மில்லியன் கணக்கான வறிய இலங்கையர்களினால் போதியளவு உணவினை பெற முடியாதுள்ளது ; ஜோன் அய்லிப்

Published By: Digital Desk 3

08 Sep, 2022 | 12:48 PM
image

மில்லியன்கணக்கானவறிய இலங்கையர்கள் இனிமேலும் போதியளவுஉணவினைபெறமுடியாதுள்ளது. அடுத்துவரும் வாரங்களில் இந்தநிலைமேலும் மோசமடையும் என  நாம் அஞ்சுகின்றோம்” எனஅய்லிப் தெரிவித்தார்.

“இதன் காரணமாக  உலக உணவுத்திட்டத்தின்  பிரதிபலிப்புமிகவும் முக்கியமானதாகின்றது. பெண்கள் மற்றும் சிறுவர்களைஎமதுபிரதான இலக்காகக் கொண்டு, வாழ்க்கையைகாக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து உதவியுடன் குடும்பங்களை சென்றடைவது எமது முன்னுரிமையாகும் என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட உலக உணவுத் திட்டத்தின்  ஆசியமற்றும் பசுபிக் பிராந்தியப் பணிப்பாளர் ஜோன் அய்லிப்  அறிவித்துள்ளார்.  

இலங்கை வந்த உலகஉணவுத் திட்டத்தின்  ஆசியமற்றும் பசுபிக் பிராந்தியப் பணிப்பாளர்  பிரதமர்   தினேஷ் குணவர்தன,வெளிவிவகாரஅமைச்சர் அலிசப்ரி ஆகியோரை சந்தித்த அய்லிப், இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதற்கான உடனடி முன்னுரிமைகள் குறித்து கலந்துரையாடினார். திறைசேரியின் பிரதிச் செயலாளர் ஆர்.எம்.பி. ரத்னாயக்கவையும் அவர்சந்தித்தார்.  அத்துடன் மக்களையும் சந்தித்பேச்சு நடத்தினார்.  

இது தொடர்பில கொழும்பில் உள்ள உலகஉணவுத் திட்ட அலுவலகம் விடுத்துள்ளஅறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது 

மில்லியன் கணக்கான இலங்கையர்களைஉணவுப் பாதுகாப்பின்மைக்குள் தள்ளியுள்ள எதிர்பாராத பொருளாதாரநெருக்கடியின் மத்தியில், ஐக்கியநாடுகளின் உலக உணவுத் திட்டம் ஈடுபட்டுள்ள அவசரகால செயற்பாடுகள் தொடர்பாக இலங்கைக்கான இரண்டுநாள் விஜயத்தை ஐக்கியநாடுகளின் உலக உணவுத் திட்டத்தின்  ஆசியமற்றும் பசுபிக் பிராந்தியப் பணிப்பாளர் ஜோன் அய்லிப் நிறைவுசெய்தார்.

இலங்கையில் பட்டினி என்பது அதிகரிப்பதா அண்மைய ஆய்வுதெரிவிக்கின்றது. வருமான இழப்பு, வரலாறுகாணாத உணவுபணவீக்கம், உணவுப் பொருட்களின் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடங்கல் மற்றும் எரிபொருள் உள்ளடங்கலாக அடிப்படைப் பொருட்களுக்கான கடும் பற்றாக்குறை என்பவற்றின் மத்தியில் நேர்காணப்பட்ட குடும்பங்களில் அரைப்பங்கிலானவை உணவினை அணுகுவதில் சவாலை எதிர்கொண்டுள்ளன.

“மில்லியன்கணக்கானவறிய இலங்கையர்கள் இனிமேலும் போதியளவு உணவினை பெறமுடியாதுள்ளது. அடுத்துவரும் வாரங்களில் இந்தநிலை மேலும் மோசமடையும் என நாம் அஞ்சுகின்றோம்” எனஅய்லிப் தெரிவித்தார். “இதன் காரணமாக  உலக உணவுத்திட்டத்தின்  பிரதிபலிப்பு மிகவும் முக்கியமானதாகின்றது. பெண்கள் மற்றும் சிறுவர்களை எமது பிரதான இலக்காகக் கொண்டு, வாழ்க்கையைகாக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து உதவியுடன் குடும்பங்களை சென்றடைவது எமது முன்னுரிமையாகும்” என அவர் மேலும் கூறினார்.

நெருக்கடியை எதிர்கொள்வதற்கு ஐந்தில் நான்கு குடும்பங்கள் உட்கொள்ளும் உணவின் அளவை குறைக்கின்றன மற்றும் உணவுவேளைகளைத் தவிர்க்கின்றன. நகர்ப்புற குடும்பங்கள் இதில் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21