பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை இலங்கை அரசு மீறுகின்றது - பீரிஸ் சர்வதேசத்திடம் முறைப்பாடு

Published By: Digital Desk 3

22 Sep, 2022 | 05:02 PM
image

(எம்.மனோசித்ரா)

சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தமது கருத்துக்களை தெரிவிப்பதற்கும், குழுக்களில் அங்கத்துவம் வகிப்பதற்கும் வாய்ப்புக்கள் மறுக்கப்படுகின்றமையானது, சட்டத்தினால் பாதுகாக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை மீறும் செயற்பாடாகும். 

அத்தோடு இச்செயற்பாடானது தம்மால் தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதிநிதிகளின் ஊடாக பாராளுமன்ற செயற்பாடுகளில் தலையிடுவதற்கு மக்களுக்கு காணப்படும் உரிமையும் உதாசீனப்படுத்தப்படுத்துவதாக சர்வதேசத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும, டிலான் பெரேரா, கலாநிதி நாலக கொடஹேவா, பேராசிரியர் சன்ன ஜயசுமன, கலாநிதி உபுல் கலப்பதி, கலாநிதி திலக் ராஜபக்ஷ, லலித் எல்லாவல, கே.பி.எஸ்.குமாரசிறி, வசந்த யாபா பண்டார, குணபால ரத்னசேகர, உதயன கிரிந்திகொட மற்றும் பேராசிரியர் சரித ஹேரத் ஆகியோரால், பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் பொதுச் செயலாளர், சார்க் பொதுச் செயலாளர் மற்றும் சர்வதேச பாராளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் ஆகியோருக்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள அனைவரும் தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாகக் காணப்படுகின்றனர் என்பதோடு , இவர்களில் வெளிநாட்டலுவல்கள், கல்வி, சுகாதாரம் மற்றும் ஊடகம் உள்ளிட்ட அமைச்சுப்பதவிகள் உட்பட இலங்கை அரசாங்கத்தில் முக்கிய பதவிகளையும் வகித்தவர்களும் உள்ளடங்குகின்றனர். 

அதேபோன்று பாராளுமன்றத்தில் மிக முக்கியத்துவமுடைய குழுக்களுக்கு தலைமை வகித்தவர்களும் இதில் காணப்படுகின்றனர்.

நாம் கடந்த 2020 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சியின் ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டோம். எனினும் துரிதிஷ்டவசமாக கட்சிக்குள் ஏற்பட்ட சில கருத்து முரண்பாடுகளால் நாம் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படத் தீர்மானித்தோம். 

இந்த தீர்மானத்தை எடுப்பதற்கு ஏதுவாய் அமைந்த காரணிகள் குறித்து பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸினால் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

இருந்த போதிலும், தற்போது எமக்கு பாராளுமன்ற சபை அமர்வுகளில் கருத்துக்களை தெரிவிப்பதற்கோ, குழுக்களில் அங்கத்துவம் பெறுவதற்கோ வாய்ப்புக்கள் வழங்கப்படுவதில்லை என்பது கவலைக்குரியது.

அடிப்படை ஜனநாயக சம்பிரதாயங்களை மீறும் சர்வாதிகார உத்தரவுகளினால் பாராளுமன்றத்தினுள் எம்மை முழுமையாக மௌனமாக்கியுள்ளனர்.

இதனால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற பூங்காவில் கலந்துரையாடுவதைத் தவிர வேறு மாற்றுவழியற்ற நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

இது சட்டத்தினால் பாதுகாக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை மீறுவதாகக் காணப்படும் அதே வேளை, தம்மால் தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதிநிதிகளின் ஊடாக பாராளுமன்ற செயற்பாடுகளில் தலையிடுவதற்கு மக்களுக்கு காணப்படும் உரிமையும் உதாசீனப்படுத்தப்படுகிறது.

எம்மால் இது தொடர்பில் மீண்டும் மீண்டும் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் , ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகரால் வழங்கப்படும் பிரதிபரலிப்புக்கள் எமக்கு நிகழும் அநியாயத்தை ஏற்றுக் கொள்வதாக அமைந்துள்ளன. இந்த நிலைமையை மாற்றுவதற்கு இதுவரையில் எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளமை கவலைக்குரியது.

எனவே நாட்டு மக்களினதும் , அவர்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களினதும் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உங்களதும் உங்கள் அமைப்பினதும் நேரடி தலையீட்டினை எதிர்பார்க்கின்றோம்.' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15