கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது

Published By: Digital Desk 5

20 Sep, 2022 | 01:16 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

கொழும்பு- வாழைத்தோட்டம் பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி நபர் ஒருவர்  உயிரிழந்தமை தொடர்பில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் நேற்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து துப்பாக்கி மற்றும் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 8 ஆம் திகதி வாழைத்தோட்டம் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன் அடிப்படையில்  சந்தேகநபர்களின் ஒருவர் கொலன்னாவ பிரதேசத்தில் மறைந்திருந்த போது  கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இதன்போது சந்தேக நபரிடமிருந்து துப்பாக்கிச்சூட்டின் போது பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் 7 கிராம் 945 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேக நபர் குணசிங்கபுர பிரதேசத்தில் வைத்து குற்றத்திற்கு உதவியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேக நபர் கைவசமிருந்த 6 கிராம் 720 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் 26 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் இருவரும் வாழைத்தோட்டம் மற்றும் குணசிங்கபுர பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தபட்டுள்ளார்கள்.

சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02