தமிழ் மக்களின் நலன்கருதி முடிவு 

26 Dec, 2015 | 10:06 AM
image

எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னுக்கும் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ர­னுக்கும் இடையில் நடை­பெற்ற அவ­சர சந்­திப்பில் தமிழ் மக்­களின் நலன்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டே முடி­வுகள் எடுக்­கப்­ப­டு­மென இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்­ள­தோடு இரு ­த­ரப்­பி­ன­ருக்­கு­மி­டையில் தொடர்ந்தும் பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொள்­வ­தெ­ன வும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

கொழும்பு பம்­ப­லப்­பிட்டி இசி­பத்­தான வீதி­யி­லுள்ள ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி கன­க­ஈஸ்­வ­ரனின் இல்­லத்தில் இச்­சந்­திப்பு இடம்­பெற்­றது. மாலை 4.30க்கு ஆரம்­ப­மான இச்­சந்­திப்பு இரவு 7.30 மணி வரையில் நீடித்திருந்தது.

இச்­சந்­திப்பு குறித்து எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் கேச­ரிக்கு தெரி­விக்­கையில்,

சந்­திப்பு நடந்­த­தென்­பது உண்­மையே. நாம் பேச­வேண்­டிய பல விட­யங்கள் குறித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினோம். அனைத்து விட­யங்கள் குறித்தும் விரி­வாக ஆராய்ந்தோம். இப்­பேச்­சு­வார்த்தை சுமூ­க­மாக நடை­பெற்­றி­ருந்­தது. எம்மால் எடுக்­கப்­படும் தீர்­மா­னங்கள் அனைத்தும் தமிழ் மக்­களின் நலன்­களை அடிப்­ப­டை­யாக வைத்தே எடுக்­கப்­படும் என்றார்.

இதே­வேளை குறித்த சந்­திப்பு தொடர்­பாக வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஷ்­வரன் தெரி­விக்­கையில்,

எனக்கும் கூட்­மைப்பின் தலைவர் சம்­பந்­த­னுக்கும் இடை­யி­லான சந்­திப்­பொன்றை கன­க­ஈஸ்­வரன் ஏற்­பாடு செய்­தி­ருந்தார். எம்­மி­டையே நீண்ட தொடர்­பாடல் இடை­வௌி­யொன்று ஏற்­பட்­டி­ருந்­தது. இதனால் என்ன நடை­பெ­று­கின்­ற­தென்­பதே தெரி­யா­தி­ருந்­தது.

அவ்­வா­றான நிலையில் நாம் பல விட­யங்கள் குறித்து கலந்­து­ரை­யா­டினோம். மக்­க­ளு­டைய நலன்கள் மீது கரி­ச­னை­கொண்டு அதன் அடிப்­ப­டையில் தீர்­மா­னங்கள் எடுக்­கப்­பட்டு செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­மாயின் இவ்­வா­றான பிரச்­சி­னைகள் ஏற்­ப­டாது என்­ப­துள்ள பல­வி­ட­யங்­களை விரி­வாக ஆராய்ந்தோம்.

நடை­பெற்று நிறை­வ­டைந்­தி­ருந்த தேர்­தலில் நடு­நி­லமை வகித்­தமை தொடர்­பான சம்­பந்தன் தனது கருத்­துக்­களை தெரி­வித்­தி­ருந்தார். அதே­போன்ற அந்த முடிவை எடுத்­த­மைக்­கான காரணம் மற்றும் எனது செயற்­பா­டுகள் குறித்த எனது கருத்­துக்­களை நான் வௌியிட்­டி­ருந்தேன்.

எம் இரு­வ­ருக்­கி­டையில் பல விட­யங்கள் பேசப்­ப­ட­வேண்­டி­யி­ருக்­கின்­றது. இன்­றைய(நேற்­றைய) பேச்­சு­வார்த்தை சுமு­க­மாக நடை­பெற்­றி­ருந்­தது. எதிர்­வரும் நாட்­களில் நான் தொடர்ந்­தும்­பேச்­சு­வார்­தை­களை முன்­னெ­டுக்­க­வுள்ளோம் என்றார்.

முன்­ன­தாக பெப்­ர­வரி மாதம் 10ஆம் திகதி வடக்கு மாகாண சபையில் இனப்­ப­டு­கொலை தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­ட­தை­ய­டுத்து வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ருக்கும் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலைமை உள்­ளிட்ட முக்­கி­யஸ்­தர்­க­ளுக்­கு­மி­டையில் கருத்து வேறு­பா­டுகள் சில ஏற்­பட்­டன. அத­னைத்­தொ­டர்ந்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் மரு­ம­கனும் பாது­காப்பு இரா­ஜங்க அமைச்­ச­ரு­மான ருவான் விஜ­ய­வர்த்­தன வட­மா­கா­ணத்­திற்கு விஜயம் மேற்­கொண்டு தெரி­வித்த கருத்­துக்­க­ளுக்கு முத­ல­மைச்சர் வௌியிட்­டி­ருந்த பதில் கருத்­துக்­களும் முரண்­பாட்டு நிலை­மை­களை ஏற்­பட்­டி­ருந்­தன.

அத­னைத்­தொ­டர்ந்த காலத்தில் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர்­களை தெற்­கிற்கு அழைத்து நிதி­வ­ழங்­கப்­பட்­ட­தாக முத­ல­மைச்சர் வௌியிட்ட கருத்­துக்­களும் சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தன. இத்­த­கை­ய­நி­லையில் மத்­திய ஆசிய விவ­கா­ரங்­க­ளுக்கு பொறுப்­பான அமெ­ரிக்க உதவி இரா­ஜங்கச் செய­லாளர் நிஷா­தேசாய் பிஷ்வால் இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்­த­போது தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­பினை சந்­தி­ருந்தார். இதன்­போது வடக்கு முதல்­வரும் சந்­திப்பில் பங்­கேற்­றி­ருந்­த­தோடு எந்­த­வி­த­மான கருத்­து­களை அவ­ரி­டத்தில் முன்­வைக்­கா­த­போதும் ஆவ­ண­மொன்றை கைய­ளித்­தி­ருந்தார்.

அத­னைத்­தொ­டர்ந்து வடக்கு மாகாண சபையில் செப்­டம்பர் முதலாம் திகதி சர்­வ­தேச விசா­ரணை அவ­சியம் என்­பதை வலி­யுத்தி தீர்­மா­ன­மொன்றை முன்­வைத்த வட­மா­காண முத­ல­மைச்சர் ஏக­ம­தா­கவும் நிறை­வேற்­றி­ய­தோடு அவ­ரது உரையில் சர்­வ­தேச விசா­ரணை பிரே­ர­ணையை முன்­வைப்­ப­தற்­கான கார­ணத்­தையும் அது­தொ­டர்­பி­லான யாதார்த்த நிலை­மை­க­ளையும் வௌியிட்­டி­ருந்தார். இவ்­வி­ட­யமும் இரு தரப்­பி­ன­ரி­டை­யே­யான இடை­வௌியை அதி­க­ரிக்­கச்­செய்­தது.

அவ்­வா­றா­ன­தொரு தரு­ணத்தில் பொதுத்­தேர்தல் அறிப்பு விடுக்­கப்­பட்­டது. தேர்­தல்­கா­லத்­தின்­போது வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஷ்­வரன் நடு­நி­லைமை வகிக்­கப்­போ­வ­தாக அறி­வித்­தி­ருந்தார். இவ்­வ­றிப்­பா­னது தமி­ழ­ர­சுக்­கட்­சி­யி­னரை அதி­ருப்­திப்­ப­டுத்­தி­யி­ருந்­தது. அத்­துடன் வடக்கு முதல்வர் அக்­கா­லப்­ப­கு­தியில் தேர்­தலில் மக்­களை தௌிவு­ப­டுத்தும் வகையில் வௌியிட்­டி­ருந்த ஊடக அறிக்­கையும் அவ்­வ­தி­ருப்­தியை மேலும் அதி­க­ரிக்­கச்­செய்­தி­ருந்­தது. இவ்­வா­றான நிலையில் தேர்தல் நிறை­வ­டைந்­ததும் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் கூட்­டத்தில் வடக்கு முதல்­வ­ருக்கு எதி­ராக பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

வடக்கு முதல்வர் சி.வி.யிடம் விளக்­கம்­கோ­ரப்­ப­ட­வேண்டும் என கட்­சித்­த­லை­மை­யிடம் கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் இவ்­வி­ட­யத்தை பொறு­மை­யாக தான் கையாள்­வ­தாக பொறுப்­பேற்­றுக்­கொண்டார். எனினும் இரா.சம்­பந்தன் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ராக பத­வி­யேற்று யாழ்.மாவட்­டத்­திற்குச் சென்­றி­ருந்­த­போதும் வடக்கு முதல்­வரை சந்­தி­ருக்­க­வில்லை.

அத­னைத்­தொ­டர்ந்த காலப்­ப­கு­தியில் இவ்­வா­றாக முரண்­பாட்டு நிலை­மைகள் தொடர்­பாக சம்­பந்­த­னுடன் தான் கலந்­து­ரை­யா­ட­வுள்­ள­தா­கவும் அதற்­கான நிலை­மைகள் ஏற்­ப­ட­வில்­லை­யெ­னவும் நான் நானா­க­வே­இ­ருக்க விரும்­பு­வ­தா­கவும் வடக்கு முதல்வர் செவ்­வி­யொன்றில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

அதன் பின்­ன­ரான காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் கூட்­ட­மைப்பின் பார­ளு­மன்றக் குழுக்­களின் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தீர்­மா­னத்­திற்கு எதி­ராக வடக்கு முதல்வர் செயற்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் மீது நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டு­மெ­னவும் தலை­மை­யிடம் கோரி­ய­மாக வௌிநாட்டு ஊட­க­மொன்­றுக்கு வழங்­கிய செவ்­வியில் வௌியிட்ட கருத்­துக்­களால் பல்­வேறு சர்ச்­சைகள் எழுந்­தன.

தொடர்ந்து அர­சியல் கைதிகள் விடு­தலை உள்­ளிட்ட அர­சியல் செயற்­பா­டு­களில் வடக்கு முதல்­வ­ருக்கும் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலைவர் உள்­ளிட்ட சில உறுப்­பி­னர்­களும் வெவ்­வே­றாக செயற்­பட ஆரம்­பித்­தனர். அத்­துடன் வடக்கு மாகாண சபையில் முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஷ்­வ­ர­னுக்கு எதி­ரான நம்­பிக்கை இல்­லாத்­தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் தக­வல்கள் வௌியா­ன­தோடு சில உறுப்­பி­னர்­களும் முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரான போக்கை கொண்­டி­ருந்­தனர்.

குறிப்­பாக வடக்கு முதல்வர் கடும்­போக்­கா­ள­ரா­கவும் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்ந்தன் மென்­போக்­கை­யும்­கொண்­டி­ருப்­ப­தாக தென்­னி­லங்கை அர­சியல் சக்­திகள் கருத்­துக்­களை பகி­ரங்­க­மாக வௌியிட்­டி­ருந்­தன. இத்­த­கைய நிலையில் வடக்கு முதல்வர், கூட்­ட­மைப்பின் தலைவர், பங்­காளிக் கட்­சித்­த­லை­வர்கள், வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஒருங்கிணைப்பு குழு கூட்டமொன்றை நடத்துவதற்கான முயற்சிகள் இடம்பெற்றுவந்தன.

அவ்வாறிருக்கையில் தமிழ்மக்களின் நலன்களைப் பாதுகாப்பதையும் வலியுறுத்துவதையும் நோக்காகக் கொண்டும் கடந்த சனிக்கிழமை தமிழ் மக்கள் பேரவை வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வைத்திய நிபுணர் பு.லக்ஷ்மன், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத்தின் செயலாளர்.ரி. வசந்தராஜா ஆகியோரை இணைத் தலைமையாகவும் மதத் தலைவர்களையும் தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களையும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் உறுப்பினர்களாகவும் கொண்டு அங்குராட்பணம் செய்யப்பட்டது.

இந்நிலையில் கூட்டமைப்பு பிளவுபட்டு விட்டதாக பரவலான கருத்துக்கள் எழுந்தன. இதனையடுத்தே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஷ்வரன் ஆகியோருக்கு இடையில் இச்சந்திப்பு அவசரமாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04