இனப்படுகொலை இடம்பெற்றதை அங்கீகரிக்கவேண்டும் - பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சருக்கு பிரிட்டிஸ் எம்பிக்கள் கடிதம்

Published By: Rajeeban

23 Sep, 2022 | 01:08 PM
image

இலங்கை ஜனாதிபதியின் தலைமைத்துவம் குறித்து நாங்கள் ஆழ்ந்த ஏமாற்றமடைந்துள்ளோம்,அவரது அரசாங்கத்தின் கீழ் இடம்பெறும் ஒடுக்குமுறை குறித்த எங்கள் கரிசனையை எழுப்புகின்றோம் எனவும்  குறிப்பிட்டுள்ளனர்.

உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துள்ளன என்பது தெளிவாகியுள்ள விடயம் என குறிப்பிட்டுள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  பிரிட்டன் தமிழர்களின் இனப்படுகொலையை அங்கீகரிக்கவேண்டும் யுத்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட இலங்கையின் சிரேஸ் அதிகாரிகளிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பிரிட்டனின் லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவர் எட்டேவேயும் ரிச்மன்ட் பார்க்கிற்கான சரா ஒன்லேயும் பிரிட்டனின் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வெளிவிவகார செயலாளர் ஜேம்ஸ் கிலெவெர்லிக்கு எழுதியுள்ள கடிதத்தில்  இதனை தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் பொறுப்புக்கூறலிற்கான உள்நாட்டு பொறிமுறை கடந்த சில வருடங்களாக சிதைந்து தோல்வியடைந்துள்ளது என்பது தெளிவாகின்றது என்பது தெளிவாக தெரிகின்றது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் வழமை போல தாமதப்படுத்தும்,மறுக்கும், தப்பிக்க முயலும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

யுத்த  குற்றங்களில் ஈடுபட்டவர்களை உரிய முறையில் விசாரணை செய்யவேண்டும், அவர்கள் செய்த விடயங்களிற்கு பொறுப்புக்கூற வேண்டும் என புதிய வெளிவிவகார செயலாளர் இலங்கையின் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தவேண்டியது அவசியம் எனவும் அவர்கள் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

தனிநபர் ஒருவர் அநீதிகளில் உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என்பதற்கான   ஆதாரங்கள் காணப்பட்டால் மக்னிட்ஸ்கி தடைகளை பயன்படுத்துவது  உட்பட பிரிட்டன் அரசாங்கம் அவர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும்  பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முதலில் நாங்கள் புதிய வெளிவிவகார செயலாளராக நியமிக்கப்பட்டமைக்காக உங்களிற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம், நீங்கள் பணிகளில் ஈடுபட ஆரம்பிக்கும் இவ்வேளை இலங்கைதமிழர்களின் உரிமைகள்  உங்களின் முன்னுரிமைக்குரிய விடயமாக அமையவேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக இந்த கடிதத்தை எழுதுகின்றோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை தற்போது அரசியல் பொருளாதார  மனித உரிமை நெருக்கடியில் சிக்குண்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள் உணவு மருந்து எரிபொருள் போன்றவற்றிற்கான தட்டுப்பாடு நாடாளாவிய ரீதியில் மில்லியன் கணக்கான மக்களிற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர்கள் இலங்கை ஜனாதிபதியின் தலைமைத்துவம் குறித்து நாங்கள் ஆழ்ந்த ஏமாற்றமடைந்துள்ளோம்,அவரது அரசாங்கத்தின் கீழ் இடம்பெறும் ஒடுக்குமுறை குறித்த எங்கள் கரிசனையை எழுப்புகின்றோம் எனவும்  குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை மக்கள் சீர்திருத்தங்களிற்காக வீதிகளில் போராடும்போது ஐக்கிய இராச்சியம் அவர்களிற்கு ஆதரவளிக்கவேண்டும்,நெருக்கடியின் மனிதாபிமான விளைவுகளிற்கு தீர்வு காணப்படுவதை உறுதி செய்வதற்காக எங்களின் சகாக்களுடன் இணைந்து பிரிட்டன் செயற்படவேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தமிழர்களிற்கு எதிரான நீண்ட கால தொடரும் மனித உரிமை மீறல்கள் குறித்த எங்கள் கரிசனைகளை நாங்கள் வெளிப்படுத்த விரும்புகின்றோம்,பல மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைகள் உள்நாட்டு யுத்தத்தின் அநீதிகளின் பின்னர் இலங்கையில் மனித உரிமை நிலவரம் குறித்த கவலை தரும் நிலவரத்தை வெளியிட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொறுப்புக்கூறலிற்கான உள்நாட்டு பொறிமுறை கடந்த சில வருடங்களாக சிதைந்து தோல்வியடைந்துள்ளது என்பது தெளிவாகின்றது என்பது தெளிவாக தெரிகின்றது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் வழமை போல தாமதப்படுத்தும்,மறுக்கும், தப்பிக்க முயலும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

யுத்த  குற்றங்களில் ஈடுபட்டவர்களை உரிய முறையில் விசாரணை செய்யவேண்டும், அவர்கள் செய்த விடயங்களிற்கு பொறுப்புக்கூற வேண்டும் என புதிய வெளிவிவகார செயலாளர் இலங்கையின் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தவேண்டியது அவசியம் எனவும் அவர்கள் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

தனிநபர் ஒருவர் அநீதிகளில் உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என்பதற்கான   ஆதாரங்கள் காணப்பட்டால் மக்னிட்ஸ்கி தடைகளை பயன்படுத்துவது  உட்பட பிரிட்டன் அரசாங்கம் அவர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும்  பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழர்களிற்கு எதிராக இனப்படுகொலைநடவடிக்கைகள் இடம்பெற்றன என்பதை  அங்கீகரிக்கும் முக்கியமான நடவடிக்கையை நீங்கள் எடுப்பீர்கள் என நாங்கள் நம்புகின்றோம்,பிரி;த்தானிய அரசாங்கம் கடந்த கால அநீதிகளை அலட்சியம் செய்யக்கூடாது தற்போது இடம்பெறும் மனித உரிமைகளையும் நாங்கள் புறக்கணிக்க முடியாது எனவும்  அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44