அரியணையை அலங்கரித்த மகாராணியின் அமைதியான மறைவு

Published By: Vishnu

10 Sep, 2022 | 01:35 PM
image

பிரிட்டனின் நீண்டகால முடியாட்சியை நடத்தி வந்த ராணி இரண்டாம் எலிசபெத், 70 ஆண்டுகள் ஆளுகைக்குப் பிறகு, 96 வயதில் காலமானார். வியாழக்கிழமை ராணியின் உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து, அவரது குடும்பத்தினர் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் எஸ்டேட்டில்  அவசரமாக கூடினர்.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மகாராணியில் உடல்நிலை ஆரோக்கியமாக இல்லை என்று தகவல்கள் வெளியாகின. உடல்நிலை மோசமான நிலையில் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்துவந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். பால்மோர இல்லத்தில் அவர் உயிர் பிரிந்தமையை பக்கிங்ஹாம் அரண்மனை உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது. அவரின் மரணத்தை அடுத்து, உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மகாராணி எலிசபெத்தின் உடல்நிலை அவ்வப்போது தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வந்தது. இதனால் அவர் மருத்துவ கண்காணிப்பில் இருந்தார். ஆனால் அவர் அரச விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். பிரிட்டன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ் ட்ரஸ், மகாராணியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தார்.

1952 ஆண்டில் அரியணைக்கு வந்த மகாராணி, மிகப்பெரிய சமூக மாற்றத்தை தன் வாழ்நாளில் கண்டவர் என்று உலக தலைவர்கள் குறிப்பிடுகின்றனர்.

1874 ஆண்டில் பிறந்த வின்ஸ்டன் சர்ச்சில் தொடங்கி 101 ஆண்டுகளுக்குப் பிறகு 1975 இல் பிறந்த லிஸ் டிரஸ்  புதிய பிரதமராக நியமிக்கும்வரை 15 பிரதமர்களை கண்டுள்ளார்.  தமது ஆட்சிக்காலம் முழுவதும் பிரதமருடன் வாராந்திர சந்திப்புகளை இரண்டாம் எலிசபெத் மகாராணி நடத்தி வந்துள்ளார்.

லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில், ராணியின் உடல்நிலை குறித்த அறிவிப்புகளுக்காகக் காத்திருந்த மக்கள், அவரது மரணத்தைக் கேள்விப்பட்டதும் சோகத்தில் அழத் தொடங்கினர். அரண்மனையின் உச்சியில் இருந்த யூனியன் கொடி பிரிட்டன் உள்ளூர் நேரப்படி மாலை 6.30 மணிக்கு அரைக்கம்பத்தில் இறக்கப்பட்டது.

எலிசபெத்  மகாராணி லண்டனில் உள்ள மேஃபேரில் 1926ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி பிறந்தார். அவர் எதிர்காலத்தில் ராணியாவார் என்று யாரும் கணிக்கவில்லை. ஆனால், அமெரிக்கரான வாலிஸ் சிம்ப்சனை மணந்துகொள்வதற்காக 1936ம் ஆண்டு டிசம்பரில் அரியணையை விட்டு எலிசபெத்தின் பெரியப்பா எட்டாம் எட்வர்ட் அரசர் விலகினார்.

இதையடுத்து எலிசபெத்தின் தந்தை ஆறாம் ஜார்ஜ் மன்னர் ஆனார். இதன் மூலம் அரியணை வாரிசு ஆனார் எலிசபெத். குடும்பத்துக்குள் லிலிபெட் என்று அழைக்கப்பட்ட எலிசபெத்துக்கு அப்போது 10 வயது.

மூன்றாண்டு காலத்தில் ஜெர்மனியுடன் பிரிட்டன் போரில் ஈடுபட்டது. போர்க் காலத்தில் இளவரசி எலிசபெத் மற்றும் அவரது இளைய சகோதரி இளவரசி மார்கரெட் ஆகிய இருவரையும் கனடாவுக்கு அனுப்பிவிடலாம் என்ற யோசனையை அவர்களது பெற்றோர் நிராகரித்தனர். இதையடுத்து, அவர்கள் இருவரும் பெரும்பாலான நேரத்தை விண்ட்சர் கோட்டையிலேயே கழித்தனர்.

18 வயது ஆன பிறகு, துணை பிராந்திய சேவையில் 5 மாதங்கள் ஈடுப்பட்டார். அப்போது அடிப்படையான மோட்டார் வாகன ஓட்டுதல் உள்ளிட்ட திறன்களைப் பெற்றார். துன்பக் காலத்தில் மலரும் சக மனிதர்களிடையிலான நேயத்தையும் பரஸ்பர பெருமித உணர்வையும் தாம் அப்போது உணர்ந்ததாக' பிற்காலத்தில் எலிசபெத் மகாராணி  நினைவுகூர்ந்திருந்தார்.

போர்க் காலத்தில் தமது மூன்றாம் நிலை உறவினரான கிரீஸ் இளவரசர் பிலிப்புடன் எலிசபெத் கடிதப் பரிமாற்றம் செய்துகொண்டிருந்தார். அவர்களுக்கிடையிலான காதல் 1947 நவம்பர் 20ம் திகதி திருமண  பந்தத்தில் இணைத்தது. இதன் பின்னர் பிலிப் எடின்பரோ கோமகன் பட்டத்தைப் பெற்றார்.

2021ம் ஆண்டு தமது 99வது வயதில் பிலிப் இறப்பதற்கு முன்பாக, தங்களது 74 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு அவரே தமது வலிமை என்று  கூறியிருந்தார். இந்த தம்பதியின் முதல் மகன் சார்ல்ஸ் 1948ல் பிறந்தார். பிறகு 1950ல் இளவரசி ஆன் பிறந்தார். இளவரசர் ஆண்ட்ரூ 1960ல் பிறந்தார். இளவரசர் எட்வர்ட் 1964ல் பிறந்தார்.

இந்த நால்வரும் தங்கள் பெற்றோருக்கு 8 பேரக் குழந்தைகளை அளித்தனர். பிறகு 12 கொள்ளுப் பேரப்பிள்ளைகள் பிறந்தன. நோய்வாய்ப்பட்டிருந்த தமது தந்தைக்குப் பதிலாக இளவரசி எலிசபெத்தும் அவரது கணவர் இளவரசர் ஃபிலிப்பும் 1952ம் ஆண்டு கென்யா சென்றிருந்தபோது, அரசர் இறந்த செய்தியை ஃபிலிப் எலிசபெத்திடம் கூறினார். இதையடுத்து புதிய அரசியாகி, உடனடியாக அவர் லண்டன் திரும்பினார்.

1953, ஜுன் 2ம் திகதி ராணியாக எலிசபெத் முடிசூட்டிக்கொண்டார்;. தொலைக்காட்சி மூலமாக இந்த நிகழ்வை 2 கோடி பேர் பார்த்ததாக மதிப்பிடப்பட்டது. அடுத்தடுத்த பத்தாண்டுகளில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன. வெளிநாடுகளில் பிரிட்டீஷ் பேரரசு முடிவுக்கு வந்தது. உள்நாட்டிலும் 60களில் தீவிர சமூக மாற்றங்கள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48