மூச்சை கொண்டு ஆட்டிசத்தை அறியலாம்

Published By: Digital Desk 7

15 Sep, 2022 | 11:22 AM
image

குழந்தை பிறந்தவுடன் மூச்சின் மூலமே உயிர் உடலினுள் வருகிறது. உயிர் போய்விட்டது என்பதும் மூச்சினை வைத்தே உறுதியாகிறது.

இப்படி வாழ்க்கை என்பதே மூச்சில்தான் இருக்கிறது. அதேபோல மூச்சின் நீளத்தை வைத்தே ஒரு குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க முடியும்.

ஒரு மனிதனின் மூச்சுக்காற்றின் நீளமானது, ஒரு மலரின் நறுமணத்தை நுகரும்போதும், ஒரு அழுகிய மீனின் துர்நாற்றத்தை நுகரும்போதும் வேறுபடும். மனிதன் உள்ளிழுக்கும் மூச்சுக்காற்றின் நீளம் ஒவ்வொரு நுகர்வுக்கும் தகுந்தவாறு மாற்றமடையும்.

ஆட்டிச குறைபாடுள்ள குழந்தைகளுக்கோ இந்த மூச்சுக்காற்றின் நீளத்தில் எந்தவொரு வேறுபாடும் இல்லை.

அவர்களுடைய மூச்சின் நீளமானது நறுமணம் மற்றும் துர்நாற்றம் இரண்டுக்கும் ஒரே மாதிரிதான் இருக்கிறது என்கிறார்கள், இஸ்ரேல் விஞ்ஞானிகள்.

இந்த நுகர்வுப் பரிசோதனையில், குழந்தை எடுத்துக்கொண்ட நேரத்தின் அடிப்படையில், அந்தக் குழந்தைக்கு ஆட்டிச குறைபாடு உள்ளதா என்பது 81 சதவிகிதம் துல்லியமாக கண்டறியப்பட்டது. 

சாதாரண குழந்தைகளுக்கும் ஆட்டிச குறைபாடுள்ள குழந்தைகளுக்கும் இடையேயான மோப்பத் திறனானது பெருமளவில் வேறுபட்டிருந்தது. எந்த உரையாடலுமின்றி, அவர்களின் செயற்பாட்டிலிருந்தே ஒரு குழந்தை எந்தளவுக்கு ஆட்டிச பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்பதை 10 நிமிடங்களுக்குள் அறிய முடிந்தது என்கின்றனர், ஆய்வாளர்கள். ஆட்டிச குறைபாடு எதனால் வருகிறது என்பது பற்றிய ஆய்வுகள் தொடர்ந்துகொண்டே இருந்தாலும், இதனால் பாதிப்படையும் குழந்தைகளின் எண்ணிக்கை என்னவோ அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.

சில பெற்றோர் குழந்தைகளிடம் காணப்படும் மாற்றங்களை பெரிதுபடுத்தாமல், மெத்தனமாக இருந்துவிடுவார்கள். அது தவறு. பாதிப்படைந்த குழந்தைகளை எவ்வளவு சீக்கிரம் அடையாளம் காண்கிறோமோ, அது சிகிச்சையை விரைவில் தொடங்க உதவும் என்கிறார்கள் இவ்விஞ்ஞானிகள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29