சிசுவின் உடலில் ஆங்காங்கே முடி : காரணம் என்ன ?

Published By: Digital Desk 7

20 Sep, 2022 | 12:46 PM
image

தாயின் வயிற்றில் உள்ள சிசுவினுடைய  உடலின் தட்பவெப்ப நிலையைப் பராமரிப்பதற்காக, இயல்பாகவே சிசுவின் உடலில் ஆங்காங்கே முடி அதிகமாக காணப்படும்.

இந்த முடிக்கு Lanugo Hair என்று பெயர். தாயின் வயிற்றில் குழந்தை இதமான சூட்டில் இருக்கும்போது, அதன் சருமத்தை பாதுகாக்க இந்த முடிகள் தேவைப்படுகிறது.

இவ்வகை முடி மென்மையாக இருக்கும். குழந்தை பிறந்த பிறகு, காதுகள், முதுகு, முன் நெற்றி ஆகிய இடங்களில் முடி இருக்கும். சில குழந்தைகளுக்கு மரபணு காரணமாகவும் முடி வளரும். நிறை மாதத்தில் குழந்தை பிறக்கும்போது இம்முடி தானாகவே உதிர்ந்துவிடும். குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு உடலில் உள்ள முடிகள் உதிர்வதற்கு நாள் பிடிக்கும்.

தாயின் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தாலும், குடும்பத்தில் பாட்டி, தாத்தா என பரம்பரையாக யாருக்கேனும் உடலில் முடி அதிகமாக இருந்தாலும், பிறக்கும் குழந்தையின் உடலில் முடி இருக்கும். தாயின் POS (Polycystic Ovary Syndrome) பிரச்சினையும், தாயின் இரத்தத்தில் காணப்படுகின்ற அண்ட்ரோஜென்ஸ் (Androgens) குழந்தைக்குப் பரவுவதாலும் அதன் உடலில் முடி வளர்கிறது.

சில குழந்தைகளின் உடலில் முடி வளர்வதற்கு காரணமாக உள்ள அண்ட்ரோஜென் அதிக அளவில் உற்பத்தியாவதற்கு, CAH என்று சொல்லப்படும் Congenital Adrenal Hyperplasia மரபணு காரணமாகிறது.

இந்த நிலையில், குழந்தையின் உடலில் Cortisol ஹோர்மோன் குறைவாகவும், அண்ட்ரோ ஜென் ஹோர்மோன் அதிகமாகவும் உற்பத்தியாகும். Cortisol  ஹோர்மோன் அளவு குறைவதால், குழந்தையின் உடலில் உப்பின் அளவு குறைந்து, குறை இரத்த அழுத்தம் ஏற்படும். ஆரம்ப நிலையிலேயே இதற்கான சிகிச்சையை குழந்தைகளுக்கு கொடுக்காவிடில் Adrenal Gland பெரிதாக மாறிவிடும்.

பிறப்புறுப்பில் காணப்படும் முடிக்கு (Pubic Hair Infancy) ஹோர்மோன் சிறப்பு மருத்துவர்கள் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று பரிசோதிப்பார்கள். பரிசோதனையில் காரணம் கண்டறிய முடியாவிட்டால், அதை Idiopathic என அழைப்பார்கள். அதற்கு சிகிச்சை தேவையில்லை. எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஒரு வருடத்தில் படிப்படியாக இந்த முடி உதிர்ந்துவிடும்.

இப்போது இதற்கென மருத்துவமனைகளில் சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இதனால் முடி பிரச்சினையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சையளிக்க முடிகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29
news-image

ஒஸ்பெர்ஜர்'ஸ் சிண்ட்ரோம் எனும் குழந்தைகளுக்கான வளர்ச்சி...

2024-04-04 14:17:36
news-image

அதிரோஸ்கிளிரோசிஸ் எனும் ரத்த நாளத் தடிப்பு...

2024-04-03 16:12:32