­தலைப் புலி­களால் தமிழ் மக்கள் பெரு­வா­ரி­யான கஷ்டங்­க­ளுக்கு முகம் கொடுக்க நேரிட்­ட­ரி­ருந்­தது. அதிர்ஷ்­ட­வ­ச­மாக எமது நாட்டில் யுத்தம் முடி­வ­டைந்து விட்­டது. அந்த பகு­தியை கட்­டி­யெ­ழுப்ப வேலைத்­திட்­ட­மொன்றை நடை­மு­றைப்­ப­டுத்தி தேசிய ஒற்­று­மையை ஏற்­ப­டுத்திக் கொள்ளும் பொறுப்பும் கட­மையும் அர­சாங்கம் என்ற வகை­யிலும் மக்கள் என்ற வகை­யிலும் எம் அனை­வ­ருக்கும் இருக்­கி­றது.

நாம் அனை­வரும் இலங்­கை­யர்கள். எந்­த­வொரு மொழியை பேசு­வ­தற்கும் எந்­த­வொரு மதத்தை பின்­பற்­று­வ­தற்கும் எம் அனை­வ­ருக்கும் உரிமை இருக்­கி­றது. மக்­களின் ஆசிர்­வா­தத்­துடன் ஸ்தாபிக்­கப்­பட்ட எங்­க­ளது நல்­லாட்சி தேசிய அர­சாங்­கத்­தினால் இதற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்கப்­பட்டு வரும் நிலையில், இதை பார்த்து சகித்துக் கொண்­டி­ருக்க முடி­யாமல் கண்கள் உறுத்தும் ஒரு தரப்­பி­னரும் இருக்­கின்­றனர்.

வீதி­யி­லி­றங்கும் பிக்­குமார்

இந்த நாட்டில் சில பௌத்த பிக்­கு­மார்கள் இருக்­கின்­றனர். பிக்­கு­மார்கள் பேச உகந்­த­தல்­லாத மோச­மான வார்த்­தை­களை பேசிக் கொண்டு காவி உடை­யுடன் இவர்கள் வீதி­களில் இறங்­கு­கின்­றனர். இதன் பின்­ன­ணியில் அர­சியல் ஆயுதம் இருக்­கி­றது. இவ்­வா­றான நட­வ­டிக்­கை­க­ளுக்கு யார் செல­வி­டு­கின்­றனர் என்­பதும் எமக்கு தெரியும். இந்த செயற்­பா­டு­களை பௌத்­தர்­களோ அல்­லது சிங்­கள மக்­களோ ஒரு­போதும் அனு­ம­திக்­க­மாட்­டார்கள். இன­வா­தத்தை துண்­டி­வி­டவே இவர்கள் தற்­போது முயற்­சிக்­கின்­றனர்.

பிக்­கு­மார்­க­ளுக்கு அமைப்­பொன்று கிடை­யாது என்­பதும் எமக்குத் தெரியும். சில பிக்­குமார் அர­சி­ய­லுக்கு பிர­வே­சிப்­பதன் நிமித்தம் பிர­பல்­ய­மா­க­தற்­கா­கவும் வீரத்தை காண்­பிக்­கவும் சிங்­கள மக்கள் மத்­தியில் பிர­பல்­யத்தை தேடிக்­கொள்­வ­தக்­கா­கவுமே இதை செய்­கின்­றனர்.

வேறாக சட்­ட­மில்லை

இந்த நாட்டில் பிக்­கு­மார்­க­ளுக்கு என்று வேறு சட்டம் கிடை­யாது என்­பதை நாம் நினை­வுப்­ப­டுத்த விரும்­பு­கிறோம். பண்­டா­ர­நா­யக்­கவைசுட்­டுக்­கொன்ற குற்­ற­வாளி காவி உடை அணிந்­தி­ருந்தார் என்­ப­தற்­காக சட்டம் வித்­தி­யா­சப்­பட்­டி­ருக்­க­வில்லை. அவர் துக்­கி­லி­ட­ பட்டார். இந்த நாட்டில் சட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

மதத்தின் பெயரில் இந்த நாட்டில் சட்­டத்தை இல்­லாமல் செய்­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­பட மாட்டோம். சட்டத்தின் ஆட்சி பாது­காக்­கப்­படும் என்று உறு­தி­ய­ளித்­ததன் பேரிலேயே நாம் ஆட்­சிக்கு வந்தோம். சட்ட ஆட்­சியை பாது­காக்க முடி­யாமல் போனா­மை­யி­னா­லேயே முன்­னைய ஆட்­சியை மக்கள் நிரா­க­ரித்­தனர். இந்த நாட்டில் சட்ட, ஒழுங்கை பாது­காக்க பாரா­ளு­மன்­றத்­தி­லுள்ள அனைத்து உறுப்­பி­னர்­க­ளது ஆத­ரவும் எமக்கு தேவை­யா­க­வுள்­ளது.

கடந்த ஆட்சி

கடந்த ஆட்­சியின் போது இந்த நாடு அரா­ஜ­கத்­துக்கு ஆட்­பட்­டி­ருந்­தது. இன­வா­தத்தை தூண்­டி­விடும் பிக்­கு­மார்கள் சிலர் அன்று இருந்த பிர­த­மரின் அலு­வ­ல­கத்­துக்குள் பல­வந்­த­மாக புகுந்து அங்­கி­ருந்த பொருட்­க­ளுக்கும் சேத­மேற்­ப­டுத்­தி­யி­ருந்­தனர். இது தொடர்பில் பொலிஸ் செயற்­பட்­டி­ருக்­கவோ அல்­லது நீதி­மன்ற நட­வ­டிக்கை எதுவும் முன்­னெ­டுக்கப் பட்­டி­ருக்­கவோ இல்லை. எனினும், எமது அர­சாங்­கத்தின் கீழ் அவ்­வா­றான செயற்­பா­டு­க­ளுக்கு அனு­மதி கிடை­யாது. இவ்­வாறு சட்டம் சீர்­கெட்­டி­ருந்த தேச­மொன்றை தான் நாம் சீர்­ப­டுத்தி வரு­கிறோம். இதன் சாத­க­மான பிர­தி­ப­லனை மக்கள் அனு­ப­விக்கக் கூடி­ய­தாக இருக்கும்.

புத்தர் சிலைகள்

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­க­ளுக்கு புத்தர் சிலைகள் தொடர்­பான பிரச்­சி­னை­யொன்று காண­ப­டு­வ­தாக தற்­போது தெரிவிக்­கப்­ப­டு­கி­றது. பௌத்த சாசன அமைச்சர் என்ற வகையில் அந்த விட­யங்­களை நான் மிகவும் பொறுப்­புடன் பேசு­கிறேன். அது தொடர்பில் பல விட­யங்கள் இருக்­கின்­றன. சில இடங்­களில் தற்­கா­லிக இரா­ணுவ முகாம்கள் அமைக்­கப்­படும் போது நிலை­யான புத்தர் சிலைகள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

இந்த முகாம்­களை அகற்றும் போது ஏனைய பொருட்கள் அனைத்­தையும் அங்­கி­ருந்து எடுத்து வந்­துள்­ள­துடன், அந்த புத்தர் சிலை­களை மட்டும் அப்­ப­டியே அங்கு வைத்­து­விட்டு வந்­துள்­ளனர். அந்த பகு­தி­களில் பௌத்­தர்கள் இல்­லா­மையால் சில சந்­தர்ப்­பங்­களில் அந்த சிலை­க­ளுக்கு சேதங்கள் ஏற்­பட்­டுள்­ளன.

சில குழுக்கள் திட்­ட­மிட்டு சென்று பௌத்­தர்கள் வாழாத பகு­தி­களில் புத்தர் சிலை­களை வைத்­து­விட்டு வரு­கின்­றனர். அப்­போது அவற்றை உடைக்­கின்­றனர். சிலை­களை உடைத்­த­வுடன் அதை புகைப்­படம் எடுத்து விடியோ எடுத்து இணை­யத்­த­ளங்­களில் பதி­விட்டு, முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் புத்தர் சிலைகள் மற்றும் விகா­ரை­களை உடைத்து சேதப்­ப­டுத்­து­வ­தாக பிர­சா­ரப்­ப­டுத்­து­கின்­றனர். இதுதான் உண்மைக் கதை. இதற்கு மேல­தி­க­மாக ஒரு­சில சம்­ப­வங்கள் இடம்­பெற்­றன. இல்லாமல் இல்லை. அவற்றை நாம் தீர்த்­துள்ளோம்.

பிக்கு ஒருவர் வடக்­கிற்கு சென்று இந்து ஒரு­வ­ருக்குச் சொந்­த­மான காணியில் விகாரை அமைத்­துள்ளார். இது பிரச்­சி­னை­யொன்­றாகும். இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் எம்.பி. ஒருவர் பாரா­ளு­மன்­றத்தில் கேள்வி எழுப்­பினார். நான் அவ­ரிடம் கதைத்தேன். அவர் புரிந்­து­கொண்டார். அது இந்து ஒரு­வரின் காணி. அதில் பிக்கு ஒருவர் விகாரை அமைத்­துள்ளார். பின்னர் நாம் அரச அதி­ப­ருடன் பேசி அந்த இந்து பக்­த­ருக்கு காணியைப் பெற்­றுக்­கொ­டுத்தோம்.

சாபக்­கே­டா­கி­யுள்ள  சமூக வலைத்­த­ளங்கள் 

சமூக வலை­த­ளங்கள் நாட்­டுக்குப் பெரும் சாபக்­கே­டாக மாறி­யுள்­ளன. இணை­யத்­த­ளங்­களில் பேச்­சுக்கள் பதி­வி­டப்­ப­டு­கின்­றன. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­களை தூற்றி பிக்­குமார் சிலர் இவ்­வா­றான பேச்­சுக்­களை பதி­வி­டு­கின்­றனர். அவர்­களை அடிக்க வேண்டும் கொல்ல வேண்டும் என்று அதில் அவர்கள் தெரிவிக்­கின்­றனர்.

நாட்டில் தௌகீத் ஜமாத் என்ற ஒரு அமைப்பு உள்­ளது. சில நாட்­க­ளுக்கு முன்னர் அதன் தலைவர் எனக் கூறப்­படும் ஒருவர் பௌத்த மதத்தை பாரி­ய­ளவில் அவ­ம­தித்து புத்தர் மனித இறைச்சி சாப்­பி­டவர் என்று அடை­யா­ளப்­ப­டுத்தி அந்த மதத்­திற்கு அவ­மா­ரி­யாதை இழைத்­துள்ளார். தற்­போது அவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

சமூக வலை­த­ளங்கள் குறித்து சில­வற்றைக் குறிப்­பி­ட­வேண்டும். சமூ­க­வ­லைத்­த­ளங்­களைக் கட்­டுப்­ப­டுத்­த­வேண்­டிய தேவை எமக்கு இல்லை. சமூக வலை­த­ளங்கள் சட்­ட­வி­ரோத செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­மாயின், நாட்டின் தேசிய ஒற்­று­மையை சீர்­கு­லைக்­கு­மாயின் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த நாம் தயார். சில சந்­தர்ப்­பங்­களில் இந்த ஊடக சுதந்­தி­ரத்தை தவ­றாகப் பயன்­ப­டுத்­து­கின்­றனர்.

புறக்­கோட்­டைக்கு 50 பேர் வந்­த­வுடன், புறக்­கோட்டை ஸ்தம்­பி­த­ம­டைந்­து­விட்­ட­தாக சில இணை­யத்­த­ளங்கள், ஊட­கங்கள் உட­னடிச் செய்­தி­களை வழங்­கு­கின்­றன. அங்கு பெரும் போராட்டம் என்று கூறு­கின்­றன. இது முழு உல­கத்­திற்கும் செல்லும். அவர்கள் இதைப் பார்ப்­ப­ார்கள். நாம் இவை­பற்றி புதி­தாக சிந்­திக்­க­வேண்­டிய காலம் கணிந்­துள்­ளது.

சட்ட மறு­சீ­ர­மைப்பு

நாம் இப்­போது சட்­டங்­களை மாற்றி வரு­கின்­றோம். சட்­ட­ம­று­சீ­ர­மைப்பை மேற்­கொள்­கின்றோம். 19 ஆவது சட்­டத்தை கொண்­டு­வந்து தேவை­யான நிறு­வ­னங்­களை சுயா­தீ­ன­மாக்­கினோம். இப்­போது குற்­ற­வியல் தண்­ட­னை­கோவை சட்­டத்தை திருத்தச் செய்­ய­வேண்­டிய தேவை உள்­ளது.

எமது நாட்டில் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­துக்குப் பதி­லாக சர்­வ­தேச தரத்­தி­லான அதை­விட சிறந்த சட்டம் கொண்­டு­வர வேண்டும் என்று யோசனை உள்­ளது. சர்­வ­தேசம் எமக்கு என்ன கூறி­னாலும், எமது நாட்டு மக்­க­ளுக்குப் பொறுத்­த­மான சட்­டத்­தத்­தைத்தான் நாம் கொண்­டு­வரும் என நான் தெளிவாகக் குறிப்­பி­டு­கின்றேன்.

இன­வாத்­திற்கு இட­ம­ளிக்­கப்­ப­டாது 

முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தத்­தையும் சரி சிங்­கள பௌத்த அடிப்­ப­டை­வா­தத்­தையும் சரி அல்­லது வேறு எந்த அடிப்­ப­டை­வா­தத்­தையும் சரி இந்த நாட்டில் செயற்­ப­டுத்த எவ­ரா­வது முயற்­சிப்­பா­ராயின் அதற்கு இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டது என்­பதை நாம் தெளிவாக கூறிக்­கொள்­கிறோம். எமது நல்­லாட்சி பல­யீ­ன­மா­னது என நினைக்க வேண்டாம். எமது நல்­லாட்­சியை பல­வீ­னமாக கரு­தி­விட வேண்டாம். நாம் சட்­டத்தை தேவைக்கு அதி­க­மாக கடு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்தால் இருப்­பதை எமது இய­லாமை என்று கரு­தி­விட வேண்டாம்.

சர்­வ­தேசம் என்ன கூறி­னாலும், எமது நாட்டில் இது­போன்ற இன­வாத பிரச்­சி­னைகள், மீண்­டு­மொரு இரத்­தக்­க­ளரி நிலை­மையை உரு­வாக்க மேற்­கொள்ளும் முயற்­சி­களை முறி­ய­டிக்க அவ­சி­ய­மெனில், இது­வரை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டா­தி­ருந்த பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை இனி­வரும் காலங்­களில் நடை­மு­றைப்­ப­டுத்­துவோம்.

ஆகையால், பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்­தவ மக்கள் மற்றும் மதத் தலை­வர்கள்,அர­சியல் தலை­வர்கள், அந்­தந்த இனங்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் தலை­வர்கள் என அனை­வ­ரையும் இதில் தலை­யீடு செய்து பங்­கெ­டுப்­பு­களை மேற்­கொள்­ளுங்கள் என்று கேட்­டுக்­கொள்­கின்றேன். இது­போன்ற நிலைமை நாட்டில் ஏற்­ப­டக்­கூ­டாது. அப்­ப­டி­யான நிலை­மை­யொன்று நாட்டில் ஏற்­பட்டால் ஒரு­போதும் மன்­னிப்பு கிடை­யாது. நாம் சட்­டத்தை அமுல்­ப­டுத்­துவோம். அந்த சட்டம் மிகக்­க­டு­மை­யா­ன­தாக இருக்­கலாம். நீங்கள் அதற்கு எந்த அர்த்­தங்­களை வழங்­கி­னாலும் கூட நாம் அவற்றை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு தயா­ரா­கவே இருக்­கிறோம்.

இணை­த­ளத்­தினால் பிரச்­சினை

எமது நாட்டின் நீதித்­துறை தொடர்பில் முழு உலக்­திலும் நாம் நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­தி­யுள்ளோம். எம்மை விமர்­சிக்கும் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சியின் தினேஸ் குண­வர்­தன எம்.பியும் கூட இந்த நாட்டில் சுயா­தீன நீதித்­துறை இருப்­பதை ஏற்­றுக்­கொள்வார். இவ்­வா­றான நிலையில், கடந்த சில மாதங்­க­ளுக்குள் எமது நீதி­மன்­றங்­க­ளையும் நீதி­ப­தி­க­ளையும் விமர்­சித்து நீதி­மன்­றத்தை அவ­ம­திக்கும் 70 இற்கும் மேற்­பட்ட சம்­ப­வங்­கள்­ச­மூக இணை­யத்­த­ள­மொன்றின் மூலம் வெ ளியி­டப்­பட்­டுள்­ளன.

நீதி­ப­திகள் விரக்­தி­ய­டைந்­துள்­ளனர். நீதி­ப­திகள் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களின் வீட்­டுக்கு சென்று உண­வ­ருந்­தி­ய­தா­கவும் பணம் வாங்­கி­ய­தாக தீர்ப்பு வழங்­கு­வ­தற்கு முன்­தினம் இந்த இணை­யத்­த­ளத்தில் செய்தி வெளியி­டப்­ப­டு­கி­றது.இவ்­வ­றான நிலையில் எப்­படி நீதி­பதி ஒரு­வ­ரினால் தீர்ப்பை வழங்க முடியும். அப்­ப­டி­யென்றால் நீதி­மன்றம் தொடர்பில் இந்த ஊடகங்கள் நாட்டு மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் வழங்கும் செய்தி என்ன? இது பற்றி நீதிபதிகள் முறையிடுவதற்கு இடம்கிடையாது. அப்படியென்றால் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் நாம் கட்டியெழுப்பிய சுயாதீன நீதித்துறையை சிமரத்துக்குள் தள்ளிவிடுவது யார்?

இவ்வாறான செய்திகளை வெளியிடும் மேற்படி இணையத்தளத்தின் ஊடகவியலாளர் லண்டனில் இருக்கிறார் என்பதற்காக நாம் இதை தொடர்ந்து செய்ய அனுமதிக்க மாட்டோம். நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் அறிக்கையிட்டு சர்வேதச பிடிவிறாந்து பிறப்பித்தாவது அவரை இந்த நாட்டுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்துவோம். அந்த இணையத்தள்தை நடத்துவது யார் மற்றும் நிதியுதவி செய்வது யார் என்பதும் எமக்குத் தெரியும்.

இணையத்தளங்கள் இவ்வாறு ஊடகசுதந்திரத்தை தவறாக பயன்படுத்தினால் நாம் சட்டத்தை அமுல்படுத்துவோம். இந்த நாட்டின் மக்கள் வாழ்வுக்கும் தேசிய பாதுகாப்புக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் எந்தவொரு விடயத்தையும் செய்வதற்கு நாம் இடமளிக்கமாட்டோம்.

அனைவரும் இலங்கையர்களே

எம் அனைவரையும் அனுப்பியது இந்த மக்கள்தான். தமது பாதுகாப்பு, நாட்டின் பாதுகாப்பு, நாட்டின் ஐக்கியம் குறித்து சிந்திக்க வேண்டும். ஏனைய வியடஙகள் குறித்து இங்கு விவாதிப்போம். ஆனால் நாடு என்று வரும்போது ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சியின் அனைத்து எம்.பிக்களிடமும் நான் கோரிக்கை விடுக்கின்றேன்.

சிங்கள , பௌத்தர்கள் என்ற அடையாளம் எமக்குத் தேவை. அதுபோல இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கும் அடையாளம் உள்ளது. ஆனால், எம் அனைவருக்கும் இலங்கையர் என்ற அடையாளம் தேவை. தேசிய சமாதானத்தைக் கட்டியெழுப்ப, நாம் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகள் போல இலங்கையர் என்ற அடிப்படையில் முன்னிற்போம் என்ற கோரிக்கையை நான் முன்வைக்கின்றேன் என்றார்.