தொடரை வெல்ல அவுஸ்திரேலியாவும் சமப்படுத்த இந்தியாவும் முயற்சி

Published By: Digital Desk 5

23 Sep, 2022 | 04:38 PM
image

(என்.வீ.ஏ.)

இந்தியாவுக்கு எதிராக நாக்பூரில் இன்று இரவு நடைபெறவுள்ள 2ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் வெற்றியீட்டி தொடரைக் கைப்பற்றும் குறிக்கோளுடன் அவுஸ்திரேலியா களம் இறங்கவுள்ளது.

மறு புறத்தில் கடைசிக் கட்ட ஓவர்களை கட்டுப்பாட்டுடன் வீசி அவுஸ்திரேலியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் எண்ணத்துடன் ஜஸ்ப்ரிட் பும்ராவை விளையாடச் செய்வது குறித்து இந்தியா ஆலோசித்துக்கொண்டிருக்கிறது.

Rohit Sharma and Bhuvneshwar Kumar in the thick of it, India vs Australia, 1st T20I, Mohali, September 20, 2022

எவ்வாறாயினும் பூரண உடற்தகுதியைக் கொண்டிருந்தால் மாத்திரமே ஜஸ்ப்ரிட் பும்ரா இன்றைய போட்டியில் விளையாடுவார் என அறிவிக்கப்படுகிறது. அவர் விளையாடினால் அவருக்கு உமேஷ் யாதவ் வழிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் யுஸ்வேந்த்ர சஹாலுக்குப் பதிலாக ரவிச்சந்திரன் அஷ்வினை இறுதி அணியில் இணைப்பது குறித்தும் ஆலோசிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Matthew Wade and Tim David get in on the fist bumps, India vs Australia, 1st T20I, Mohali, September 20, 2022

 இரண்டு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடரில் மொஹாலியில் பரபரப்பை ஏற்படுத்திய முதலாவது போட்டியில் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா கடைசி ஓவரில் 4 விக்கெட்களால் வெற்றியீட்டியிருந்தது.  

முதலாவது போட்டியில் விளையாடிய அதே வீரர்கள் இன்றைய போட்டியிலும் அவுஸ்திரேலிய அணியில் இடம்பெறவுள்ளனர்.

அணிகள்

இந்தியா: ரோஹித் ஷர்மா (தலைவர்), கே. எல். ராகுல், விராத் கோஹ்லி, சூரியகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ஹர்ஷால் பட்டேல், புவ்ணேஷ்வர் குமார், ஜஸ்ப்ரிட் பும்ரா அல்லது உமேஷ் யாதவ், யுஸ்வேந்த்ர சஹால் அல்லது ரவிச்சந்திரன் அஷ்வின்.

அவுஸ்திரேலியா: ஆரொன் பின்ச் (தலைவர்), பெமரன் க்றீன், ஸ்டீவன் ஸ்மித், க்ளென் மெக்ஸ்வெல், ஜொஷ் இங்லிஸ், டிம் டேவிட், மெத்யூ டேவிட், பெட் கமின்ஸ், நேதன் எலிஸ், அடம் ஸம்ப்பா, ஜொஷ் ஹேஸ்ல்வூட்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35