இலங்கையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை விபசாரத்திற்காக மாலைதீவிற்கு அனுப்பி வந்த இரு ஆட்கடத்தல் காரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஆட்கடத்தல் காரர்கள் இருவரும் மாலைதீவில் உள்ள பிரபல செல்வந்தர்களுக்கு விபசாரத்திற்காக பெண்களை அனுப்பி வந்தநிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய பத்தரமுல்ல பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்ததுள்ளது.

இரு சந்தேகநபர்களும் நூற்றுக்கும் அதிகமான பெண்களை விபசாரத்திற்காக மாலைத்தீவிற்கு அனுப்பி வைத்துள்ளதுடன் சுற்றுலா வீசாவில் பெண்களை மாலைத்தீவிற்கு அனுப்பிவந்துள்ளமை   விசாரணைகள் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கடுவல நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்படடுள்ளமை குறிப்பிடத்தக்கது.