இந்தியாவில் இருந்து ஹெரோயின் குளிசைகளை விழுங்கிய நிலையில் இலங்கைக்கு வந்த நபரொருவரை கட்டுநாயக்க விமானநிலைய பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் நேற்று கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் இந்தியாவின் சென்னையில் இருந்து நேற்று மதியம் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதுருகிரிய பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய குறித்த சந்தேகநபர் விழுங்கி வந்த ஹெரோயின் குளிசைகளை அகற்றுவதற்காக, நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

அவர் விழுங்கியிருந்த ஹெரோயின் குளிசைகளில்  5  ஹெரோயின் குளிசைகள் தற்போதைய நிலையில் அகற்றப்பட்டுள்ளதாக விமானநிலைய பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.