இலங்கை அணியின் அர்ப்பணிப்பான வெற்றி பாராளுமன்றத்துக்கு சிறந்த பாடமாகும் - இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்

Published By: Digital Desk 4

07 Sep, 2022 | 05:18 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

இலங்கை கிரிக்கெட் அணியின் வெற்றி பிரச்சினைகளுக்கு மத்தியில் இருக்கும் எமக்கு மன அமைதியை ஏற்படுத்தி இருக்கின்றது.

ஒரு அணியாக இருந்து போட்டியை வெற்றிகொள்ள அர்ப்பணிப்புடன் அவர்கள் செயற்பட்ட விதம் பாராளுமன்றத்தில் இருக்கும் அனைவருக்கும் சிறந்த பாடமாகும்.

அத்துடன் யுனிசெப் நிறுவனத்தின் அறிக்கையின் பிரகாரம் சிறுவர் தாய்மார் மந்தபோசணை நிலைமையை கட்டுப்படுத்த தவறினால் பாரிய பிரச்சினைக்கு முகம்கொடுக்க வெண்டி ஏற்படும் என எதிர்க்கட்சி உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (7) இடம்பெற்ற பிள்ளைகள் தாய்மாரின் மந்தபோசணை தொடர்பாக யுனிசெப் நிறுவனம் விடுத்திருக்கும் அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு  உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்

யுனிசெப் நிறுவனத்தின் அறிக்கையின் பிரகாரம் 5 வயதுக்கு குறைந்த சிறுவர்களின் மந்தபோசணை நிலையில் இலங்கை உலகில் 6 ஆவது இடத்திலும் தெற்காசியாவில் 2ஆவது இடத்திலும் இருக்கின்றது.

இந்த நிலைமையை கட்டுப்படுத்த நாடு என்றவகையில் நாங்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் எமது நாட்டின் எதிர்காலம் பாரிய பிரச்சினைக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும்.

அதனால் இதனை கட்டுப்படுத்த குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்களை மேற்கொள்வதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அத்துடன் உலக உணவு வேலைத்திட்டம் விடுத்திருக்கும் அறிக்கையில், இலங்கையில்  ஒருநேர உணவு பெற்றுக்கொள்ள கஷ்டப்படும் 34 இலட்சம் பேருக்கு உதவுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருக்கின்றது.

அத்துடன் எமது சனத்தொகையில் 5இலட்சம்பேர் வறுமைகோட்டின் கீழ் இருப்பதாக உலக வங்கி அறிவித்திருக்கின்றது. அதனால் மந்தபாசணைக்கு ஆளாகி இருக்கும் சிறுவர் மற்றும் தாய்மாரை அதில் இருந்து மீட்பது எமக்கு இருக்கும் பாரிய சவாலாகும். அதேநேரம் ஏனையவர்கள் இந்த நிலைக்கு தள்ளப்படாமல் பாதுகாப்பது நாங்கள் எதிர்னோக்கியுள்ள அடுத்த சவாலாகும்.

எனவே நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியே இதற்கு காரணமாகும். அதனால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண்பதே எமது முதலாவது நடவடிக்கையாக இருக்கவேண்டும். அதற்கு நாங்கள் அனைவரும் இணைந்து செயற்படவேண்டும்.

குறிப்பாக இலங்கை கிறிக்கெட் அணி நேற்று இடம்பெற்ற ஆசிய கிண்ண போட்டியில் வெற்றிபெற, அந்த அணியின் தலைவர் உட்பட வீரர்களின் அப்பணிப்பு மற்றும் உறுதியான தீர்மானங்களாகும். அதனால் எமது இளம் கிறிக்கெட் அணி செயற்பட்ட விதம் பாராளுமன்றத்தில் இருக்கும் அனைவருக்கும் சிறந்த பாடமாகும். அவர்களை முன்மாதியாகக்கொண்டு பிரச்சினகைளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08