(ஜவ்பர்கான்)


மட்டக்களப்பு மாவட்டத்திலும் தபால் ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மட்டக்களப்பு பிரதம தபாலகம் உட்பட பல தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.


தபால் ஊழியர்கள் 14 கோரிக்கைகளை முன்வைத்து சுகயீன விடுமுறை என்ற அடிப்படையில் நாடளாவிய ரீதியில் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில் நேற்று நள்ளிரவு முதல் பிரதான தபால் நிலையங்கள மற்றும் உப தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் இன்று காலை விநியோகிக்கப்படவிருந்த தபால்கள் நிலையங்களில் தேங்கி கிடப்பதாக தெரியவந்துள்ளது.


இதன் காரணமாக பொது மக்கள் தங்களுடைய கடிதங்களை பெற்றுக்கொள்வதில் பல்வேறுப்பட்ட அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை 14 கோரிக்கைகளையும் நிறைவேற்றாவிட்டால் தொடர்ச்சியாக சுகயீன விடுமுறை என்ற அடிப்படையில் பணி பகிஷ்கரிப்பு தொடரும் என தபால் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.