ஜனாதிபதியுடன் பிரித்தானியாவுக்கு என்வர் ஏன் சென்றார்கள் - குமார வெல்கம கேள்வி

Published By: Digital Desk 3

20 Sep, 2022 | 04:46 PM
image

(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பாரியார் சிரந்தி ராஜபாக்ஷவுடன்  அரசமுறை வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டதை போன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் செயற்பட கூடாது. பிரித்தானியாவுக்கு ஜனாதிபதியுடன் என்வர் ஏன் சென்றார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் குமார வெல்கம கேள்வியெழுப்பினார்.

பிரதி சபாநாயகர் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் மாறுப்பட்ட பல கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன. அதிசொகுசு வானங்களில் செல்லும் தேரர்கள் தான் மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். சாதாரண விகாரைகளில் உள்ள தேரர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

வறுமை நிலையில் உள்ள விகாரைகளுக்கு மின்கட்டண அதிகரிப்பில் ஏதாவதொரு வழிமுறையில் நிவாரணம் வழங்கப்படுவது அவசியமானது. பொருளாதார ரீதியில் சகல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஒரு விடயத்தை குறிப்பிட வேண்டும். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சிரந்தி ராஜபக்ஷவுடன் வெளிநாட்டு அரசமுறை பயணங்களை மேற்கொண்டார் இறுதியில் என்னவாயிற்று. நாடு மிக மோசமான பொருளாதார பாதிப்பை எதிர்க்கொண்டுள்ள பின்னணியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் 8 பேர் பிரித்தானியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்கள்.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ செயற்பட்டதை போன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் செயற்பட கூடாது. இதனை அவருக்கு ஆளும் தரப்பினர் குறிப்பிட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27