''மல்லி'' சாணக்கியனின் இலங்கை தமிழரசுக்கட்சி தமிழ்மக்களைப் பிடித்த ''தரித்திரம்'' - பிள்ளையான் ஆவேசம்

Published By: Vishnu

08 Sep, 2022 | 10:05 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்  கட்சி மட்டக்களப்பு தமிழ் மக்களின் சாபக்கேடு என்றால் ''மல்லி'' சாணக்கியனின் இலங்கை தமிழரசுக்கட்சி தமிழ்மக்களைப் பிடித்த ''தரித்திரம்''என தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 08 ஆம் திகதி இடம்பெற்ற சமூக பாதுகாப்பு உதவுத் தொகை அறவீட்டுச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவி்க்கையில்,

எனது சக எம்.பி.யான ''மல்லி''சாணக்கியன் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியையும் என்னுடைய பெயரையும் இழுத்துப்பேசி இருந்தார். ''மல்லி''சாணக்கியனுக்கு இதற்கு பதில் கொடுக்க நான் விரும்பாது விட்டாலும் கூட ''பிள்ளையான் ஏன் அமைதியாக  இருக்கின்றார்'' என எனக்கு வாக்களித்த பெருவாரியான மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கேட்பதனால் நான்  அவருக்கு பதில் வழங்க வேண்டியுள்ளது.

இந்த நாட்டை அழிக்க , ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆயுதம் ஏந்த  அடித்தளமிட்டவர்கள் இலங்கை தமிழரசுக்கட்சியினர். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்  கட்சி மட்டக்களப்பு தமிழ் மக்களின் சாபக்கேடு என  ''மல்லி''சாணக்கியன் '' கூறியிருந்தார். அவருக்கு தெரியுமோ தெரியாது அவரின் பாட்டனார் ''மட்டக்களப்பு மாவட்டத்திலே  பாலம் கட்ட வேண்டாம் சிங்களவன் வந்து விடுவான், கிராமங்களிலே குளம் அமைக்க வேண்டாம் சிங்களவன் குடியேறி விடுவான்''''உங்கள் பிள்ளைகளுக்கு சிங்களம் கற்பிக்க வேண்டாம் தனியே தமில் மட்டும் கற்பித்தால் போதும் ''என்று கிராமம் கிராமமாக போய் முழங்கியவர்.

அப்படி முழங்கி விட்டு ஈற்றிலே அவரின் வாரிசுகள் ஆங்கிலமும் சிங்களமும் மட்டுமே நன்றாக பேசுகின்றனர் படிக்கின்றனர். இந்த சபையிலே சிங்கள பத்திரிக்கையை அழகாகவாசித்த சாணக்கியனுக்கு வீரகேசரி பத்திரிக்கையை படிக்க முடியாத நிலையை உருவாக்கி சென்றுள்ளார்.  இது உங்களின் கட்சிக்காரர் செய்த  சாபக்கேடு.

வட்டுக்கோட்டை தீர்மானம் எத்தகைய இரத்தக்களரியை ஏற்படுத்தியது என்பதனை நீங்கள் மறந்து விடக்கூடாது. கிழக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வடக்கில் போய் போராட, அங்கிருந்து 5 இலட்சம் 10 இலட்சம் பேர் வெளிநாடுகளுக்கு போய் வாழ்கின்றபோது இரண்டாவது தலைமுறையை நீங்கள்  போய் நோர்வேயிலும் ஐரோப்பாவிலும் சந்தித்துவிட்டு அவர்கள் உங்களுக்கு நிதி தருவார்களாம் என்று கூறுகிறீர்கள்.

தமிழரசுக்கட்சிக்காரர்களுக்கு  நான் சவால் விடுகின்றேன். உங்களினால் முடிந்தால் கிழக்கு மாகாணத்திலே உங்களோடு பேசியவர்களைக்கொண்டு 500 பேருக்கு வேலைவாய்ப்புக்கொடுத்தால் நீங்கள் சொல்வதனைக்  கேட்பதற்கு நான் தயார். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் செய்த அபிவிருத்திகளையா சாபக்கேடு என்று கூறுகின்றீர்கள்?

எங்களோடு சேர்ந்து அரசியல் செய்து, ராஜபக்ஷ் குடும்பத்தோடு நெருக்கமாக பழகி விட்டு இன்று வெல்வதற்காக தமிழரசுக்கட்சியில் சரணாகதி அடைந்து மேட்டுக்குடி தலைவர்களோடு  யாழ்ப்பாணம் சென்று உண்டு மகிழ்ந்துவிட்டு இன்று எங்களை கைகாட்டிப்பேச உங்களுக்கு என்ன அருகதை இருக்கின்றது?. எமது கட்சியின் தேசிய மாநாட்டுக்கு யாரை அழைக்க வேண்டும் யாரை அழைக்கக்கூடாது என்பது எங்களது தீர்மானம். உங்களின் கட்சியின் தலைவர் யார்? பொருளாளர் யார்? எதுவுமே தெரியாது. 

அந்தக்கட்சியிலிருக்கும் ''மல்லி''சாணக்கியனுக்கு பிள்ளையான் பற்றியோ பிள்ளையானின் கட்சி பற்றியோ பேச அருகதை கிடையாது. கிழக்கு மாகாணத்தில் ஒரு தமிழனும் தனக்கான கட்சி அமைக்க வில்லை. ஆனால் நான் அமைத்தேன். வென்றாலும் தோற்றாலும் கொள்கை  மாறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01