கம்பளை போத்தலாப்பிட்டிய பிரதேசத்தில் வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பங்கள் உட்பட 20 தூண்களுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வேன் கேகாலையில் இருந்து நாவலப்பிட்டிக்கு பயணித்துக் கொண்டிருந்த சமயம் கம்பளை போத்தலாப்பிட்டி பகுதியில் வைத்து வேன் கட்டுபாட்டை இழந்து பாதை ஓரமாக இருந்த மின் கம்பங்கள் இரும்புத் தூண்கள் அடங்கலாக 20 தூண்களின் மீது மோதி விபத்துக்குள்ளாகியதில் சாரதி உட்பட இருவர் காயமடைந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.