பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் பூதவுடல் வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது

Published By: Digital Desk 3

15 Sep, 2022 | 12:27 PM
image

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பூதவுடல் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்துவெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் எலிசபெத் மகாராணி உடல்நல கோளாறுகளால் கடந்த 8 ஆம் திகதி தனது 96 வயதில் மரணம் அடைந்தார்.

ஸ்கொட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் அவரது உயிர் பிரிந்தது. மகாராணியின் மறைவால் ஒட்டுமொத்த பிரித்தானியாவும் சோகத்தில் மூழ்கியுள்ளது. 

அவரது இறுதி சடங்கு வருகிற 19 ஆம் திகதி லண்டனில் நடைபெறுகிறது. இதில் உலக தலைவர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். 

இதனிடையே ஸ்கொட்லாந்து தலைநகர் எடின்போராவில் வைக்கப்பட்டிருந்த மகா ராணியின் பூதவுடலுக்கு முதலில் அரச குடும்பத்தினரும், பின்னர் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். 

அதன் பின்னர் மகா ராணியின் பூதவுடல் விமானப்படை விமானம் மூலம் நேற்று முன்தினம் லண்டன் கொண்டு செல்லப்பட்டது.

அங்கு ராணியின் பூதவுடலை மன்னர் 3-ம் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர். பின்னர் மகா ராணியின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு எடுத்து செல்லப்பட்டது. 

அங்கு அரண்மனை அதிகாரிகளும், பணியாளர்களும் மகாராணிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 

இந்த நிலையில் நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 2.22 மணி அளவில் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து மகா ராணியின் பூதவுடல் பீரங்கி வண்டியில் ஏற்றப்பட்டு, துப்பாக்கி குண்டுகள் முழங்க இராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. 

அதை தொடர்ந்து மகா ராணியின் பூதவுடல் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்துக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. 

ராணியின் சவப்பெட்டியின் மீது அவரது கிரீடம் வைக்கப்பட்டிருந்தது. ஊர்வலத்தில் மகா ராணியின் பூதவுடல் வைக்கப்பட்ட சவப்பெட்டிக்கு பின்னால் மன்னர் 3-ம் சார்லஸ், அவரது மகன்களான இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரி நடந்து சென்றனர். அதேபோல் மன்னர் 3-ம் சார்லசின் உடன்பிறப்புகளான இளவரசி ஆனி, இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் இளவரசர் எட்வர்ட் ஆகியோரும் மகா ராணியின் பூதவுடல் பின்னால் நடந்து சென்றனர். 

மன்னர் 3-ம் சார்லஸ், இளவரசி ஆனி, இளவரசர்கள் எட்வர்ட் மற்றும் வில்லியம் ஆகியோர் இராணுவ உடைகளை அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர். அதே சமயம் அரச பதவிகளை துறந்த இளவரசர் ஹரியும், பாலியல் புகாரில் சிக்கி அரச பதவிகளை இழந்த இளவரசர் ஆண்ட்ரூவும் சாதாரண உடையில் பங்கேற்றனர். 

அவர்களுடன் பாரம்பரிய உடைகளை அணிந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் மகாராணியின் பூதவுடலுடன் ஊர்வலமாக சென்றனர். இந்த பிரமாண்டமான ஊர்வலத்தை பார்ப்பதற்காக பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெஸ்ட்மினிஸ்டர் மண்டபம் வரை வழிநெடுகிலும் நூற்றுக்கணகக்கான மக்கள் திரண்டிருந்தனர். மதியம் 3 மணி அளவில் ஊர்வலம் வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தை அடைந்தது. 

பின்னர் வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் மகா ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டி பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து மாலை 5 மணிக்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வெஸ்ட்மினிஸ்டர் மண்டபம் திறக்கப்பட்டது. ஆனால் மகாராணிக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் கடந்த திங்கட்கிழமை மாலையில் இருந்தே பல கி.மீ. தொலைவுக்கு நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர்.

மகா ராணியின் இறுதி சடங்கு நடைபெறுகிற வருகிற 19  ஆம் திகதி காலை 6.30 மணி வரையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் லண்டனில் குவிந்து வருகின்றனர். இதையொட்டி லண்டனில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10