(ரொபட் அன்டனி)

நாட்டில் மத ரீதியாகவும் இனரீதியாகவும் விரிசல்களையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்தி நாட்டை அழிவுக்குட்படுத்துவதற்கு சில சக்திகள்  சதி முயற்சிகளில்  ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் அரசாங்கம்   அவதானம் செலுத்தியுள்ளது.

 இது தொடர்பில் அரசாங்கம்  மிகவும் கவனமாகவும் பொறுப்புடனும் செயற்பட்டு வருகின்றது என்பதை நாட்டு மக்களுக்கு   அறிவிக்கின்றோம் என்று இணை அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க  தெரிவித்தார். 

தேசிய நல்லிணக்க செயற்பாடுகளை குழப்பும்  இவ்வாறான சில சக்திகளின் சதி முயற்சிகள் தொடர்பில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும்  முழு அரசாங்கத்தினரும் அவதானத்துடன் இருக்கின்றனர் எனவும்  அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று பாராளுமன்ற கட்டத் தொகுதியில்  நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து  வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.