இலங்கையின் நெருக்கடி மற்றும் சிறிய அரசுகளின் சங்கடங்கள்

Published By: Digital Desk 3

16 Sep, 2022 | 03:30 PM
image

இலங்கையின் பொருளாதார நெருக்கடிகள் அதன் சிக்கலான வெளிநாட்டு உறவுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆகஸ்ட் 16 அன்று, அம்பாந்தோட்டையின் தெற்கு துறைமுகம் யுவான் வாங் 5 என்ற ஆய்வு கப்பலை வரவேற்றது. பயணத்தை ஒத்திவைக்குமாறு கொழும்பு கேட்டிருந்த போதிலும், பின்னர் இணங்கி, ஆகஸ்ட் 22ம் திகதி வரை கப்பலை துறைமுகத்தில் நிறுத்திவைக்க அனுமதித்தது. இந்த விடயத்தில் இலங்கை மீது அழுத்தம் கொடுக்கவில்லை என்று இந்தியா மறுத்தது, எனினும் விஜயம் குறித்து தனது கவலையை பதிவு செய்தது.

பெய்ஜிங் கப்பல் ஆய்வு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டது என்று வாதிடுகிறது. மறுபுறம், இந்திய ஊடகங்கள் இதை "இரட்டை பயன்பாட்டு உளவு கப்பல்" என்று வர்ணித்தன. துறைமுகத்தை விட்டு வெளியேறிய சில நாட்களுக்குப் பிறகு தொடர்ச்சியான பல நிகழ்வுகள் அரங்கேறின, கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் ஷி ஷென்ஹொங் இந்த விடயத்தைப் பற்றி வெளிப்படையாக எழுதினார். 

இந்தியாவும் மேற்கு நாடுகளும் இலங்கையை தொடர்ந்து காலனித்துவப்படுத்துவதாக அந்தக் கட்டுரை குற்றம் சாட்டியது. கப்பலை நங்கூரம் இடுவதை அனுமதிப்பதற்கு இலங்கைக்கு உரிமை உண்டு என்று வாதிட்டு, யுவான் வாங் 5 "சர்வதேச நடைமுறைக்கு" இணங்கியதாக அது குறிப்பிட்டது.

கட்டுரை ஆத்திரத்தைத் தூண்டியது. இந்திய உயர் ஸ்தானிகராலயம் தூதுவர் "அடிப்படை இராஜதந்திர நெறிமுறைகளை மீறியதாக" குற்றம் சாட்டி, தனது அதிருப்தியை பதிவு செய்தது. மாறாக, மேற்கத்திய தூதரகங்கள் அமைதியாக இருந்தன. இந்த விடயம் இந்தியாவுடனான இலங்கையின் உறவை சீர்குலைக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் அவதானித்துள்ளனர். ஜனவரி முதல், புதுடில்லி 3.8 பில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு உதவிகளை வழங்கியுள்ளது. சீனக் கப்பலை நங்கூரம் இடுவதற்கு அனுமதியளிக்கும் கொழும்பின் தீர்மானம், இத்தீவு இரு நாடுகளையும் ஒன்றுடனொன்று முரண்பட வழிவகுக்கின்றதா என்று இந்தியாவை யோசிக்க வைக்கலாம்.

இலங்கையால் அத்தகைய சமநிலையில் ஈடுபட முடியாது, ஆனால் அதையும் தவிர்க்க முடியாது. சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை சந்தித்த மோசமான நிதி நெருக்கடியில் தத்தளித்து, 84 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியாக இருந்த பொருளாதாரம் இன்று அதன் கடைசி சில மில்லியன் டொலர்களாக குறைந்துள்ளது. நபருக்கான குறித்தளிக்கப்பட்ட பகிர்வு மற்றும் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நெருக்கடியின் வலியை ஓரளவு தணித்தாலும், அத்தகைய கொள்கைகள் நிலையானவை அல்ல. 

நாட்டின் மத்திய வங்கியின் ஆளுநர் கூட கேள்வி எழுப்பிய சமீபத்திய இறக்குமதி கட்டுப்பாடுகள், உள்ளூர் தொழில்களுக்கு மிகவும் தேவைப்படும் இடைநிலை மூலதன பொருட்களை தடை செய்கிறது. IMF-ல் இருந்து உதவியினை பெறுவது மட்டுமே உறுதியான தீர்வு, இதற்கு ஆறு மாதங்கள் ஆகலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இலங்கையின் மீட்பராக இந்தியா உருவெடுத்துள்ளது என்பதே உண்மை. எளிமையாகச் சொன்னால், இந்திய உதவி இல்லாவிடில், எமது பொருளாதாரம் தரைமட்டமாகியிருக்கும். வர்ணனையாளர்கள் நிலைமையை லெபனானின் நெருக்கடியுடன் ஒப்பிட்டாலும், அத்தகைய ஒப்பீடுகள் புவிசார் அரசியல் கோணத்தைத் தவறவிடுகின்றன. கொழும்பு, ஒன்று பிராந்திய மேலாதிக்கம், மற்றொன்று வளர்ந்து வரும் வல்லரசு என இரண்டு சக்திவாய்ந்த அயல் நாடுகளால் சூழப்பட்டுள்ளது. இந்நாடுகளின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், இந்த இரு நாடுகளும் அயற்பிராந்தியத்தில் ஒன்றுடனொன்று தொடர்ந்து முரண்படுகின்றன. இத்தகைய மோதல்கள் நன்மையை விட அதன் பாதகத்தையே அதிகம் விளைவித்துள்ளன.

இலங்கையின் நிலையை தைவான் அல்லது உக்ரைனின் நிலையுடன் ஒப்பிட முடியாது. இவை ஒரு பக்கம் ஒரு பிராந்திய அதிகார மையத்தால் சூழப்பட்ட மாநிலங்களாக இருந்தாலும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ போன்ற பிராந்தியத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு போட்டியிடும் சக்திகள் அந்த அதிகார மையத்தின் நேரடியான செல்வாக்கு செலுத்தும் பிராந்தியத்திற்குள் இல்லை. இலங்கையில் நிலைமை வேறுபட்டதுடன், மேலும் சிக்கலானது: மிகவும் சிக்கலானது, உண்மையில், இத்தீவு டெல்லிக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையில் ஒன்றன் பின் ஒன்றாக தாக்குதலுக்கு சிக்குவதைத் தவிர வேறு வழியில்லை.

இலங்கையின் பெய்ஜிங்கைச் சார்ந்திருக்கும் நிலை, பாதிக்கப்பட்ட அண்டை நாட்டுக்கான இந்தியாவின் உதவி மற்றும் வர்ணனையாளர்கள் இந்தியாவை மீட்பராக சித்தரிப்பதை புறக்கணிப்பது தொடர்பான கொழும்பின் மௌனம் தொடர்பில் அதிகமாக எழுதப்பட்டுள்ளது. இலங்கையின் கடன்களை மீளமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை நடாத்துவதற்கான பெய்ஜிங்கின் தயக்கம் இந்தக் கதைகளை வலுப்படுத்தியுள்ளது. இந்த ஆக்கத்தின்படி, இலங்கை தனது வெளியுறவுக் கொள்கையைப் பற்றி இன்னும் வெளிப்படையாக இருக்க வேண்டும், அதாவது பெய்ஜிங்குடன் பல தசாப்தங்களாக நீடித்த இத்தன்மையை கைவிட வேண்டும்.

உண்மை என்னவென்றால், இலங்கையின் அமைவிடம் மற்றும் பொருளாதார நிலைமை இதனை இத்தீவுக்கு பொருத்தமற்ற உத்தியாக ஆக்குகிறது. இலங்கை தனது சக்திவாய்ந்த நட்பு நாடுகளை பகைத்துக் கொள்ள முடியாது, இது யூன் மாத ஆரம்பத்தில் கொழும்பில் உள்ள வர்த்தக உயர் நீதிமன்றம் ரஷ்ய விமான நிறுவனத்திற்கும் ஐரிஷ் குத்தகை நிறுவனத்திற்கும் இடையிலான பரிவர்த்தனை தொடர்பாக விமானத்தை தடுத்து நிறுத்தியபோது அதற்கான விளைவை கண்டறிந்தது. 

ரஷ்ய வெளிவிவகார அமைச்சு உடனடியாக இச்சம்பவத்தை கண்டித்துள்ள நிலையில், இந்த தடை உத்தரவுக்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு பதிலளித்துள்ளது. இது ஒரு உன்னதமான Catch-22 சூழ்நிலையாகும்: இந்த உத்தரவில் அரசாங்கம் தலையிட முடியாது, ஏனெனில் இது நீதித்துறையின் மீறலாகக் கருதப்படும், இருப்பினும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளே நாட்டிற்கு வருகை தந்தவர்களில் பெரும்பாலானோராக இருப்பதால், இதிலிருந்து தன்னைத்தானே விலக்க முடியவில்லை. சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் தொடர்பு, மனித உரிமைகள் மற்றும் வெளிப்படைத்தன்மை தொடர்பான மேற்கத்திய பிரச்சாரத்திற்கு ஆளாகியுள்ளதுடன், இது ரஷ்யாவுடன் நெருக்கமான பொருளாதார உறவுகளை உருவாக்குவதற்கான அதன் தயக்கத்தை விளக்குகிறது என்ற சர்ச்சையின் எல்லா அல்லது பெரும்பாலான பகுப்பாய்வுகள் உண்மையில் புறக்கணிக்கப்படுகின்றன என்னும் விடயம் முக்கியமானதாகும்.

இலங்கை போன்ற சிறிய நாடுகள் இந்தப் புதைகுழிகளில் சிக்கித் தவிப்பதற்குக் காரணம், அவர்கள் பொறுப்பற்ற முறையில் கடன் வாங்கியது மட்டுமல்லாது, அவற்றிற்கு ஒரு தன்னம்பிக்கையான வெளியுறவுக் கொள்கையைத் தொடர அவர்களுக்கு உதவ கூடிய நீண்ட கால அபிவிருத்தி உத்திகளுக்கு மாறுவதற்கு அவை சரியான முறையில் ஊக்குவிக்கப்படாமலோ அல்லது வழிநடத்தப்படாமலோ உள்ளமையாகும். இது அபிவிருத்தி என்ற பெயரில் இந்த நாடுகளின் அரசுகள் வீணாக்கிய ஆடம்பரமான திட்டங்கள் மற்றும் சாத்தியமற்ற செயன்முறைகளை (white elephants) மன்னிக்கவில்லை. ஆனால், இலங்கையின் பொருளாதார வல்லுனர் உமேஷ் மொரமுதலி குறிப்பிட்டது போல் இலங்கையின் போருக்குப் பிந்தைய அபிவிருத்திக்காக சீனா மட்டுமே கடன் வழங்கத் தயாராக இருந்தபோது, ராஜபக்ச நிர்வாகமும் 2007 இல் தனது முதல் ISB ஐ வெளியிட்டு மூலதனச் சந்தைகளைத் தொடர்ந்ததுடன், அதே வருடம் பெய்ஜிங் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முதலாம் கட்டத்திற்காக 307 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுடன் உள்ளே வந்தது. நீண்ட கால தொழில் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதற்குப் பதிலாக, அடுத்தடுத்து வந்த அரசுகள் பிணைப்பத்திரங்களை வெளியிட்டு வெளிநாட்டுக் கடன்களை அதிகப்படுத்தின.

சீனா அல்லது இந்தியாவின் மீது கவனம் செலுத்தும் போது, வெளியுறவுக் கொள்கை வல்லுநர்கள் பெரிய விடயத்தை தவறவிட்டனர். பொருளாதார வீழ்ச்சிகளில் சர்வதேச இறையாண்மை பத்திரங்களின் பங்கு ஓரங்கட்டப்பட்டு விட்டது. இலங்கையின் கடன்களை மன்னிப்பதில் சீனாவின் தயக்கம் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகளைத் தடுத்து நிறுத்தலாம், ஆனால் மிகத் தீவிரமான பின்னடைவு இலங்கையின் மொத்த சந்தைக் கடன்களின் 47 சதவீதமான பங்கை கொண்ட ஹாமில்டன் ரிசர்வ் நாட்டின் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்திருப்பதாகும். உலகளாவிய நிதி நெருக்கடியைத் தொடர்ந்து," C. P. சந்திரசேகர் மற்றும் ஜெயதி கோஷ் ஆகியோர் எழுதுகையில், "வெளிநாட்டு பணப்புழக்கத்திற்கான இலகுவான அணுகல் வெளிநாட்டு மூலதனத்தின் ஆதரவுடன் பொருளாதாரத்தை முதன்மைப்படுத்த அரசாங்கங்களை ஊக்குவித்தது, இதன் விளைவாக 2020 இல் வெளிநாட்டுக் கடன்களின் பங்கு 56 பில்லியன் அமெரிக்க டொலரைத் தாண்டியது." ஆயினும் நெருக்கடியின் இந்த அம்சங்கள் சிறியளவான கவனத்தைப் பெற்றன.

பிராந்திய மேலாதிக்கத்தால் சூழப்பட்டதும், அதையொட்டி உடனடி அண்டை நாடாக அதன் மிக சக்திவாய்ந்த போட்டியாளரை கொண்ட ஒரு சிறிய நாட்டிற்கான மிகச் சிறந்த மற்றும் சாத்தியமான ஒரே உதாரணம் இலங்கையாகும். இது ஒரு தனித்துவமான நிலையாகும், மற்றும் இலங்கை அதிலிருந்து சரியாகப் பயனடையவில்லை. உண்மையில், ஒரு பெரிய வழியில், இலங்கையின் நெருக்கடி அத்தகைய சிக்கல்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது. கள நிலைமையை இன்னும் ஒருங்கிணைத்து பகுப்பாய்வு செய்ய, இந்த சிக்கல்களை நாம் இன்னமும் ஆழமாக கருத வேண்டும். ஒரு தரப்பைக் குறை கூறுவதற்குப் பதிலாக, சிறிய நாடுகளின் பிரச்சினைகளை அந்த நாடுகளின் நிலைப்பாட்டில் இருந்து பார்ப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். 360 பாகை விரிவான கண்ணோட்டம் தேவையாகும். இன்னமும், இலங்கை போன்ற நாடுகள் முன்னேறும் வரையில், அத்தகைய கண்ணோட்டத்தை வெளிப்படையாகக் காணமுடிவதில்லை.

உதித தேவப்பிரிய Factum இல் சர்வதேச உறவுகள் தொடர்பான பிரதம பகுப்பாய்வாளராவார். அவரை uditha@factum.lk இல் தொடர்பு கொள்ளலாம்.

Factum என்பது இலங்கையை தளமாகக் கொண்ட சர்வதேச உறவுகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய தொடர்புகள் பற்றிய ஆசியாவை மையமாக கொண்ட சிந்தனைக் குழுவாகும், அதனை www.factum.lk மூலமாக அணுகலாம்.

எழுதியவர் - உதித தேவப்ரிய

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13