ஆர்க்டிக் விவகாரங்களில் ரஷ்யாவுடன் கூட்டுறவை வலுப்படுத்த இந்தியா ஆர்வம் - பிரதமர் மோடி

Published By: Vishnu

08 Sep, 2022 | 03:33 PM
image

ஆர்க்டிக் விவகாரங்களில் ரஷ்யாவுடனான கூட்டாண்மையை வலுப்படுத்த இந்தியா ஆர்வமாக உள்ளது. மேலும் எரிசக்தி துறையிலும் ஒத்துழைப்புக்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கலந்துகொண்ட கிழக்குப் பொருளாதார மன்ற அமர்வில் மெய்நிகர் ஊடான உரையில்,

தொடக்கத்திலிருந்தே இராஜதந்திரம் மற்றும் கலந்துரையாடல்களின் அவசியத்தை வலியுறுத்தி வருவதாகவும் மோடி குறிப்பிட்டார். உக்ரைன் மோதல் மற்றும் மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அனைத்து அமைதியான முயற்சிகளையும் இந்தியா ஆதரிக்கிறது.

2019 ஆம் ஆண்டு நடந்த மன்ற உச்சிமாநாட்டில் பங்கேற்றதை நினைவுகூர்ந்த மோடி, அந்த நேரத்தில் இந்தியா தனது 'ஆக்ட் ஃபார் ஈஸ்ட்' கொள்கையை அறிவித்ததாகவும், அதன் விளைவாக, பல்வேறு துறைகளில் ரஷ்ய தூர கிழக்குடன் இந்தியாவின் ஒத்துழைப்பு அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்தக் கொள்கை இப்போது இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான 'சிறப்பு மற்றும் சலுகை பெற்ற மூலோபாய கூட்டுறவின்' முக்கிய தூணாக மாறியுள்ளதாகவும் கூறினார்.

விளாடிவோஸ்டாக்கில் இந்திய துணைத் தூதரகம் நிறுவப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த நகரத்தில் தூதரகத்தைத் திறந்த முதல் நாடு இந்தியா. அப்போதிருந்து, இந்த நகரம் எங்கள் உறவில் பல மைல்கற்களுக்கு சாட்சியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10