கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை நீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதன் பிரகாரம், கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸ, கோட்டே, கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவை நகர சபைக்குட்பட்ட பகுதிகள், கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் இரத்மலானை போன்ற பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும்.

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின் விநியோக கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட உள்ள திருத்தப்பணிகள் காரணமாக மேற்படி நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.