பொதுஜன பெரமுனவிற்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற தர்க்கம் செல்லுபடியற்றது - அநுரகுமார

Published By: Digital Desk 3

08 Sep, 2022 | 01:31 PM
image

(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)

பாராளுமன்ற விவாதத்தின் போது சுயாதீனமாக செயற்படும் டலஸ் அழகபெரும உள்ளிட்ட தரப்பினருக்கு உரிய காலவகாசம் வழங்கப்பட வேண்டும்.

பொதுஜன பெரமுனவிற்கு பெரும்பான்மை உள்ளது. ஆகவே நேர ஒதுக்கீட்டில் அவர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற தர்க்கம் செல்லுபடியற்றதாகும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் வியாழக்கிழமை (8) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட 13 பேருக்கு பாராளுமன்ற விவாதத்தின் போது உரையாற்ற உரிய காலவகாசம் வழங்கப்பட வேண்டும். 

பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கமைய விவாத நேர ஒதுக்கீட்டின் போது ஆளும் தரப்பினருக்கு 40 சதவீதமும்,எதிர்தரப்பினருக்கு 60 சதவீதமும் வழங்கப்படும்.

2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலை தொடர்ந்து இம்முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. பொதுஜன பெரமுன பெரும்பான்மையிலான உறுப்பினர்களை கொண்டுள்ளது.

ஆகவே ஆளும் தரப்பினருக்கு விவாதத்தின் போது அதிக நேரம் ஒதுக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டு நேர ஒதுக்கீட்டில் 60 சதவீதம் ஆளும் தரப்பினருக்கும், 40 சதவீதம் எதிர்தரப்பினருக்கும் வழங்கப்படும் வகையில் பாராளுமன்ற சம்பிரதாயம் மாற்றியமைக்கப்பட்டது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் தற்போது பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படுகிறார்கள். ஆகவே அனைவருக்கும் சமமான காலவகாசம் வழங்கப்பட வேண்டும்.

பாராளுமன்றில் பொதுஜன பெரமுனவிற்கு அதிக பெரும்பான்மை உள்ளது. ஆகவே விவாதத்தின் போது அவர்களுக்கு அதிக நேரம் ஒதுக்கப்பட வேண்டும் என்ற தர்க்கம் இனி செல்லுப்படியற்றதாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24