14 தேயிலைத் தோட்டங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு முழுமையான சம்பளம் இல்லை - செந்தில் தொண்டமான்

Published By: Digital Desk 4

15 Sep, 2022 | 04:57 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

மஸ்கெலியா பிளான்டேஷன் தேயிலை கம்பனியின் கீழ் இயங்கும் 14 தேயிலை தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு முழுமையான சம்பளம் கிடைப்பதில்லை.

இதன் காரணமாக அப்பகுதி மக்கள்  தமக்குரிய வேலைகளை செய்து கொண்டே போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் தங்களுக்குரிய வேலைகளை செய்தபோதிலும், உற்பத்தி பொருட்களை வெளியே கொண்டு செல்லவிடாமல் தங்களது முதலாளிமார்களுக்கு தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டி வருவதாகவும், தங்களுக்குரிய முழுமையான சம்பளத்தை கிடைக்கும் வரையில் இந்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான செளமிய பவனில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

"மஸ்கெலிய பிளான்டேசன் கம்பனியின் கீழ்,பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 14 தேயிலை தொழிற்சாலைக் இயங்கிவருகின்றன. கடந்த ஆறு மாதங்களாக அங்கு தொழில்புரியும் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய முழுமையான சம்பளத் தொகை கிடைப்பதில்லை.

இது குறித்து தொழில் திணைக்களத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் முறைப்பாடுகள் அளித்துள்ள போதிலும் அது குறித்து இதுவரை முறையான நடவடிக்கைகள் எடுக்காது இழுத்தடிப்பு செய்து வருகின்றனர்.

ஆகவே, இவற்றுக்கு சரியான தீர்வு கிடைக்கும் வரையில் பாதிக்கப்பட்டோர் தங்களது போராட்டங்களை முன்னெடுத்து வருவார்கள்" என்றார்.

"உணவுப் பற்றாக்குறை மற்றும் போஷாக்கு குறைப்பாடு தரவரிசையில் இலங்கை முன்னிலையில் உள்ளதாக ஐ.நா.வின் உலக உணவு திட்டம் குறிப்பிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக மலையகம் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாடு எதிர்கொண்டு வரும் பொருளாதார  நெருக்கடியில் மலையக மக்கள் தங்களது வாழ்க்கையை  கொண்டு செல்வதில் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். பொருளாதாரம், போக்குவரத்து, உணவு, போஷாக்கு ஆகியவற்றில் மலையகம் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது.

தங்களது வாழ்வாதாரத்தை அதிகரித்துக்கொள்ளவதற்கான மேலதிக சந்தர்ப்பங்கள் எதுவும் இல்லாத நிலையிலேயே அவர்கள் தங்களது வாழ்க்கையை கொண்டு செல்கின்றனர். இவ்வாறானதொரு பாரிய பின்னடைவில் இருக்கும் மக்களின் சம்பளத் தொகையை முழுமையாக கொடுக்காமல் இருப்பது தவறான விடயமாகும்" என அவர் மேலும்  தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17