ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் 8 வருடங்களின் பின்னர் மீண்டும் இலங்கை - பாகிஸ்தான்

Published By: Vishnu

09 Sep, 2022 | 10:53 AM
image

(நெவில் அன்தனி)

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக புதன்கிழமை நடைபெற்ற ஆசிய கிண்ண சுப்பர் 4 போட்டியின் கடைசி ஓவரில் ஒரு விக்கெட்டால் பரபரப்பான வெற்றியை ஈட்டிய பாகிஸ்தான், இறுதிப் போட்டியில் இலங்கையை எதிர்த்தாடவுள்ளது.

ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் 8 வருடங்களின் பின்னர் இலங்கையும் பாகிஸ்தானும் மீண்டும் சந்திக்கவுள்ளமை விசேட அம்சமாகும். 

ஆசிய கிண்ண இறுதிப் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு மின்னொளியில் நடைபெறவுள்ளது.

இந்த இரண்டு அணிகளும் 2014ஆம் ஆண்டு பங்களாதேஷில் இறுதிப் போட்டியில் சந்தித்துக்கொண்ட போது 5 விக்கெட்களால் வெற்றியீட்டிய இலங்கை ஆசிய கிண்ணத்தை 5ஆவது தடவையாக சுவிகரித்திருந்தது.

50 ஓவர் கிரிக்கெட் வகையிலேயே இலங்கை 5 தடவைகளும் ஆசிய சம்பியனாகியிருந்தது.

2014ஆம் ஆண்டு 50 ஓவர் ஆசிய கிண்ணத்தை வென்றெடுத்த இலங்கை, அதே பங்களாதேஷ் மண்ணில் ஒரு மாதம் கடந்து இந்தியாவை 6 விக்கெட்களால் வெற்றிகொண்டு இருபது 20 உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடமும் ஆசிய கிண்ணத்தையும் உலகக் கிண்ணத்தையும் சுவீகரித்து இலங்கை வரலாறு படைக்கும் என இலங்கை இரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஐக்கிய இராச்சியத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஆசிய கிண்ண (இ20) கிரிக்கெட் போட்டியில் முதல் சுற்றில் முற்றிலும் எதிர்பாராத விதமாக ஆரம்பப் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்த இலங்கை, 2ஆவது போட்டியில் பங்களாதேஷை 2 விக்கெட்களால் வெற்றிகொண்டு சுப்பர் 4 சுற்றில் விளையாட தகுதிபெற்றது.

சுப்பர் 4 சுற்றில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய இலங்கை, ஆப்கானிஸ்தானை 4 விக்கெட்களாலும் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தரவரிசையில் முதல் நிலை அணியான இந்தியாவை 6 விக்கெட்களாலும் வெற்றிகொண்டது.

பாகிஸ்தானை சுப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில்.இலங்கை இன்றைய தினம் (9) சந்திக்கவுள்ளது. இந்தப் போட்டியின் முடிவு இரண்டு அணிகளுக்கும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது போதிலும் இரண்டு அணிகளுக்கும் ஒத்திகை இறுதி ஆட்டமாக இது அமையவுள்ளது.

எனவே இரண்டு அணிகளும் தத்தமது பலத்தையும் பலவினத்தையும் இன்றைய போட்டியில் பரீட்சிக்கவுள்ளன.

இப் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெறுவதால் நாணய சுழற்சி முக்கிய பங்காற்றும் என நம்பப்படுகிறது.

இந்த சுற்றுப் போட்டியில் இலங்கை துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் (155 ஓட்டங்கள் - 2 அரைச் சதங்கள்), பெத்தும் நிஸ்ஸன்க (110 ஓட்டங்கள் - ஒரு அரைச் சதம்), பானுக்க ராஜபக்ஷ (96 ஓட்டங்கள்), அணித் தலைவர் தசுன் ஷானக்க (88 ஓட்டங்கள்) ஆகியோர் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

அவர்கள் இன்றைய போட்டியிலும் இறுதிப் போட்டியிலும் இலங்கை வெற்றிபெறுவதற்கு துடுப்பாட்டத்தில் பெரும் பங்காற்றுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய கிண்ணத்தின் மூலம் சர்வதேச இருபது 20இல் அறிமுகமான டில்ஷான் மதுஷன்க 6 விக்கெட்களைக் கைப்பற்றி முன்னிலையில் இருக்கிறார். சாமிக்க கருணாரட்ன 4 விக்கெட்களையும் மஹீஷ் தீக்ஷன, வனிந்து ஹசரங்க டி சில்வா ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.

இந்த வீரர்களுடன் ஏனைய இலங்கை வீரர்களும் தங்களது அதிகப்பட்ச ஆற்றல்களை வெளிப்படுத்தி கடைசி இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தானை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை சுவீகரிப்பார்கள் என இரசிகர்கள் பெரிதும் எதர்பார்க்கின்றனர்.

எவ்வாறாயினும் பாகிஸ்தான் அணியிலும் அதிசிறந்த வீரர்கள் இருக்கின்றனர்.

இந்த சுற்றுப் போட்டியில் அபாராமாகத் துடுப்பெடுத்தாடி வரும் மொஹமத் ரிஸ்வான் 2 அரைச் சதங்களுடன் 212 ஓட்டங்களை மொத்தமாக பெற்று முன்னிலையில் இருக்கிறார். இதன் மூலம் சர்வதேச இருபது 20 துடுப்பாட்ட வரிசையில் பாபர் அஸாமை பின்தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அவருக்கு அடுத்ததாக பக்கார் ஸமான் 129 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 83 ஓட்டங்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் பக்கார் ஸமான் (8 விக்கெட்கள்). ஷதாப் கான் (7 விக்கெட்கள்), நசீம் ஷா (6 விக்கெட்கள்) ஆகியோர் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35