கொழும்பு உட்பட சில பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்தள்ளது.

சனிக்கிழமை காலை 9 மணிமுதல் இரவு 9மணிவரை குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மின் கடத்தல் தொகுதியில் ஏற்பட்டுள்ள கோளாரினை நிவர்த்தி செய்வதற்காக குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி தெஹிவளை, கல்கிசை, கோட்டை, கடுவலை மாநகர சபைக்குட்பட்ட பகுதி,மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவை நகரசபைக்கு உட்பட்ட பகுதி, கொட்டிகாவத்தை முல்லேரியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதி மற்றும் இரத்தமலானை ஆகிய பகுதிகளில் குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.