கொழும்பில் வீடுடைத்து திருடும் 2 பேர் கைது ; நகைகள், பொருட்கள் உள்ளிட்டவை மீட்பு

Published By: Digital Desk 3

16 Sep, 2022 | 02:28 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கொள்ளுபிட்டி, பம்பலபிட்டி, வெள்ளவத்தை மற்றும் நாரஹேன்பிட்டி பகுதிகளை அச்சுறுத்தி வந்த, வீடுடைத்து திருடும்  சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரை, கொழும்பு தெற்கு வலய குற்ற விசாரணை பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.  ஐ.ஆர்.சி. எனப்படும் நாட்டில் குற்றவாளியாக ஏற்கனவே பதிவுப் பட்டியலில் இருக்கும் நபர் ஒருவர் உட்பட இருவரையே இவ்வாறு கைது செய்ததாக பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர்களிடமிருந்து உருக்கப்பட்ட  20 பவுன் தங்கம்,  24 கரட் தங்க முலாம் பூசிய  புராதன பெறுமதி மிக்க தட்டு,ஒட்டகத்தின் உருவச் சிலை, விலை மதிப்பற்ற  2,120  செப்பு காசுகள், கையடக்கத் தொலைபேசிகள், கணினிகள்  மற்றும் பத்து இலட்சம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை  கைப்பற்றியதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த சில மாதங்களாக கொள்ளுபிட்டி, பம்பலபிட்டி, வெள்ளவத்தை மற்றும் நாரஹேன்பிட்டி பகுதியில்  வீடுகளுக்குள் இரவு வேளையில் நுழையும்  நபர்கள், பெறுமதி மிக்க பொருட்களை களவாடிச் செல்வது தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகி வந்தன. இது தொடர்பில் அவ்வந்த பொலிஸ் நிலையங்கள் ஊடாக விசாரணைகள்  முன்னெடுக்கப்பட்ட நிலையில், கொழும்பு தெற்கு வலயத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சிசிர பெத்த தந்திரி குறித்த சம்பவங்கள் தொடர்பில் பிரத்தியேக விசாரணை ஒன்றினை முன்னெடுக்குமாறு கொழும்பு தெற்கு வலய குற்ற விசாரணை பணியகத்துக்கு பணித்திருந்தார்.

அதன்படி கொழும்பு தெற்கு வலய குற்ற விசாரணை பணியக சிறப்பு பொலிஸ் குழு,  கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றினை மையப்படுத்தியும், சி.சி.ரி.வி. கானொலியொன்றினை ஆதாரமாக கொண்டும் மருதானை - மாளிகாந்த பகுதியில் வைத்து ஒருவரை நேற்று இரவு கைது செய்தனர்.

அவரிடம் முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைய, கொள்ளுபிட்டி, பம்பலபிட்டி,  வெள்ளவத்தை மற்றும் நாரஹேன்பிட்டி பகுதிகளில் பதிவான பல்வேறு வீடுடைப்பு, திருட்டுகள் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் மேலதிக விசாரணையில்,  திருடபப்டும் பொருட்களை  கொள்வனவு செய்யும் நபர் ஒருவர் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மாளிகாகந்த,  ஆர்.பி. தோட்டம்  பகுதியைச் சேர்ந்த  ஒருவரை அது தொடர்பில் பொலிஸார் கைது செய்து அவரது வீட்டை சோதனை இட்டனர்.  இதன்போதே அவரது வீட்டில் திருட்டுப் பொருட்கள் பல கண்டுபிடிக்கப்பட்டன.

எபல் உள்ளிட்ட பல ரகங்களைச் சேர்ந்த ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் 120,  டெப் கணினி 14, 06  மடிக் கணினிகள்,  3 வெளிநாட்டு கடவுச் சீட்டுக்கள்,  24 வங்கி  அட்டைகள்,  179  கைக்கடிகாரங்கள்,  3 வாகன  மின் கலங்கள்,  54 அங்குல எல்.ஈ.டி. தொலைக்காட்சிப் பெட்டி,  13 டிஜிட்டல் கமராக்கள்,  அழகு சாதன பொருட்கள் ஒரு தொகுதி,  வேலைத் தள உபகரணங்கள்,  விலை மதிக்க முடியாத  பித்தளை மற்றும் செப்பு பொருட்கள்,  விலை மதிப்பற்ற பல்வேறு நாணய குற்றிகள் 2,120,  உருக்கப்பட்ட 20 பவுன் தங்கம் , 24 கரட் தங்க முலாம் பூசிய  புராதன பெறுமதி மிக்க தட்டு,ஒட்டகத்தின் உருவச் சிலை, 10 இலட்சம் ரூபா பணம் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ள  பொருட்களில் உள்ளடங்குவதாக கொழும்பு தெற்கு வலய குற்ற விசாரணை பணியக அதிகாரிகள் கூறினர்.

மீட்கப்பட்ட பொருட்களின் பெறுமதி 2 கோடி ரூபாவுக்கும் அதிகம் எனவும்,  அவற்றில் விலை மதிப்பற்ற புராதன பொருட்கள் சேர்க்கப்படவில்லை எனவும் பொலிஸார் கூறினர்.

மேலதிக விசாரணைகளை கொழும்பு தெற்கு குற்ற விசாரணை  பணியக அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:02:42
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32