முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசம் மீதான தடைக்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு எதிர்வரும் பெப்ரவரி  21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மூவரால் மேற்கொள்ளப்பட்ட மனு தொடர்பிலான விசாரணை இன்று (17)  இடம்பெற்ற போது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.