மண்ணெண்ணெய் விலையை குறைத்தால் மீன்களின் விலைகளை குறைக்கலாம் - அன்னராசா

Published By: Digital Desk 5

14 Sep, 2022 | 08:27 PM
image

மண்ணெண்ணை விலையினை குறைத்தால் வடக்கில் மீன் விலை குறைக்க முடியும் என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னராசா தெரிவித்தார்.

மேலும் அவர் , வடக்கு மாகாண ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்நோக்கும்பிரச்சனைகள் தொடர்பில் இன்று காலை யாழ்  மாவட்டமீனவ சம்மேளத்தின் அலுவலகத்தில் கலந்துரையாடல் இடம் பெற்றமை  தொடர்பாக விளக்கமளிக்க விரும்புகிறேன்.

இன்றைய சந்திப்பிலே மீனவர்கள் எதிர்  நோக்கும் முக்கியமாக மூன்று பிரச்சனைகளை நாங்கள் கலந்துரையாடினோம்.

தற்காலத்தில் கடற்தொழில் சமூகம் பொருளாதாரநெருக்கடிகளை எதிர் நோக்கின்றது அதேபோல இலங்கையிலே அதிகரிக்கப்பட்ட மண்ணெண்ணெய் விலையினால் கடற்தொழில் சமூகம் எப்படி பாதிக்கப்படுகின்றமை தொடர்பாகவும்.

அதே போல மன்னார் மாவட்டத்திலே மக்களுக்கு இடையூறாக காணிகள் வழங்கப்படுவதும் அல்லது அபிவிருத்தி என்ற போர்வையிலே அல்லது முதலீடு என்ற போர்வையிலே கடற்தொழில் சமூகத்திற்கு பாதகமான செயற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன அதனை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் இன்றைய கலந்துரையாடலில் நாங்கள் பேசி இருக்கின்றோம்.

வடக்கு  மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற இரண்டு லட்சம் மீனவ மக்கள் தமது வாழ்வாதாரப் பிரச்சனைகளால்  வரையறுக்கப்பட்ட பிரதேசத்தினை  கைவிட்டு போகின்ற நிலையினை நாங்கள் உணர்கின்றோம் அது ஒரு கவலைக்களிக்கின்ற விடயமாகும்.

 அதே போல வடமாகாணத்தில் இருக்கின்ற மக்கள் கடற்தொழில் சமூகத்திற்கு மண்ணெண்ணெய் கிடைக்கின்றது ஆனால் மீன் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என கவலை வெளிப்படுத்தி இருக்கின்றார்கள்.

கடந்த காலத்தில் 87 ரூபாய்க்கு எரிபொருள் விற்ற போது  தொழில் இலகுவாக செய்து  குறைந்த விலையில் மக்களுக்கு மீன் விற்ககூடியதாக இருந்தது தற்போது விலை அதிகரிப்பின ஊடாக எங்களுக்கு 20 லிட்டர் மண்ணெண்ணெய் எடுத்து தொழில் செல்வதற்கு அண்ணளவாக ஒன்பதாயிரம் ரூபாய் தேவைப்படுகின்றது ஆனால் பிடிக்கப்படுகின்ற மீன்  ஏழாயிரம் ரூபாய்வரை விற்பனை செய்யப்படுகின்றது.

நமது முதலை கூட பெற முடியாத நிலை காணப்படுகின்றது எங்களுடைய வாழ்வாதாரம் மிகவும் கவலைக்குரியதாக காணப்படுகின்றது.

இதனால் குறைந்த அளவு தொழிலாளர்கள் மாத்திரமே  தொழிலுக்கு செல்கின்றார்கள் அதிகளவான மீனவர்கள் வேறு தொழில்களில் அதிக நாட்டம் காட்டுவதை அவதானிக்க முடிகின்றது.

எமக்கு எரிபொருள் குறைந்த விலையில் பெறுவதற்கு அனைவரின்  ஒத்துழைப்பு மிக அவசியம் அந்த ஒத்துழைப்பு கிடைக்கப்பெற்றால்  எதிர்காலத்தில் மீனின் விலை குறைத்து விற்பனை செய்ய முடியும்.

இரண்டு வருடத்திற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் புயல் தாக்கத்தின் போது பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு இன்னமும் இழப்பீடு  உதவிகள் எமது மீனவர்களை சென்றடையவில்லை அந்த இழப்பீடுகள் நமக்கு கிடைக்கவில்லை.

 எனவே கடற் தொழில் சமூகத்திற்கு என்று எந்தவித இழப்பீடும்   வழங்கப்படுவில்லை  எங்களுக்கு அவை இன்னும் கைக்கு வந்து சேரவில்லை இது வடக்கு மக்களுக்கு பெரும் கவலை அளிக்கின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59