அதிகமான அமைச்சர்களை நியமித்து விட்டு நோயாளர்களுக்கு பால், மீன் வழங்குவதை நிறுத்துமாறு தெரிவிப்பது எவ்வகையில் நியாயம் - சஜித்

Published By: Vishnu

22 Sep, 2022 | 08:47 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

வைத்தியசாலைகளில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களுக்கு பால் மற்றும் கடல் மீன் விநியோகத்தை நிறுத்திவிட்டு, அளவுகதிகமாக அமைச்சர்களையும் இராஜாங்க அமைச்சர்களையும் நியமிப்பது எந்தளவு நியாயமானது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார். 

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் சுகாதார அமைச்சிடம் கேள்வியெழுப்பி உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

வடமத்திய மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் வைத்தியசாலைகளுக்கு சுற்று நிருபமொன்று வெளியிடப்பட்டுள்ளது.

தங்கியிருந்து சிகிச்சைப் பெறும் நோயாளர்களுக்கு மறு அறிவித்தல் வரையில் பால் விநியோகத்தை நிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை எப்படி செய்ய முடியும். 

நோயாளர்களுக்கு பால் விநியோகத்தை நிறுத்திவிட்டு இராஜாங்க அமைச்சர்கள் 37 பேரை நியமித்துள்ளதுடன், மேலும் அமைச்சர்கள் 10 பேரை நியமிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடல் மீனுக்கு பதிலாக குளத்து மீனை வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம் பாராளுமன்றத்திற்கு பொருந்துமா? இங்குள்ள உணவகத்திற்கு பொருந்துமா? இந்த சுற்றுநிருபம் எந்தளவுக்கு வெட்கமில்லாத வேலையாக உள்ளது.

சுகாதார அமைச்சர் உடனடியாக இந்த சுற்றுநிருபத்தை நீக்கவேண்டும். வேண்டுமென்றால் நியமிக்கப்பட்ட அமைச்சர்களை நீக்கி அதற்கு பயன்படுத்தும் நிதியை மீன் விநியோகத்திற்கு பயன்படுத்துங்கள் என்றார்.

இதன்போது பதிலளித்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவ்வாறான சுற்றுநிருபம் இருக்குமாக இருந்தால் அது தொடர்பாக நான் தேடிப் பார்த்து நடவடிக்கை எடுக்கின்றேன்.

அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கு மந்தபாேசணை தொடர்பில் அரசியல் நோக்கத்துக்காக சிலர் பிரசாரம் செய்துவருகின்றனர்.

 அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 85வீதான பிள்ளைகளுக்கு மந்தபோசனம் என ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஆனால் அம்பந்தோட்டை மாவட்ட சுகாதார அமைப்பு விஞ்ஞான ஆய்வு ரீதியில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் 5வீதத்துக்கும் குறைவான சிறுவர்களே  மந்தபோசனத்துக்கு ஆளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51