டயலொக் பாடசாலைகள் றக்பி லீக் சம்பியன் பட்டத்தை வென்றெடுத்தது இஸிபத்தன கல்லூரி

Published By: Vishnu

12 Sep, 2022 | 11:30 AM
image

(நெவில் அன்தனி)

டயலொக் பாடசாலைகள் றக்பி லீக் சம்பியன் பட்டத்தை வென்றெடுத்த இஸிபத்தன கல்லூரி, சில வாரங்கள் இடைவெளியில் டயலொக் ஜனாதிபதி கிண்ண நொக் அவுட் போட்டிக்கான சம்பியன் பட்டத்தையும் சுவீகரித்தது.

ஹெவ்லொக் பார்க் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்ற இறுதிப் போட்டியில் புனித சூசையப்பர் கல்லூரியை 49 (7 ட்ரைகள், 4 கொன்வேர்ஷன்கள், 2 பெனல்டிகள்) - 22 (3 ட்ரைகள், 2 கொன்வேர்ஷன்கள், ஒரு பெனல்டி) என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் இஸிபத்தன வெற்றிபெற்று 6 வருடங்களின் பின்னர் ஜனாதிபதி கிண்ணத்தை கைப்பற்றியது.

இந்த வருட பாடசாலைகள் றக்பி போட்டியில் தோல்வி அடையாத ஒரே ஒரு அணியான இஸிபத்தன, ஜனாதிபதி கிண்ணத்தை வெல்லக்கூடிய அணியாக முன்கூட்டியே அனுமானிக்கப்பட்டிருந்தது.

அதற்கேற்ப போட்டியின் முதலாவது பகுதியில்  ஆதிக்கம் செலுத்திய இஸிபத்தன, இடைவேளையின்போது 27 - 0 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை அடைந்தது.

அப் பகுதியில் அணித் தலைவர் தஹான் விக்ரமஆராச்சி, நவீன் கனிஷ்க, வெனுர கோதாகொட ஆகியோர் ட்ரைகளை வைத்தனர்.

அவற்றுக்கான மேலதிகப் புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்த மலித் மிகார, 2 பெனல்டி புள்ளிகளையும் பெற்றுக்கொடுத்தார்.

இடைவேளையின் பின்னர் இரண்டு அணியினரும் சம அளவில் மோதிக்கொண்டதால் ஆட்டத்தில் சூடுபிடிக்கத் தொடங்கியது.

அப் பகுதியில் இரண்டு அணிகளும் தலா 22 புள்ளிகளைப் பெற்றபோதிலும் முதலாவது பகுதியில் பெற்ற 27 புள்ளிகளுடன் இஸிபத்தன ஒட்டுமொத்த நிலையில் 49 - 22 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று சம்பியனானது.

இரண்டாவது பகுதியில் இஸிபத்தன சார்பாக பிரவீன் ஸ்டீவன் (2), செஹந்து டி கொஸ்டா, தரிந்து வேவெல்பண்டித்த ஆகியோர் ட்ரைகளை வைத்தனர்.

அவற்றில் ஒரு ட்ரைக்கான மேலதிப் புள்ளிகளை ரினேஷ் சில்வா பெற்றுக்கொடுக்க, மலித் மிஹிசர ஒரு பெனல்டி புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்தார்.

புனித சூசையப்பர் சார்பாக நவீன் மாரசிங்க (2), சச்சின்தன வித்யான ஆகியோர் ட்ரை புள்ளிகளையும் டில்ஹார சுபாஷ் 2 கொன்வேர்ஷன் புள்ளிகளையும் ருச்சிர ரொட்றிகோ ஒரு பெனல்டி புள்ளிகளையும் பெற்றனர்.

பாடசாலைகள் றக்பி போட்டிக்கு பூரண அனுசரணை வழங்கும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமம் சார்பாக அதன் சந்தைப்படுத்தல் - குறியீடு மற்றும் ஊடகப் பிரிவின் சிரேஷ்ட பொது முகாமையாளர் ஹர்ஷ சமரநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றிக்கிண்ணத்தை இஸிபத்தன அணித் தலைவர் தஹான் நித்தின விக்ரமஆராச்சி, உதவி அணித் தலைவர் பிரவீன் ஸ்டீவன் ஆகியோரிடம் வழங்கினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31