வருடாந்தம் 5 ஆயிரத்திற்கும் அதிகமான புற்றுநோயாளர்கள் மரணிக்கும் நிலை - சஜித் சபையில் தெரிவிப்பு

Published By: Vishnu

23 Sep, 2022 | 08:04 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

தரமான மருத்துவ மற்றும் கதீர்வீச்சு உபகரணங்கள் பற்றாக்குறையால் காப்பற்றாக்கூடிய புற்றுநோயாளர்களில் ஐயாயிரத்திற்கும் அதிகமானோர் வருடாந்தம் உயிரிழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் சுகாதார அமைச்சிடம் கேள்வியெழுப்பி உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

சிறப்பான சுகாதார சேவையை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆனால் சுகாதார துறைக்கு போதுமான மருத்துவ உபகரணங்களை அரசாங்கத்தினால் விநியோகிக்க முடியாதுள்ளது. 

அத்துடன் புற்றுநோயாளர்களுக்கு தேவையான கதிர்வீச்சு உபகரணங்களுக்கான பற்றாக்குறை மற்றும் பராமரிப்பு தொடர்பான பிரச்சினைகளால் அந்த நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி அரச சுகாதார துறையில் ஆளணி முகாமைத்துவமும் பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளது. இதன்படி சில விடயங்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து பதில்களை எதிர்பார்க்கின்றேன்.

புற்றுநோய்க்காக பயன்படுத்தும் எலக்டா கம்பக்ட், எலக்டா செலர்ஜிக் பிளட்போர்ம், எலக்டா செலர்ஜி கதிர்வீச்சு உபகரணங்களை சுகாதார அமைச்சுக்கு பெற்றுக்கொள்வதற்காக 2013 ஆம் ஆண்டில் வெளிநாட்டு நிறுவனமொன்றுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டதா? அந்த ஒப்பந்தத்தை சபையில் முன்வைக்க முடியுமா? அந்த உடன்படிக்கை தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக விநியோக தரப்பினருடன் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர். எதிர்காலத்தில் குறைந்த விலையில் அந்த உபகரணங்களை வழங்குவதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தவறான உபகரணங்களை கொண்டு வந்து மோசடிகளை செய்து, தவறுகளை சரி செய்வதற்காக புதிதாக அந்த நிறுவனத்திடம் நஷ்ட ஈடாக மறுசீரமைப்பு உத்தரவாதத்தை பெற்றுள்ளனர். அந்தளவுக்கு ஊழல் நடந்துள்ளது. ஊழலை சீர் செய்ய எடுத்த நடவடிக்கை இப்போது செயற்படுத்தப்படுகின்றதா?

தரமான உபகரணங்கள் இல்லாமையினாலும் போதுமான கதிர்வீச்சு உபகரணங்கள் இல்லாமையினாலும் வருடாந்தம் காப்பற்றாக்கூடிய ஐயாயிரத்திற்கும் அதிகமான புற்றுநோயாளர்கள் உயிரிழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதனை அரசாங்கம் அறிந்துள்ளதா? அப்படியாயின் புதிய உபகரணங்களை கொள்வனவு செய்யவும், அதற்கான கட்டிடத்திற்கும் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படுமா? என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38