சம்பிக்க உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கின் சாட்சி விசாரணை ஒத்திவைப்பு

Published By: Digital Desk 4

08 Sep, 2022 | 06:15 AM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

இராஜகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் ஒன்றினை மையப்படுத்தி முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள உதவி பொலிஸ் அத்தியட்சர் சுதத் அஸ்மடல, சம்பிக்கவின் சாரதி திலும் குமார  ஆகியோருக்கு எதிரக தொடரப்பட்டுள்ள வழக்கின்  சாட்சி விசாரணைகளை  எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம்  திகதி  ஆரம்பிப்பதாக கொழும்பு மேல் நீதிமன்றம்  இன்று ( 7) அறிவித்தது.

இந்த வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த முன்னிலையில்  இன்று விசாரணைக்கு வந்த போதே இவ்வாறு திகதி குறிக்கப்பட்டது.

 வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போது , முதல் பிரதிவாதியான பாட்டலி சம்பிக்க ரணவக்க  சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன,  தனது சேவை பெறுநர்  இன்று (7)  பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள வேண்டி உள்ளதால் சாட்சி விசாரணைகளை பிரிதொரு தினத்தில் நடாத்த உத்தரவிடுமாறு கோரினார்.

 இந்த கோரிக்கை தொடர்பில் வழக்குத் தொடுநர்  சட்ட மா அதிபர் திணைக்களத்தின்  சார்பில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்  எதிர்ப்புகள் எதனையும் முன் வைக்காத போதும், இந்த வழக்கின் சாட்சி விசாரணைகள் பல காரணங்களால் பல தடவைகள்  ஒத்தி வைக்கப்ப்ட்டுள்ள நிலையில், மிக கிட்டிய திகதியொன்றில் மீள விசாரணைக்கு அழைக்குமாறு கோரினார்.

எனவே விரைவில் வழக்கு விசாரணையை ஆரம்பிப்பதற்கு திகதியொன்றை அறிவிக்குமாறும்  அவர் கோரினார்.

இதன்போது திறந்த மன்றில்  கருத்து வெளியிட்ட நீதிபதி தமித் தொட்டவத்த, தனது நீதிமன்றம் முன் விசாரணைக்கு வரும் எந்த வழக்கையும் தான் விரைவாக  விசாரித்து முடிக்க வேண்டும் எனும் கொல்கையில் இருப்பதாக குறிப்பிட்டார். தனக்கு எல்லா வழக்கும் ஒரே மாதிரியானது என சுட்டிக்காட்டிய அவர், எந்த வழக்கையும் விஷேட வழக்காக கருதவில்லை என குறிப்பிட்டார்.

  தனது நடவடிக்கை தொடர்பில்  திருப்தி இல்லையாயின் பிரதம நீதியரசருக்கு தன்னை இடமாற்றம் செய்யும் அதிகாரம் இருப்பதாக தெரிவித்த நீதிபதி தமித் தொட்டவத்த,  இந்த வழக்கின் விசாரணைகளுக்கு இரு தரப்பிடமிருந்தும்  திகதிகளைக் கோரினார்.

 அதன்படி ஒக்டோபர் 10 மர்றும் 27 ஆம்  திகதிகளில் வழக்கை விசாரிக்க நீதிபதி முடிவு செய்தார்.

இந் நிலையிலேயே , வழக்கு விசாரணை ஒக்டோபர் மாதம் 10மற்றும் 27 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்தது.

வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ராஜகிரிய பகுதியில், கடந்த 2016 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர்  பாட்டலி சம்பிக்க ரணவக்க பயணித்த வாகனம் விபத்திற்குள்ளானதில் சந்தீப் சம்பத் எனும் இளைஞர் ஒருவர் காயமடைந்த விவகாரத்தில்,  சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிராக சட்ட மா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள  குற்றப் பத்திரிகை தொடர்பிலான வழக்கே இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டது.

கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி  வெலிக்கடை பொலிஸ் பிரிவில் டப்ளியூ.பி.கே.பி. 4575 எனும் ஜீப் வண்டியின் சாரதியாக செயற்பட்டு  அபாயகரமாக வாகனம் செலுத்தி ஒருவரை படுகாயத்துக்கு உட்படுத்தியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அந்த விபத்து இடம்பெற்ற காலப்ப்குதியில் வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக செயற்பட்ட தற்போது பணி இடை நிறுத்தம் செய்யப்ப்ட்டுள்ள உதவி பொலிஸ்  அத்தியட்சர் சுதத் அஸ்மடல, சம்பிக்கவின் சாரதியாக  செயற்பட்ட  திலும் துஷித குமார ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு இந்த குற்றப் பத்திரகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59