இயக்குநர் பிருந்தாவின் 'தக்ஸ்' பர்ஸ்ட் லுக் வெளியீடு

Published By: Vishnu

09 Sep, 2022 | 02:14 PM
image

'ஹே சினாமிகா' எனும் திரைப்படத்தை தொடர்ந்து நடன இயக்குநரும், திரைப்பட இயக்குநருமான மாஸ்டர் பிருந்தா இயக்கத்தில் தயாராகும் 'தக்ஸ்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸின் வாரிசும், 'க்ராஷ் கோர்ஸ்' எனும் வலைதள தொடரில் நடித்த நடிகருமான ஹிர்து ஹாரூன் 'குமரி மாவட்டத்தின் தக்ஸ்' எனும் இந்த படத்தின் மூலம் தமிழில் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார்.

இவருக்கு ஜோடியாக நடிகை அனஸ்வரா ராஜன் நடித்திருக்கிறார். இவர்களுடன் சிம்ஹா, ஆர். கே. சுரேஷ், முனீஸ் காந்த், ரம்யா சங்கர், அப்பாணி சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ப்ரயேஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். 

ஆக்சன் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இளம் தயாரிப்பாளர் ரியா ஷிபு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு செய்யப்பட்டு, இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தற்போது இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் கதாபாத்திரங்களின் அறிமுகமும் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டிருக்கிறது. கதாபாத்திரத்தின் அறிமுகத்திற்காக வெளியிடப்பட்டிருக்கும் காணொளி இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. 

'தக்ஸ்' என்றால் குண்டர்கள் என்று பொருள். 'குமரி மாவட்டத்தின் தக்ஸ்' என்ற பெயரில் தயாராகியிருப்பதால், கன்னியாகுமரி மாவட்ட பின்னணியில், அங்குள்ள குண்டர்களின் வாழ்வியலை மையப்படுத்திய ஆக்சன் திரைப்படமாக உருவாகியிருக்கிறது.

 தயாரிப்பாளரின் மகன் நாயகன் என்பதால் இந்தப் படத்திற்கு கூடுதலாக செலவு செய்து தயாராகி இருக்கிறது. இதனால் இந்த படத்திற்கு வழக்கமானதை விட கூடுதலான எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37