' கபுட்டு காக்...காக்...காக்...' என வாகன ஒலி எழுப்பியதாக சட்டத்தரணிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி

Published By: Digital Desk 3

15 Sep, 2022 | 09:31 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, ஷெங்ரில்லா நட்சத்திர ஹோட்டலுக்கு முன்பாக காலி வீதியில்,  'கபுட்டு காக்...காக்..காக்..' என வாகன ஒலி எழுப்பியமையை மையப்படுத்தி  சட்டத்தரணி ஒருவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று (14) உத்தரவிட்டது.  

கொழும்பு மேலதிக நீதிவான் எஸ்.எம். பிரபாகரன் இதற்கான உத்தரவை பிறப்பித்ததுடன், பொலிஸாரின் செயற்பாடு தொடர்பில் கடுமையாக எச்சரித்தார்.

மக்கள் போராட்டத்தின் போது உயிர்நீத்த மற்றும் காயமடைந்த போராட்டக்காரர்களை நினைவுகூரும் வகையில், காலி முகத்திடலில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ள சென்றுள்ள அம்பாந்தோட்டை நீதிமன்றில் சேவையாற்றும் சட்டத்தரணி துஷ்மந்த வீரரத்னவுக்கு எதிராகவே பொலிஸார் வழக்குத் தொடுத்திருந்தனர்.

வாகனத்தில் "கப்புட்டு காக்  காக்" என்ற  ஒலியை எழுப்பியதாகக் கூறி, தேவையற்ற விதத்தில் ஒலி எழுப்பியதாக  குற்றம் சுமத்தி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கடந்த  9 ஆம் திகதி   நடந்த சம்பவம் தொடர்பில், குறித்த குற்றச்சாட்டுக்காக நேற்று ( 14) கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் (போக்குவரத்து) முன் ஆஜராகுமாறு அவருக்கு கோட்டை பொலிஸாரால் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி குறித்த சட்டத்தரணி நேற்று மன்றில் ஆஜராகியிருந்தார்.

அவருக்காக ஜனாதிபதி சட்டத்தரணிகளான சரத் ஜயமான்ன, சாலிய பீரிஸ் உள்ளிட்டோருடன் சட்டத்தரணி கெளசல்ய நவரட்ன  உட்பட 50 இற்கும் அதிகமான சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராகினர்.

இதன்போது வழக்கானது கொழும்பு மேலதிக நீதவான் பிரபாகரன்  முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட சட்டத்தரணிக்காக ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன மற்றும் சாலிய பீரிஸ் ஆகியோர் வாதங்களை முன் வைத்தனர்.

தனது சேவை பெறுநர் மேல் நீதிமன்றில் இடம்பெற்ற  செயலமர்வொன்றுக்கு வந்து திரும்புகையில்,  காலி முகத்திடல் பகுதியை அண்மித்து 'வன் கோல் பேஸ்' பகுதியை தாண்டும் போது  போக்குவரத்து பொலிஸார் மறித்து 'கப்புடு காக்..காக்..காக்.. எனும் தொணியிலான ஒலி எழுப்பியமை   குற்றம் என தெரிவித்துள்ளனர்.  உயர் அதிகாரி ஒருவரின் உத்தரவு என சுட்டிக்காட்டியே, வழக்குத் தொடுக்க  ஆவணத்தில் எழுதியுள்ளார்.

போராட்டக்காரர்களை கைது செய்து, பொலிஸார் மேற்கொண்ட முறையற்ற செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே சந்தேகநபரான சட்டத்தரணி காலி முகத்திடலில் தமது காரிலிருந்து ஒலி எழுப்பியுள்ளார். 

அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்பதற்கான உரிமை அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஜன கோஷா வழக்குத் தீர்ப்பில் இது மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ளது. 

தற்போதைய ஜனாதிபதி போன்றே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் எதிர்க்கட்சியில் இருந்தபோது அரசாங்கங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  சந்தேகநபரான சட்டத்தரணிக்கு எதிராக ஒலி எழுப்பி இடையூறு விளைவித்ததாக தெரிவித்து வழக்கு தாக்கல் செய்ததன் ஊடாக உயர் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ள மக்களின் அடிப்படை உரிமையை பொலிஸார் மீறியுள்ளனர் .' என ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில்  வாதங்களை முன் வைத்தனர்.

இதனையடுத்து, உயரதிகாரி ஒருவர் சட்டத்துக்கு புறம்பாக வழங்கும் கட்டளைகளை செயற்படுத்த  அவசியம் இல்லை என பொலிஸாரிடம் சுட்டிக்காட்டிய நீதிவான், எவருக்கேனும் எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கு முன்னதாக சட்டம் தொடர்பில் ஆராய்ந்து அதன் பின்னர் வழக்கு தாக்கல் செய்யுமாறு பொலிஸாரை எச்சரித்தார். 

இதனையடுத்து குற்றம் சட்டப்பட்ட சட்டத்தரணி துஷ்மந்த வீரரத்னவை விடுதலை செய்த நீதிவான் வழக்கை தள்ளுபடி செய்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19