நாட்டு மக்கள் கடுமையாக விமர்சிக்கும் தரப்பினருடன் ஒன்றிணைய முடியாது - உதய கம்மன்பில

Published By: Digital Desk 3

13 Sep, 2022 | 10:07 AM
image

(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்றத்தினால் இரத்து செய்யப்படும் அல்லது அனுமதி வழங்கப்படாத சட்டமூலத்தை பொதுசன அபிப்ராயத்துடன் நிறைவேற்றும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது. நாட்டு மக்கள் கடுமையாக விமர்சிக்கும் தரப்பினருடன் ஒன்றிணைய முடியாது என பிரதான எதிர்க்கட்சிகள் கைவிரித்துள்ளதால் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் நோக்கம் இல்லாமல் போய்விட்டது என பிவிதுறு ஹெல உருமய அமைப்பின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

ராஜபக்ஷர்களுக்கு நாட்டு மக்கள் மத்தியில் இன்னும் நன்மதிப்பு உள்ளது என சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார். அவர் காணும் கனவிற்கு எம்மால் தடை விதிக்க முடியாது. குப்பை அகற்றும் பணியை சாகர காரியவசம் சிறப்பாக ஆற்றுகிறார் எனவும் விமர்சித்தார்.

கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய அமைப்பின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும்  ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,

கேள்வி – தேர்தல் முறைமை மாற்றம் குறித்து பொதுசன அபிப்ராயத்தை கோருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.பாராளுமன்றத்திற்கு புறம்பாக ஜனாதிபதியால் செயற்பட முடியுமா ?

பதில் - இந்த கேள்வியை நீங்கள் ஜனாதிபதியிடமே வினவ வேண்டும். பாராளுமன்றத்தின் அனுமதியுடனேயே சகல சட்டங்களும் இயற்றப்படுகின்றன. மக்கள் வாக்கெடுப்பை நடத்தினால் மாத்திரம் சட்டத்தை இயற்றிக்கொள்ள முடியாது.

பாராளுமன்றத்தினால் இரத்து செய்யப்படும் சட்ட மூலத்தை மக்கள் வாக்கெடுப்புடன் சட்டமாக்கும் அதிகாரம் ஒருசில மேற்குலக நாடுகளில் காணப்படுகிறது. எமது நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றினால் இரத்து செய்யப்படும்

சட்டமூலத்தை,பொதுசன வாக்கெடுப்பின் ஊடாக இயற்றும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது.தேர்தல் முறைமை மறுசீரமைப்பு தொடர்பில் நாட்டு மக்களின் அபிப்ராயத்தை கோர பொதுசன வாக்கெடுப்பை நடத்தி அதனை தொடர்ந்து சட்டத்தை இயற்ற முடியும் என ஜனாதிபதிக்கு தவறான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கேள்வி -  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களாணையை கோர தயாராகவே உள்ளார்.தங்களின் தரப்பினர் தற்போது தேர்தலுக்கு செல்ல தயாரா?

பதில் - அரசியலமைப்பின் பிரகாரம மாகாண சபை தேர்தல் உரிய காலத்திற்கு இடம்பெற்றிருக்க வேண்டும்.தேர்தல் முறைமையில் ஏற்பட்டுள்ள சட்ட சிக்கலினால் மாகாண சபை காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.எதிர்வரும் மார்ச் மாதம் சட்டத்தின் பிரகாரம் உள்ளுராட்சிமன்ற தேர்தல் நிச்சயம் நடத்தப்பட வேண்டும்.

எத்தேர்தலுக்கும் நாங்கள் தயாராகவே உள்ளோம். இருப்பினும் தற்போதைய சூழல் தேர்தலை நடத்துவதற்கு சாதகமானதல்ல, தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் நாட்டு மக்களுக்கு நிவாரனம் வழங்கி வாக்குளை பெற்றுக்கொள்கிறார்கள். பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள பின்னணியில் ஒரு தரப்பினரால் நிவாரணம் வழங்கப்படும் போது மக்களின் அரசியல் ரீதியிலான தீர்மானம் முறையற்றதாக அமையும்.

கேள்வி - 38 இராஜாங்க அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சுக்கான சம்பளத்தை பெற்றுக்கொள்ள போவதில்லை என குறிப்பிடுகிறார்கள்.உணமையில் இராஜாங்க அமைச்சருக்கும்,அமைச்சரவை அமைச்சர்களுக்கும் மாத சம்பளம் எவ்வளவு ?

பதில் - இராஜாங்க அமைச்சருக்கு மாத சம்பளம் 65ஆயிரம் ரூபா,அமைச்சரவை அமைச்சருக்கு மாத சம்பளம் 54 ஆயிரம் ரூபா இருப்பினும் சம்பளத்தை காட்டிலும் ஏனைய கொடுப்பனவுகள் அதிகமாகும்.

கேள்வி – பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிடுகிறார்.ராஜபக்ஷர்கள் மீது ஊழல் மோசடி கிடையாது என்று இது தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில் - சாகர காரியவசம் 2020ஆம் ஆண்டுக்கு முன்னர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.மக்களின் ஆதரவுடன் பாராளுமன்றத்துக்கு தெரிவாக முடியாது என தெரிந்துக் கொண்டு பஷில் ராஜபக்ஷவுக்கு புகழ்பாடி,தவறுகளை மூடி மறைத்து தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்துக்கு தெரிவானார். ஆகவே அவர் ராஜபக்ஷர்களுக்கு தொடர்ந்து புகழ்பாடுவது ஆச்சரியமற்றது. அத்துடன் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தனக்கு வழங்கப்பட்ட குப்பை அகற்றும் பணியை சிறந்த முறையில் ஆற்றுகிறார்.

கேள்வி - ராஜபக்ஷர்கள் மீது நாட்டு மக்களுக்கு இன்னும் நன்மதிப்பு உள்ளது என சாகர காரியவசம் குறிப்பிடுகிறார் ?

பதில் - கனவு காண தடை விதிக்க முடியாது. ஆகவே சாகர காரியவசத்தின் கனவிற்கு எம்மால் தடை விதிக்க முடியாது.

கேள்வி –சர்வக்கட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்படுமா ?

பதில் - நாட்டு மக்களால் கடுமையாக விமர்சிக்கப்படும தரப்பினருடன் ஒன்றிணைய முடியாது என பிரதான எதிர்க்கட்சிகள் மறுப்பு தெரிவித்துள்ளதால் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் நோக்கம் இல்லாமல் போய்விட்டது.

நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு அவதானம் செலுத்துவதை காட்டிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் உள்ளக பிரச்சினைகளுக்கு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு நியமனம் ஊடாக தீர்வு காண அதிக அவதானம் செலுத்தியுள்ளார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 20:53:02
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03