உதயநிதி ஸ்டாலினின் 'மாமன்னன்' படபிடிப்பு நிறைவு

Published By: Digital Desk 5

14 Sep, 2022 | 08:20 PM
image

தமிழ் திரையுலகின் முன்னணி திரைப்பட வெளியீட்டு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸின் உரிமையாளரும், நடிகரும், தமிழக சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் தயாராகி வரும் 'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'மாமன்னன்'. இதில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இவர்களுடன் வைகைப்புயல் வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு 'இசை புயல்' ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

சேலம், சென்னை உள்ளிட்ட இடங்களில் மூன்று கட்டங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பின் இறுதி நாளன்று படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடினர்.

படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதால் விரைவில் பின்னணி பணிகள் தொடங்கவிருக்கிறது. இதனை தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் ட்ராக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'சைக்கோ', 'நெஞ்சுக்கு நீதி' ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் 'மாமன்னன்' படத்திற்கு ரசிகர்களிடத்திலும், திரையுலக வணிகர்களிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35