கிராமிய அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு வேலைத்திட்டத்திற்கான கால எல்லையை நீடிக்க தீர்மானம்

Published By: Digital Desk 5

23 Sep, 2022 | 02:40 PM
image

(எம்.மனோசித்ரா)

மத்திய மாகாணம் மற்றும் ஊவா மாகாணங்களில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மத்திய மாகாணம் மற்றும் ஊவா மாகாணங்களில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தால் 30 மில்லியன் யூரோக்களை வழங்கப்பட்டுள்ளது.

அதற்கான ஒப்பந்தம் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் திகதி கையொப்பமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, இக்கருத்திட்டத்தின் கால எல்லை 2024.06.15 ஆம் திகதியுடன் நிறைவுபெறவுள்ளது.

ஆனாலும், கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட கொவிட் 19 தொற்றுநிலைமை மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

அதனால், குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் கால எல்லை மற்றும் நன்கொடை ஒப்பந்தத்தின் செல்லுபடியான காலத்தை 2025.06.15 வரை நீடிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11