இலங்கை - நேபாள அணிகள் மோதும் அரை இறுதிப் போட்டி இன்று

Published By: Vishnu

12 Sep, 2022 | 03:42 PM
image

(நெவில் அன்தனி)

மாலைதீவுகளை 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிகொண்டதன் மூலம் 17 வயதுக்குட்பட்ட தெற்காசிய கால்பந்தாட்டப் போட்டியின் அரை இறுதியில் விளையாட தகதிபெற்ற இலங்கை, இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் நேபாளத்தை இன்று திங்கட்கிழமை (12) எதிர்கொள்ளவுள்ளது.

இப் போட்டி கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் இரவு 8.00 மணிக்கு மின்னொளியில் ஆரம்பமாகவுள்ளது.

9 வருடங்களுக்கு முன்னர் 16 வயதுக்குட்பட்ட தெற்காசிய கால்பந்தாட்டப் போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்ட இப் போட்டி இந்த வருடத்திலிருந்து 17 வயதுக்குட்பட்ட போட்டியாக நடத்தப்படுகிறது. இதற்கு முன்னர் சகல போட்டிகளிலும் முதல் சுற்றுடன் வெளியேறிய இலங்கை இந்த வருடம்தான் முதல் தடவையாக அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.

அதுவும் கனிஷ்ட அல்லது சிரேஷ்ட மட்டத்தில் மாலைதீவுகளை 16 வருடங்களின் பின்னர் வெற்றிகொண்டதன் மூலமே அரை இறுதியில் விளையாட இலங்கை தகுதிபெற்றுள்ளது.

இதற்கு முன்னர் 2006இல் நடைபெற்ற தெற்காசிய விளiயாட்டு விழாவில் மாலைதீவுகளை இலங்கை (23 வயதின் கீழ்) வெற்றிகொண்டிருந்தது. எனினும் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்த இலங்கை வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி அடைந்தது.

இந்த வருட 17 வயதுக்குட்பட்ட போட்டியில் இலங்கை ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் ஏ குழுவில் 2ஆம் இடத்தைப் பெற்றது. 2 போட்டிகளிலும் வெற்றிபெற்ற பங்களாதேஷ் முதலாம் இடத்தைப் பெற்றது.

பங்ளாதேஷிடம் 1 - 5 என படுதோல்வி அடைந்த இலங்கை, மாலைதீவுகளுடனான  2ஆவது போட்டியில் மொஹமத் முபாஸ் போட்ட கோலின்மூலம் வெற்றிபெற்றது.

மறுபுறத்தில் பூட்டான் (2 - 1), இந்தியா (3 - 1) ஆகிய அணிகளை பி குழுவில் வெற்றிகொண்ட நேபாளதை இலங்கை வெற்றிகொள்வது இலகுவான காரியமல்ல. இன்றைய போட்டியில் இன்னும் அதிகமான பிரயாசையுடன் இலங்கை விளையாடுவது அவசியமாகும்.

இது இவ்வாறிருக்க, பங்களாதேஷுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான முதலாவது அரை இறுதிப் போட்டி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இலங்கையையும் (5 - 1), மாலைதீவுகளையும் (5 - 0) என்ற கோல்கள் கணக்கில் இலகுவாக வெற்றிகொண்ட பங்களாதேஷ் இன்றைய போட்டியிலும் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பூட்டானை 3 - 0 என வெற்றகொண்ட இந்தியா, இன்றைய போட்டியில் திருப்பத்தை ஏற்படுத்தி வெற்றிபெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35