மட்டக்களப்பு வாவியில் அச்சுறுத்தலாக இருந்த முதலை பிடிபட்டது

Published By: Digital Desk 5

17 Sep, 2022 | 04:34 PM
image

இலங்கையின் இரண்டாவது மிகப் பெரிய வாவியாகக் கருதப்படும் மட்டக்களப்பு வாவியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட வந்தவர்களுக்கு பெரும் உயிர் அச்சுறுத்தலாக இருந்த முதலை வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் பிடிக்கப்பட்டு குமண காட்டுப் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இவ்விடையம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது மட்டக்களப்பு வாவியின் பெரியகல்லாறு, மற்றும் கோட்டைக்கல்லாறு பகுதியில் அதிகளவு மக்கள் மீன்பிடித் தொழிலை நம்பியே தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் அக்குறித்த ஆற்றுப்பகுதியில் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக முதலைகள் காணப்படுவதாக அப்பகுதி மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

 

இவ்வாறு தமக்கு அச்சுறுத்தலாக உள்ள முதலைகளைப் பிடிக்குமாறு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைப் பிரதிநிதித்துவப் படுத்தும், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் அப்பகுதி உறுப்பினர் த.சுதாகரணிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்ததற்கு இணங்க அவர் எடுத்த முயற்சியின் பலகாக வியாழக்கிழமை (15) இரவு குறித்த ஆற்றுப் பகுதிக்க வந்த வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் உத்தியோகஸ்த்தர்கள் மிகவும் சூட்சுமமான முறையில் அச்சுறுத்திய முதலையைப் பிடிப்பதற்கு இரும்புக் கூடு வைத்துள்ளனர். இந்நிலையில் வைத்த கூட்டுக்குள் அகப்பட்ட குறித்த முதலையை வெள்ளிக்கிழமை (16) ஆற்றுக்குள்ளிருந்து வெளியில் கொண்டு வந்துள்ளனர்.

இவ்வாறு பிடிக்கப்பட்ட முதலையை குமண காட்டுப்பகுதிக்குக் கொண்டு சென்று விடவுள்ளதாக அத்திணைக்கள உத்தியோகஸ்த்தர்கள் தெரிவித்தனர்.

முதலைக் கடிக்கு இலக்காகி மூன்று பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள், எனினும் தமது வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருந்த ஒரு முதலை தற்போது பிடிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு முதலை உள்ளது.

அதனையும் பிடித்துக் கொண்டு செல்லப்படும் பட்சத்திலேயேதான் தாம் சுதந்திரமாக மட்டக்களப்பு வாவியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடலாம் என அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

மீனவர்களும், அப்பகுதிமக்களும் விடுத்த வேண்டுகோளிற்கு இணங்க தமது கட்சியின செயலாளர் பூ.பிரசாந்தன் அவர்கள் ஊடக கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றதையடுத்து மிக விரைவாக வன ஜீவராசிகள் திணைக்களத்தினர், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை, பொதுமக்கள், மீனவர்கள், உள்ளிட்ட பலரினதும் ஒத்துழைப்புடன், இந்த முதலை பிடிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று மற்றைய முதலையையும் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் த.சுதாகரன் இதன்போது தெரிவிதார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04