(ரொபட் அன்டனி)

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் விவகாரம் குறித்த கோப் அறிக்கை சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த என்ன செய்யவேண்டும் என்பதனை சட்டமா அதிபரே தீர்மானிக்கவேண்டும்  அமைச்சர்  என்று  லக்ஷ்மன் கிரியெல்ல  தெரிவித்தார்.  

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு  இன்று பாராளுமன்ற கட்டத் தொகுதியில்  நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சரிடம்  ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அமைச்சர் அங்கு மேலும்   குறிப்பிடுகையில்:-

கேள்வி:- அர்ஜுன மகேந்திரன் விவகாரம் தொடர்பான கோப் குழுவின் அறிக்கைக்கு என்ன நடந்தது?

பதில்:- அதனை   சட்டமா  அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பியிருக்கின்றோம்.   சட்டமா அதிபர் திணைக்களமே அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதை  தீர்மானிக்கவேண்டும். நாங்கள் அதற்காக   காத்திருக்கின்றோம். 

கேள்வி:- எவ்வளவு காலம் எடுக்கும்?

பதில்:- இரண்டு மாதங்கள் எடுக்கலாம்  கடந்த மஹிந்த ராஜபக்ஷ  அரசாங்கத்தில் 30 கோப் அறிக்கைககள்  வெளிவந்தன. ஆனால் எந்த அறிக்கை தொடர்பிலும்  நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் எமது அரசாங்கத்தின் முதலாவது அறிக்கைக்கு  நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.