கிரிபத்கொட பிரதேசத்தில் தங்கும் விடுதி ஒன்றிற்குள் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் ஒன்று இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.  

குறித்த சடலம் வாரியாபொல, அவுலேகம பிரதேசத்தை சேர்ந்த நபருடையது என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கிரிபத்கொட நகரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்குவதற்காக வந்திருந்த இருவரில் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தற்போது சடலம் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பில் கிரிபத்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.