அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது - வாசு

Published By: Digital Desk 5

19 Sep, 2022 | 04:18 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மறுசீரமைப்பு என்ற பெயரில் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது. நட்டமடையும் அரச நிறுவனங்களின் சொத்து மதிப்பை அரசாங்கம் பாராளுமன்றத்திற்கு ஆவணங்களுடன் பகிரங்கப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தவுள்ளோம் என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஜனநாயக இடதுசாரி முன்னணியின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார மீட்சிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதை தவிர வேறெந்த திட்டங்களும் ஜனாதிபதியிடம் கிடையாது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்குலகத்தவரின் கொள்கைக்கமையவே செயற்படுகிறார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் கடுமையானது என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.குறித்த நிபந்தனைகளை செயற்படுத்தினால் நடுத்தர மக்கள் மேலும் பாதிக்க கூடும்,நாணய நிதியத்தின் உத்தியோகஸ்தர் மட்ட ஒப்பந்த அறிக்கையை அரசாங்கம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

நட்டமடையும் அரச நிறுவங்களை மறுசீரமைப்பதாக குறிப்பிடப்படுகிறது.நட்டமடைவதாக குறிப்பிடப்படும் அரச நிறுவனங்களின் உண்மை சொத்து மதிப்பை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.

மறுசீரமைப்பதாக குறிப்பிட்டுக்கொண்டு அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனியார் துறையை தனது அரசியல் கொள்கையாக கொண்டுள்ளார்.

சகல அரசியல் கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்கும் முயற்சி தோல்வியடைந்துள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்களை ஒன்றிணைத்து தேசிய சபை என்ற பாராளுமன்ற குழுவை ஸ்தாபிக்கும் பிரேரணை இன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு,நிறைவேற்றப்படவுள்ளது.

தேசிய சபையின் கட்டமைப்பு தொடர்பில் அரசாங்கம் வெளிப்படை தன்மையுடன் எதனையும் குறிப்பிடவில்லை.சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு பதிலாக தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளோம் என்பதற்காகவே தேசிய சபை அமைக்கப்படவுள்ளது.தேசிய சபையின் ஊடக அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50